ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள், படுக்கை, சமையல் மேடை என எல்லா இடங்களுக்கும் அவை வருகின்றன. படுத்திருப்பவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொள்வதிலோ, அல்லது படுத்திருப்பவன் மேலேயே ஏறி ஓடுவதிலோ அவற்றுக்கு கொஞ்சம்கூட தயக்கமே வரவில்லை. அந்த அளவுக்கு சுதந்திரமான எலிகள். கதையில் முழுக்கமுழுக்க அந்த எலிகளின் நடமாட்டத்தைப்பற்றிய […]
ரவி நடராஜன் வணிக நிறுவனங்களில், வேலை நீக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. பல காரணங்களுக்காகவும், வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது, என்று ’நிறுவனங்கள்’ என்ற அமைப்பு உருவானதோ, அப்பொழுதிலிருந்து நடை பெறும் ஒரு நிகழ்வு. சிறு கடையிலிருந்து ஒரு உதவியாளரை நீக்கம் செய்வதும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் ஒருவர், நீக்கப்படுவதும், இன்று நேற்றல்ல, என்றும் உள்ள ஒரு தொழிலாளர் பிரச்னை. ராசச இந்திய கணினி மென்பொருள் […]
கைபேசியின் கண்டுபிடிப்பு உலகத்தை சிறு கிராமமாக்கி விட்ட்து. அல்லது உள்ளங்கையில் உலகம் என்றாக்கிவிட்டது. அது வரமா, சாபமா என்ற விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது. கைபேசியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன இயல்புகள், வாழ்க்கை பற்றி நிறைய சொல்லப்படுகிறது.பலர் நியூட்ரான் குண்டுகள், எலக்ட்ரான் குண்டுகளின் அபாயம் என்றெல்லாம் கைபேசியை வர்ணிக்கிறார்கள். குழந்தைகள் பாடத்தைத் தவிர்த்து விட்டு கைபேசியைக் கையாளுகிறார்கள். வீட்டில் அவர்கள் இருக்கும் நேரங்களைப் பெரும்பாலும் தொலைக்காட்சி, கைபேசியுடன்தான் கழிக்கிறார்கள்.பிற தொற்று நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது போல் கைபேசியின் […]
சேயோன் யாழ்வேந்தன் 1 நினைவில்லை காலடியிலிருந்த புல்வெளி பச்சையாக இல்லை சரக்கொன்றை மரத்தில் எந்தப் பூவும் மஞ்சளாக இல்லை முள் குத்தி வழிந்த ரத்தம் சிவப்பாக இல்லை கனவுகளில் பெரும்பாலும் வண்ணங்களில்லையென்பது நினைவிலில்லை – சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com) 2 இன்னும் அவகாசம் இருக்கிறது யாரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம் அவர்கள் உங்களைக் கொல்வது கூட உங்களைக் காப்பாற்றுவதற்காக இருக்கலாம் மூன்றாம் நாள் நீங்கள் உயிர்த்தெழவில்லையெனில் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கலாம் உங்கள் உறவுகள் […]
என். செல்வராஜ் வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன. சாகித்ய அகாடமி ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி வருகிறது. அந்த விருது பற்றிய சில விமர்சனங்கள் இருந்த போதிலும் விருது தருவதையே குறை சொல்ல முடியாது. மத்திய அரசால் வழங்கப்படும் இலக்கிய […]
[ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல சான்றுகளாகக் கலைச்செல்வங்கள் இன்றும் நிலைகொண்டுள்ளன. அவை நம் நாட்டின் பழமையைக் காட்டுவதோடு நம் பண்பாட்டைக் காட்டும் ஆடிகளாக விளங்குகின்றன. அவற்றில் சில மட்டுமே இங்கு காட்டப்படுள்ளன. முதலில் நாணயங்கள் பற்றிக் காண்போம். பண்டைக் காலத்தில் […]
ப.ஜீவகாருண்யன் கதைகளையெழுத ஆரம்பித்த சில காலத்திலேயே பல பரிசுகளை வென்றவராக, பல பத்திரிக்கைகளில் கதைகள் வழங்குபவராக மேற்கொள்ளும் இலக்கியப் பயணத்தில் எழுத்தாளர் கலைச்செல்வி ‘வலி’ என்ற தலைப்பில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரராக பரிணமித்திக்கிறார். நல்ல கதைகளுக்கு நல்ல தலைப்புகள் அவசியம் என்ற அடிப்படையில் கல்யாணியும் நிலவும், கானல் மயக்கம், நீர்வழிப்பாதை, சலனம், உடலே மனமாக, அவனும் அவளும் இடைவெளிகளும், இடைவெளியின் இருண்மைகள், கனகுவின் கனவு, கரீஷ்மா பாப்பாவும் மூணு கண்ணனும் போன்ற வித்தியாசமான, செழுமையான தலைப்புகளை […]
படிக்க: http://pesaamoli.com/index_content_27.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 27வது இதழி வெளியாகிவிட்டது. இந்த இதழ் முழுக்க முழுக்க சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பற்றிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. குறிப்பாக ICAF இன் செயலாளராக இருக்கும் தங்கராஜின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. தவிர வூட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கட்டின் நேர்காணலும் மிக முக்கியமான ஒன்று. இவைகள் தவிர, திருவனந்தபுரம், பெங்களூரு, கோவா போன்ற நகரங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்கள் பற்றிய கட்டுரையும், மிக முக்கியமாக […]
முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை பாண்டியநாடு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகித்த நாடு ஆகும். பாண்டிய நாடு, சங்க காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஞான சம்பந்தப் பெருமானை அழைத்து வந்து சைவம் செழிக்க வைத்தது. தொடர்ந்து குமரகுருபரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் என்று நாளும் பக்திப் பயிர் வளர்க்கும் பகுதியாக பாண்டியநாட்டுப்பகுதி விளங்கி வருகின்றனது. பக்தியும் […]
இடம்: ஆனந்தராவ் வீடு நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ஆனந்தராவ், ரங்கையர், கங்காபாய். (சூழ்நிலை: ஆனந்தராவ் தமது அறையில் கட்டிலின் மீது படுத்திருக்கிறார். அவரைக் காண்பதற்காக, ரங்கையர் வீட்டுப் படியேறிக் கொண்டிருக்கிறார். நடை வாசலில் அவரைக் கண்டு திரும்பி எதிர் கொள்கிறாள் கங்காபாய்) கங்காபாய்: வாப்பா ரங்கா வா! ரங்கையர்: அண்ணா தூங்கிண்டிருக்காரா மன்னி? கங்காபாய்: இன்னேரமா முழிச்சுண்டு சிரமப்பட்டார். விடியக்காலமறே தான் கண் அசந்து தூங்கினார். ரங்கையர்: டாக்டர் என்ன சொன்னார்? கங்காபாய்: […]