0 ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை! அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத ஒன்று. இதனாலேயே ஒரு வேலை கிடைத்தவுடன் விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறியவன் நான். ஸ்திரத் தன்மைக்கு ஏங்கும் மனதாக என் மனது ஆனதற்கு அப்பாவும் காரணம். அதற்காகவேனும் அவருக்கு நான் நன்றி சொல்ல […]
நண்பர்களே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வலர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று மீட்பு படையில் இருந்த நண்பர் ஒருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். சென்னை மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உடனடி நிவாரணமாக உணவும், தண்ணீரும் இன்ன பிறவும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சில நாட்களில் வெள்ள நீர் முற்றிலும் வடிந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும்போது, அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்கப்போவது இல்லை. குறிப்பாக கல்வி, உணவு […]
குமரி எஸ். நீலகண்டன் இரவு ஒரு மணி… மயான அமைதி… ஆம்புலன்ஸ் சப்தம்… எங்கும் நிசப்தம்… இலைகளெல்லாம் சிலைகளாய் விறைத்து நின்றன.. வாகனங்கள் முக்கி முக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.. மழை அழுது கொண்டே இருந்தது.. உண்மையை உரக்கச் சொன்னது இயற்கை…. உணவில்லை…உடையில்லை.. பணமில்லை…மதமில்லை சாதியில்லை.. பதவி இல்லை…பகட்டு இல்லை.. ஆண், பெண் பேதமில்லை… மழை தன் கத்தியால் கீறிக் குதறியது.. பூமியை பிய்த்து எறிந்து வீறாப்புடன் என்றோ இழந்த இடங்களையெல்லாம் மீட்டெடுத்தது. இயற்கையின் ருத்ர தாண்டவம்.. மழையின் […]
வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வெளியான கிட்டத்தட்ட நூறு கவிதைகளும் வெளியீடு காண்கிறது. இந்தக் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் களம் அமைத்துத் தந்த திண்ணைக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.இத்துடன் என் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். என் சார்பில் அனைவருக்கும் […]