வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

   (Children of Adam) எத்தனைக் காலமாய்  மூடர் ஆக்கப்பட்டோம் நாமிருவரும் ?   (We Two, How Long We were Fooled) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா            எத்தனைக் காலமாய் நாமிருவரும் மூடர் ஆக்கப் பட்டோம் ? இப்போது மாற்றப் பட்டு இயற்கை விரைவில் விட்டுச் செல்வது போல் நாம் தப்பிக் கொண்டோம். நாமே இயற்கை விளைவு ! நீண்ட காலம் தெரியா […]

மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

“கல்கி” பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வரலாற்று நாவல். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசும் விருதும் பெற்ற வரலாற்றுப் புதினம்.         ஆசிரியர் குறிப்பு:                                                               […]

பூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]

This entry is part 22 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  கடல் நாகராசன் எப்பொழுதும் தேனீயைப் போல சுறுசுறுப்பாய் மிகவும் உற்சாகமாய் ஏதேனும் செய்துகொண்டே இருப்பவர். பல தலைவர்களின் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பிறந்த நாள்களைத் தவறாமல் கொண்டாடி வருபவர். அந்த விழாக்களில் மாணவர்களுக்குப் போட்டி வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருபவர். அவர் தேனீ எப்படி ஒவ்வொரு மலராகச் சென்று சென்று தேனை எடுத்து வருமோ அதேபோல பல புத்தகங்களைப் படித்து அப்புத்தகங்களில் மலர்களைப் பற்றி உள்ள தகவல்களை எல்லாம் தொகுத்து இந்நூலாக ஆக்கித் […]

ஆத்மாநாம்

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

“உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள் நீங்கள் யாரென்று சொல்லுகிறேன் என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன் நீங்கள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன் முழித்த முழி முழியையே முழுங்கும்போல நீங்கள் யாரானால் என்ன நான் யாரானால் என்ன அனாவசியக் கேள்விகள் அனாவசிய பதில்கள் எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்” ————————————————————————————- இது தான் எனக்கு கிடைத்து ஆத்மாநாமின் கவிதை என்று. இதில் தற்கொலை செய்து கொண்டது எந்த எழுத்து? தெரியவில்லை. இவை சுஜாதாக்களை அசோகமித்திரன்களை நிமிண்டியிருக்கிறது. […]

வலி

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

(தினமணி – நெய்வேலி புத்தக்கண்காட்சி – முதல்; பரிசுக் கதை – 14.07.2013_ சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி மரியாதை செலுத்திய பிறகு வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலுக்குள் ஐக்கியமாகியது. பெண்கள் ஆங்காங்கே இருந்த அறைகளில் பரவினர். நடுக்கூடத்தில் மாமியாரின் உடலருகே சூன்யத்தை வெறித்தப்படியே உட்கார்ந்திருந்தாள் புவனேஸ்வரி. திருமணமாகி வந்த நாளிலிருந்தே அதிகாரங்கள் மையப்படுத்தப்படாததால் மாமியாருடன் சொல்லிக் கொள்ளும்படியான எந்த பிணக்கும் […]

நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள் பதிகிறது. ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.. கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..’ என்ற கருத்து எதிர்மறையாகிறது. கற்றுக் கொண்ட கைத்தொழில் கண்ணெதிரே நசிந்துக் கொண்டிருக்க விட்டு செல்லவும் முடியாமல் தொட்டு தொடரவும் வழியின்றி போராட்டமாக […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்னர் துரோணாச்சாரியார் கௌரவப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். . துரோணப் பர்வத்தின் ஆரம்பப் பகுதிகளை ஸ்ரீ கிருஷ்ணர் பிரத்யேகமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல்தான் உண்டு அர்ஜுனனின் தேர் உண்டு என்று அர்ஜுனன் போகச் சொன்ன இடத்திற்கெல்லாம் தேரை ஓட்டிச் சென்றார். மகாபாரதத்தை இந்த ஒரு பகுதியை அளவுகோலாக வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் மகாபாரத யுத்தத்தை ஸ்ரீ கிருஷ்ணர்தான் தூண்டி விட்டார் என்பதும் மகாபாரதப் போர் ஸ்ரீ கிருஷ்ணர் தலைமையின் […]

ஜாக்கி 27. வெற்றி நாயகன்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

    டிரன்கன் மாஸ்டர் – குடிகார குரு படம் நம் சாகச நாயகனை வெற்றி நாயகனாக வலம் வரச் செய்தது.  அதை எல்லா வகையிலும் ஜாக்கி உணர்ந்தார்.   மக்கள் ஜாக்கியைக் கண்டதும் கையெழுத்து வாங்க ஓடினர்.  தெருவில் சிறுவர்கள் குடிகார குருவைப் போன்று நடித்துக் காட்டினர்.  செய்தித்தாள்கள் அவரைப் பற்றிய பல விசயங்களையும் எழுதின.  பல தரப்பட்ட சந்திப்புகளுக்கு அழைப்புகள் வந்தன.   கிசுகிசுகளை எழுத வேண்டி, ஜாக்கியைத் தொடர, பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனர்.  என். […]

தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது. அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன. காதுகள் அடைத்து வலித்தன. பொத்திக்கொண்டேன். வானில் பறப்பது எனக்கு முதல் அனுபவம். ஒரு நீண்ட, அகலமான, அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சொகுசாக அமர்ந்துள்ள உணர்வே உண்டானது. கொஞ்சமும் குலுங்காமல் சீராக ஒரே நிலையில் மேற்கு நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது ஏர் இந்தியா போயிங் ஜெட் விமானம். வேறு சூழ்நிலையில் […]

தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

அன்புள்ள திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.  நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளியில்) வரும் மார்ச் மாதம் 27,28- 2014 ஆகிய தேதிகளில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த உள்ளேன்.    கட்டுரையாளர்கள் கட்டுரையை எழுதி tamilinternetbdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..   மேலும் இந்த கருத்தரங்கிற்கு எந்த நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை. வரும் கட்டுரையாளர்கள் கொடுக்கும் பதிவுக்கட்டணத்தைக் கொண்டு […]