சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திரயான்2019 செப்டம்பரில் விண்சிமிழ்முதன்முதல் இறக்கும் தளவுளவி , தளவூர்தி.பாரத விண்வெளித் தீரர் மூவர் இயக்கும்சீரான விண்கப்பல் 2022 இல்தாரணி சுற்றி வரும் !செவ்வாய்க் கோள் […]
‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி யந்த வீணைவெளிக்குள் சென்றவர்கள் உள்ளிருந்து உருகிப்பாடுவது அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அல்லது வீணைவெளியிலிருந்து அவர்கள் விரல்களுக்குள் ஏறிக்கொண்டார்களா? அந்த அருவ சேர்ந்திசைக்காரர்களைப் பார்க்கவேண்டும்போலிருக்கிறது. இனம்புரியா நிறைவில் கனிந்தொளிரும் முகங்களில் அழகொளிர்ந்துகொண்டிருக்கிறது. அத்தனை அழகாயிருக்கிறது! வீணைத்தந்திகளின் மீது துள்ளிக்குதித்துக் களித்தும் கண்ணீர் விட்டுக் கதறியும் காலெட்டிப்போட்டுக் காலாதீதத்திற்குள் எட்டிப்பார்ப்பேன் என்று பிடிவாதம்பிடித்தும் கத்துங்கடல் முத்துகளைக் கோர்த்துக்காட்டும் கடைசிச் சொட்டு வாழ்வை கணநேரம் தரிசிக்கச் செய்யும் அமுதமே மழையெனப் பெய்யும் அந்த […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார். இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார். அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார். எல்லாமும் கவிதையாகிவிடும் இதுவிருந்தால் என்றார். இதுவும் அதுவும் எதுவுமாக ‘அல்ல’வாக்கியும் ‘நல்ல’வாக்கியும் சிலவற்றைத் தூக்கியும் சிலவற்றைத் தாக்கியும் சிலவற்றைப் புகைபோக்கிவழியே நீக்கியும் கவிதையை ஒரு மெதுவடையாக மசாலாதோசை யாக மாடர்ன் பிரட் துண்டங்கள் கலந்த சன்னா மசாலா வாக முக்கோணமாய் மடிக்கப்பட்ட சப்பாத்தியாக கேப்பங்கூழாக கொக்கோகோலாவாக Cubaவின் Mojitoவாக […]
சுரேஷ்மணியன் MA அடியேன் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போன்று படிப்பதை விட, இடது கையில் நூலைத் தாங்கி, வலக்கை நடுவிரலை நாவினில் தோய்த்து பக்கத் தாள்களை புரட்டியவாறு படிக்கிற நூல் வாசிப்பு என்பதே ஒரு வித தனி சுகானுபவம்தான், அதிலும் இலக்கிய நூல் என்றால் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்கு பெருகத்தானே செய்யும்.எல்லா காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய கருத்துக்களை தாங்கிய நீதி நூல்கள் […]