இந்த வருட2015 புத்தக கண்காட்சிக்கு எனது கட்டுரைகளின் தொகுப்பு நூல் ”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்” எனது நாதன் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது . சமூகம், இலக்கியம், சினிமா,பெண்ணியம், ஆளுமைகள் மற்றும் வாழ்வனுபவம் சார்ந்து நான் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது .விலை 120 மட்டும்
முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது. தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு […]
சிறிது அதிர்ச்சியை உண்டாக்கிய தலைப்புதான். படித்த பல கணங்களுக்குப் பின்னும் கூட அது நீடித்தது என்று சொல்லலாம். சரவண கார்த்திகேயன் தனது முதல் தொகுதிக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருப்பது ஆச்சர்யம்தான். பெங்களூருவில் கணிப் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் இவர் இந்திய நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி சந்திராயன் என்று ஒரு புத்தகமும் சாருவுடனான விவாதங்கள் தாந்தேயின் சிறுத்தை என்று இரண்டாம் நூலாகவும் வந்திருக்கின்றன. மூன்றாம் நூலான இக்கவிதைத் தொகுதி இவரது முதல் கவிதைத் தொகுதி. […]
நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம். கால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் புகுந்த நகம். […]
:- கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் இனங்கண்டு அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பதை ஜி ராஜேந்திரன் தகுந்த விளக்கங்களுடன் அளித்துள்ளார்கள். Constructive Pedagogy பற்றி ( ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறை ) கோட்பாட்டில் ஆர்வமுள்ள இவர் ஒரு ஆசிரியர், எழுத்தாளர், கற்பிக்கும் முறைகளிலும் கற்றுக்கொள்ளும் முறைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறார். அறிவு […]
அயான் ஹிர்ஸி அலி சென்ற புதன்கிழமையில் பிரெஞ்சு வாரப்பத்திரிக்கை சார்லி ஹெப்டோவில் நடந்த படுகொலைகளுக்கு பிறகாவது வன்முறைக்கும், பயங்கரவாத இஸ்லாமுக்கும் இடையேயுள்ள தொடர்பை மறுக்கும் அசட்டுத் தனத்தை மேலை நாடுகள் இறுதியாக விட்டொழிக்கலாம். இது மனநிலை சரியில்லாத, ஒற்றை நபர் செய்த படுகொலைகள் அல்ல. இறைதூதர் முகம்மது என்று தாங்கள் கருதுபவருக்கு நேர்ந்த அவமானத்தை பழி தீர்க்கிறோம் என்று அந்த படுகொலைகளை செய்தவர்கள் கத்தியதை கேட்க முடிந்தது. அது தற்செயலாக உணர்ச்சிவேகத்தில் நடந்தது அல்ல. மிக […]
. 2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் 100.:- ******************************************************* வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய தகவல்களைத் தொகுத்து தமிழில் வழங்கி இருக்கிறார் கோபி. மிக அரிய முயற்சி. இதில் நான் ஆச்சர்யப்பட்டது சர்ச்சிலின் மொழி வளம் பற்றி. மிகப் பெரும் அரசியல்வாதி என்பதைத் தவிர ஆற்றலுள்ள பேச்சாளரும் கூட என்பதையும் அரிய முடிந்தது. பலமுறை இறப்பின் விளிம்புகளைத் தொட்டவர். அரசியல் சதுரங்கத்தில் […]
-நாகரத்தினம் கிருஷ்ணா Straskrishna@gmail.com அஹமது மெராபத்தைத் தெரியுமா? என்ற கேள்வியைக் கட்டுரையாளர் யாரிடம் கேட்டிருப்பார் என்று தெரியவில்லை. அவரைக் (அஹமது மெராபத்தைக்) கொன்றவர்களிடம் கட்டுரையாளர் கேட்டிருக்கமாட்டாரென நம்பலாம். பிரெஞ்சு அரசாங்கத்திடமும் அல்லது பிரெஞ்சு மக்களிடமுமென்றால் (இஸ்லாமியர்களும் அதில் அடக்கம்.) அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு பத்திரிகை அலுவலகத் தாக்குதலில் இறந்த மற்றொரு காவல்துறை அதிகாரி பிரான்க் பிரன்சொலாரொ (Franck Brinsolaro). இவர்கள் இருவரையும் சேர்த்து பத்திரிகை அலுவலகத்தில் கொல்லப்பட்டவர்கள் பன்னிரண்டுபேர். இது தவிர மருத்துவமணையில் உயிருக்குப் […]
2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே நான் ரசித்த சிலரின் கவிதைகள் இங்கே . முதலில் ஷான் கவிதைகள். ஷானின் கவிதைகள் ஒரு குழந்தைகள் , மழை, வாழ்க்கைத்துணை பற்றிப் பேசினாலும் இணையத்தாலும் தொலைக்காட்சி போன்ற நவீனசாதனங்களாலும் நாம் அடிமைப்பட்டுப்போனதைப் […]
“சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை…” அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை ஹாலோவின் (Halloween), நன்றி தெரிவிக்கும் விழா (Thanks Giving), கருப்பு வெள்ளி (Black Friday), கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் கோலாகலமாய் இருக்கும். இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரி […]