சில நாட்கள் நமக்கானதே அல்ல என்போதுபோல் ஆகிவிடும். ஒன்றும் சரியாக நடக்காது. எல்லா வேலைகளும் நம் தலையிலேயே விழும். நம்மை எல்லோரும் அன்று நாம் ஒரு தவறும் செய்யாதிருந்தாலும் திட்டித் தீர்ப்பார்கள். அன்று மாட்டுக்கு புல் வாங்கி வரவேண்டியது என்னுடைய முறையே இல்லை. என் தம்பிதான் போகவேண்டும். ஆனால் அவனோ , காலையில் எழுந்ததிலிருந்து ரொம்பத்தான் படம் காட்டிக்கொண்டிருந்தான். பல்துலக்கி வாய் கழுவும்போது வேண்டுமென்றே விரல்களைத் தொண்டைக்குள்விட்டு அடிபட்ட நாய் அழுவதுபோல ஒரு சத்தத்தை […]
ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு! +++ சங்கீத கலாநிதி டாக்டர் எம். எல். வசந்தகுமாரி அவர்களின் மாணவியும் சென்னை அரசினர் இசைக் கல்லூரி பேராசிரியையாகப் பணியாற்றியவரு மான திருமதி டி. எம். பிரபாவதியிடம் கர்நடக சங்கீதம் கற்றதோடு இசைக் கல்லூரியிலும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வாய்ப்பாட்டு சங்கீதம் பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர் பட்டயமும் பெற்ற திருமதி ஆர். சத்தியபாமா ஸ்கைப் […]
செய்திக் குறிப்பு நூல் வெளியீட்டு விழா கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி ரொம்பக் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருந்தாள். வீட்டுச் சூழ்நிலையில் கூட நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. பரமஹம்சா அடிக்கடி வந்து கொண்டிருந்தான். நிர்மலாவிடம் வியாபார விவரங்களைச் சொல்லுவான். சாஹிதிக்கு வேண்டியதைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். ஆலோசனை வழங்குவான். சாஹிதிக்கு அவன் வருகை எப்பொழுதும் சந்தோஷத்தைத் தந்து கொண்டிருந்தது. அவன் இருந்தால் எல்லோருமாய்ச் சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். தந்தை உயிரோடு இருந்த வரையில் அப்படிப்பட்ட அனுபவமே […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
சகோதரன் என்ற சக்தி வாயந்த உறவு இருந்தும் இல்லாமல் மனம் வெறுப்படைந்த நிலையில், ஒரேயடியாக மறந்துபோன நினைவுகள் அனைத்தும் மெல்ல மெல்ல தலை தூக்கி தூக்கத்தையும், படிப்பையும் கெடுத்தது. இத்தனை நாள் இல்லாத அந்த பாசம் இன்று மட்டும் எப்படி புதிதாக வரும் என்ற கோபமே மேலிட்டது. “மாலு, மாலு என்னாச்சு.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லையா?” நெற்றியில் கை வைத்துப் பார்த்த, உடன் தங்கியிருக்கும் அறைத்தோழி ஆர்த்தி உடல் நெருப்பாய்க் காய்வதை […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நாட்களாகவே இந்த வாசுவின் தொல்லை தாங்க முடியாத வகையில் போய்க் கொண்டிருக்கிறது. சாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறானாம். அதுவும் நான் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் அவனைப் பிழைக்க வைத்திருக்கிறாராம். ஒரே பிதற்றல்தான். அவன் கொடுக்கும் தொல்லையால் தினசரி எனக்கு ஆபீஸ் போய் வருவதே பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த விஷயத்தை ராகவனிடம் சொன்னேன். அவனும் வாசுவைக் கூப்பிட்டு கண்டித்தான். ஆனாலும் வாசு அடங்கவில்லை. திண்ணை இணைய வார இதழில் செப்டம்பர் […]
பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை அவசியமெனக் கருதுகிறேன் நான் சற்று நீண்டது பகல் இன்னும் மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம் வந்த தூரமும் அதிகம் எல்லையற்றது மிதந்து அசையும் திசை இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி எனினும் கணத்துக்குக் கணம் மாறியபடியும் […]
புர்லா திரும்பியதும் மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிகையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட வேண்டியது. இதில் ஏதும் சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்ஷனுக்கு […]