திண்ணை இணைய இதழில் நான் சிலாகித்து கட்டுரையாக எழுதிய பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ தாய் செல்வத்தின் இயக்கத்தில் சனிக்கிழமை (29.8.2015) விஜய் சித்திரத்தில் ‘மரி’ என்கிற தலைப்பில் இரண்டு மணி நேர படமாகக் காட்டப்பட்டது. கதை இதுதான்! புருசன் ஓடிப்போனபின், கடன் கொடுத்த எபினேசரே வாழ்வளிக்க முன் வர, அதை ஏற்றுக் கொள்கிறாள் அற்புத மேரி என்கிற மரியின் அம்மா. எபினேசர் மூலம் அவளுக்கு சேவியர் என்கிற மகனும் பிறக்கிறான். 18 […]
கோலெடுத்தான் குரங்காட்டி ஆடியது குரங்கு கர்ணம் போட்டது காவடி எடுத்தது தங்கச்சி பொம்மையைத் தாலாட்டியது இரண்டு கால்களால் நின்று இசைக்கு ஆடியது கைகளை ஏந்தி காசு கேட்டது குடும்பம் நடந்தது குரங்காட்டிக்கு ஒரு நாள் மனம் மாறினான் குரங்காட்டி ஒரு குரங்கால் நம் குடும்பம் நடப்பதா? வெட்கம் குரங்கை காட்டிலே விட்டு வீடு ஏகினான் பாவம் குரங்கு அதற்கு சுதந்திரம் புரியவில்லை செடிகளிடமும் சில்லரை மிருகங்களிடமும் காசு கேட்டுத் திரிகிறது. அமீதாம்மாள்