பொம்மரிலு பாஸ்கரால் இயக்கப்பட்டு, வெற்றியடைந்த ‘ஆரஞ்ச்’, மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. வாழ்க்கை முழுதும் காதல் இருக்கும் என்று நம்பும் பெண்ணும், காதல் கொஞ்ச நாட்கள் தான் இருக்கும். பிறகு, சொல்லப்படும் பொய்களே அதன் ஆயுளை நீட்டிக்கும் என்று உணரும் ஆணும், ஆஸ்திரேலிய பின்னணியில் நடத்தும் ‘நீயாநானா’ பார்த்தவுடனே காதலிப்பதும், பொய் சொல்ல வேண்டி வந்தால், அதை முறித்துப் போடுவதுமான கொள்கை கொண்ட ராம் ( ராம் சரண் ), ஜானுவை ( ஜெனிலியா டிசோசா ) […]
இளவரசர் சித்தார்த்தனின் அரண்மனை வளாகத்தின் விருந்தினர் மாளிகைகள் கலகலப்பாக இருந்தன. யயோசதராவின் தாய் தந்தையரான கோலிய நாட்டு மகாராஜா சுப்பபுத்தாவும், மகாராணி பமீதாவும் நூற்றுக்கும் மேற்பட்ட அவர்களது உறவு மற்றும் பணியாளர்களால் மாளிகை களை கட்டி இருந்தது. மகாராணி பஜாபதி கோதமியின் பூஜை அறையிலிருந்து புறப்பட்ட மன்னர் சுத்தோதனர் நேரே விருந்தினர் மாளிகக்குச் சென்றார். ராணி பமீதா அவரை ” வாருங்கள் அண்ணா” என்று வரவேற்றார் “மன்னர் உறங்குகிறார். உங்கள் வம்ச வாரிசும் பேரனுமான ராகுலனின் வரவுக்கு […]
லலித் பிகேஜி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வருடத்துக்கு நான்கு முறை பள்ளிக்குக்கட்டணம் செலுத்தியாகவேண்டும்.இந்த மாதம் பள்ளிக்குக்கட்டணம் கட்டவேண்டிய மாதம். பத்தாம் தேதிதான் எப்போதும் அதற்குக் கடைசி நாள். இந்த மாதம் பார்த்து அது ஞாயிற்றுக்கிழமை அல்லவா வந்திருக்கிறது.ஆக கட்டணம் கட்டுவதற்குக் கடைசி நாள் அது தானாகவே அடுத்த நாள் அந்தத் திங்கள் கிழமை என்றுதானே கணக்காகும்.எந்த மாதமும் இப்படி கட்டணம் கட்டத்தாமதம் ஆனதில்லை. ஏனோ இந்த முறைதான் இப்படி த்தள்ளிகொண்டு போய்விட்டது.திங்கள் கிழமை காலை பள்ளிக்குக்கட்டணத்தை எடுத்து […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத்த ஆணாதிக்கச் சமுதாயம் தன்பாலியல்வேட்கைப் போதாமையை நிறைவு செய்ய உருவாக்கிக்கொண்டதே பரத்தமை என்னும் ஒழுக்கமாகும். செவ்விலக்கியங்கள் இப்பரத்தையரையும் அவர்தம் செயற்பாடுகளையும் தெளிவுற விளக்குகின்றது. இப்பரத்தையர்கள் போகப் பொருளாகக் கருதப்பட்டனரேயன்றி அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாகச் சமுதாயத்தால் கருதப்படவில்லை. இதனைச் செவ்விலக்கியங்கள் தெளிவுறப் […]
குழல்வேந்தன் ஆலயம் செல்வது சாலவும் நன்றாம். ஆனால் எனக்கோ? கோயில் வழிபாடு,பிரகாரம் சுற்றல், நேர்த்திக் கடன் செலுத்துதல் இவற்றிலெல்லாம் நம்பிக்கையோ ஈடுபாடோ இருப்பதில்லை. ஆனாலும் சடங்குகள், சம்பிர்தாயங்கள், பழக்க வழக்கங்கள் இவைகளிலிருந்து தம்மைக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனப் பறை சாற்றிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களால் கூட தப்பமுடிவதில்லை என்கிறபோது என்னால்மட்டும் எப்படி தப்பமுடியும்? அதிலும் நானோ? ஒருத்தர் இல்லைங்க; மத்தளம் மாதிரி ரெண்டு பேருக்குக் கட்டுப் பட்டவன். நம்ம பாரதி வேற ‘தையலரை உயர்வு செய்’ அப்படினு சொல்லி இருக்கப்போ! […]
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து தொடரை இத்துடன் முடிக்க எண்ணியிருந்தவளைத் தொடரும் தொல்லைகள் தடுத்துவிட்டன. ஆரம்பம் என்றிருந்தால் அதற்கு ஓர் முடிவும் உண்டு என்று சொல்வோம். பெண்ணின் அவல நிலைமட்டும் இன்னும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. அதற்கு ஒர் முடிவு இல்லை. டில்லி சம்பவம் எல்லோரும் அறிந்ததே. கடந்த 41 வாரங்களாக நான் எழுதி வரும் தொடரின் மையக் கருத்தும் பெண்ணின் நிலைபற்றியதே. பல உண்மைச் சம்பவங்கள் எழுதப்பட்டன.. எனவே பாலியல் கொடுமைபற்றி […]
தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர். கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர். ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1949 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் […]
அன்பினிய நண்பர்களுக்கு , 26-1-2013 அன்று புதுவையில் நடைபெறவிருக்கும் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு அழைப்பிதழை இணைத்துள் ளேன் அனைவரும் வருக. பணிவுடன் நா.கிருஷ்ணா
சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த புலப்படாத ராகத்தின் உயரத்தில் லயித்துப் பறக்கிறது மனப்பட்சி! கூப்பிய கைவிரல்களுக்கு இடையில் ஏந்திய மௌனம் துளசியின் ஈரம்பட்டு விழித்துக் கொள்கிறது ! சேவிக்கும் தாமரைக்குள்ளேதான் வாழ்வின் மகரந்தம். சொல்லிக் கொடுத்தவன் அருகில். பிரித்துக்கொடுத்தவன் எதிரில். இருந்தும் புரியாது கல்லாய் நிற்கிறேன் ! கல்லே நாம் ! கல்லே நம் ஆசான் ! கல்லே தெய்வம் […]
BEN BRANTLEY இப்போதெல்லாம், நாடகங்களுக்கு சென்றபோது மிகுந்த ஆர்வத்துடன் உங்களுடைய எதிர்வினைகளை நீங்களே கேள்வி கேள்வி கேட்டிருப்பதும், மறு சிந்தனை செய்திருப்பதும் அதிகம் இருக்காது. சுயபரிசோதனை என்னும் கலை, இப்போதெல்லாம் பழகிப்போய், அதிர்ச்சி கூட ஏற்படுத்துவதில்லை. ஆனால், பரிசோதனை நாடகங்களின் ராடார் விழாவின் கீழ் திறக்கப்பட்டுள்ள “கணேஷ் vs மூன்றாம் பேரரசு” (Ganesh Versus the Third Reich – இதில் மூன்றாம் பேரரசு என்பது ஹிட்லரின் அரசாட்சியை குறிக்கிறது) என்ற குறிப்பிடத்தகுந்த நாடகம், அதில் நடப்பதையெல்லாம் […]