வெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்: புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம் இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம் – பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம் மனித குல வரலாற்றில் அன்றும், இன்றும், என்றும் புதிய உலகம் படைக்கக் கனவு காண்பவர் ஒரு சிலர் இருந்த […]
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல பூலோக யாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டார் இறைவன் தனியாக இல்லை துணைவியுடன்தான் புறப்பட்டார் புறப்படும் முன்னர் இறைவனுக்கும் இறைவிக்கும் வாக்குவாதங்கள். கணவனின் விளையாட்டுப் புத்தியை மனைவி அறிவாள். எனவே என்ன நேரிடினும் சக்தியை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் தேவியின் வேண்டுகோள். இறைவனும் சிரித்துக் கொண்டே புறப்பட்டுவிட்டார். திருவிளையாடலில் மிகச் சிறந்தவர் ஆயிற்றே. பிரபஞ்சமே அவர் விளையாட்டில் விளைந்த ஒன்றுதான். பாம்பு அணிகளை அகற்றிவிட்டு ஜடாமுடியுடன் காவியுடையில் […]
சாமக் கோடாங்கி ரவி ——————————————- சுஜாதா அவர்கள் சுப்ரபாரதிமணியனின் “அப்பா” என்ற முதல் தொகுப்பிற்கு முன்னுரை எழுதும் போது ( 1987 ) ” சுப்ரபாரதிமணியனிடம் கவிஞர்தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளார்.” என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் ஒரிஜனல் வரிகள்: ” சுப்ரபாரதிமணியனின் தமிழ் நடையில் ஒரு கவிஞனின் பலங்களும் பலவீனங்களும் உள்ளன. மெலிதான தீற்றல் போன்ற எண்ணங்களை சொல்ல முடிவது நிறை. கணிசமான சதவிகிதத்தில் அரக்கனோ குழந்தையோ மென்மையோ நம்முள் உறைந்து போயிருப்பதை நாம் எப்போது முதல் முதலாக […]
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ உடல் உறுப்பு ஆக்கிய கவிஞன் நான் ஓர் ஆத்மீகக் கவிஞன் நான் சொர்க்கபுரி இன்பங்கள் பெற்றவன் நான் நரகத்தின் துயர்கள் உற்றவன் நான் முன்னதை என்னுள் புகுத்தி நான் உன்னத மாக்கிக் கொண்டது; பின்னதைப் புது மொழியாக நான் மொழி பெயர்த்தியது. மாதரின் கவிஞன் நான், அதுபோல் ஆடவருக்கும் கவிஞன். மாதராய்ப் […]
(போலந்து கதை) சித்ரா சிவகுமார் ஹாங்காங் ஒரு காலத்தில், போலந்து நாட்டின் கிரகாவ் நகரில், ரபி என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தன்னுடைய மனைவியுடனும் குழந்தைகளுடனும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தான். எவ்வளவு தான் சிரமங்கள் வந்த போதும், தன்னுடைய குடும்பத்தை நல்முறையில் பார்த்துக் கொள்ள உண்மையாகவும் கடினமாகவும் உழைத்து வந்தான். நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் இரவு அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவு கடவுள் தனக்குக் கொடுத்த வரம் எனறு அதிகமாக நம்பினான். […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதனை, “இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை நம்புவதுதான் சமயம் ஆகும்” என்கிறது வாழ்வியற் களஞ்சியம். அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது. இங்ஙனம் மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத […]
வெகு நேரம் அழுது கொண்டிருந்த ராகுலன் நீண்ட உடல்வாகு. நிச்சயமாய் அப்பாவைப் போலவே உயரமாக வளருவான். பணிப்பெண் ஒருத்தி சந்தடி செய்யாமல் மிக அருகில் “நாட்டியம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மகாராணி கோதமி அவர்கள் தங்களை அழைத்தார்கள்” என்றாள் மிக மெல்லிய குரலில். யசோதரா தொட்டிலை நோக்கி விரலை அசைத்ததும் குழந்தையைப் பூப்போலக் கையிலேந்தி தொட்டிலுக்கு மாற்றினாள். யசோதரா அவள் எடுத்து வந்த பட்டு மேலங்கியைத் தோளைச் சுற்றி போர்த்துக் கொண்டு நடைகளைத் தாண்டி நீராழி மண்டபத்தை […]
சமீபகால உதயங்களை மனதில் கொண்டு, தினமலரின் அங்காடிதெரு குழு அமைத்துக் கொடுத்த மேடையே ‘குறும்பட மேதை ‘ பட்டத்திற்கான போட்டி. விதையிலிருந்து தோன்றிய விருட்சங்கள் போல், குறும்பட இயக்குனர்களின், ‘பெரும்’ படங்கள் வெற்றி பெறுவதும், வரும்காலத்தில் புதிய சிந்தனைக் களங்களை கட்டி ஆளும் மன்னர்கள், இவர்களே என்பதையும் மனதில் இருத்தி, தினமலர் குழுமம் ஏற்பாடு செய்த விழாவுக்கு ஒரு சுயநலமும் உண்டு. நல்ல படங்கள் வெளிவந்தால், அதை பாராட்டும் பத்திரிக்கையும், ஏற்றம் பெறும் அல்லவா. பத்துக்கு எட்டு […]
எல்லா மொழிகளிலுமே ‘அங்கதங்களுக்கு’ ஓர் ஆயுள் வரையறை (mortality rate) உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில், ஜனாதன் ஸ்ஃப்ட் (Jonathan Swift) ’கலிவரின் பயணங்கள்’ என்று ஒரு மகத்தான சமூக அங்கத நாவலொன்று எழுதினார். அது இப்போது குழந்தைகளின் செவ்விலயல் இலக்கியமாக வாசிக்கப்பட்டு வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ஜார்ஜ ஆர்வெலின், ‘1984’, ‘விலங்குப் பண்ணை’ (Animal Form) ஆகிய இரண்டு நாவல்களுமே மனித சுபாவம் பற்றிய உளவியல் படைப்புகளாக அறியப்படுகிறனவே அன்றி, கம்யூனிசக் கோட்பாடு பற்றிய […]
ச.திருமலைராஜன் தங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள். இருவரும் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமாகி நெருக்கமானவர்கள். என் மீது மிகுந்த பிரியத்துடனும் வாஞ்சையுடனும் பழகிய பெரியவர்கள். இந்திய தேசீயத்திற்கும், இந்து மதத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் இவர்கள் இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஆம், டோண்டு ராக்வன் மறைவின் பொழுது பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்ட மடலை இரு தினங்களுக்கு முன்பாக அனுப்பியிருந்தார். […]