எழுத்தாளர் திரு சு. வேணுகோபால் அவர்களுக்கு இந்த வருடத்திய பாரதிய பாஷா பரிஷத் விருது அவரது வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒருவருக்கு, அவரது தகுதியான புத்தகத்திற்கு இது வழங்கப்பட்டுள்ளது. எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகக் கூடிய இனிய நண்பர் அவர். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் என் சிறுகதைகளின் மீது, அக்கறை எடுத்துக் கொண்டு எப்படியான கருத்தோட்டம் மிகுமானால் அது இன்னும் தலைநிமிரும் என்பதாக விவரித்து அவர் எழுதிய நீண்ட கடிதம் அவர் […]
எந்த வேலைக்கும் போகாமல், பகட்டாக உடையணிந்து, ஊரை வலம் வரும் விதார்த். பணத்தேவைக்கு, சிறு சிறு திருட்டுகளைச் செய்து, அக்காவிடம் அடி வாங்குபவர். மூளை சரியில்லாத தங்கை. கோயில் நிலத்தைக்கூட வளைத்துப்போடும் வில்லன். புதுமுகம் சஞ்சிதா, பக்கத்து ஊர் டுடோரியல் மாணவி, விதார்த்தின் காதலி. கொட்டாவி வருகிறதா? பார்த்து பார்த்து புளித்த கதை போல இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஊகம் சரிதான். ஆனால் படம் ஏதோ பரவாயில்லை என்று ஆக்குவதற்கு இரண்டு விசயங்கள் பயன்பட்டிருக்கின்றன. ஒன்று, […]
கணினியில் தமிழை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான சிறப்பு கணினி பயிலரங்கம் அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் துபாயில் நடத்தப்படுகிறது. தமிழை கணினியில் சரளமாக எழுதுவதற்கான நுட்பங்கள், மின்னஞ்சல், செல்பேசி, முகநூல் மற்றும் பேச்சரங்கு போன்றவற்றில் தமிழை பயன்படுத்துவது எப்படி, வீட்டு கணினிகளில் தமிழ் மென்பொருட்களை சுலபமாக பொருத்துவது எப்படி என்பது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை இப்பயிலரங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், பயிலரங்கில் தமிழ் மென்பொருள்களும், தமிழ் எழுத்துருகளும் இலவசமாக வழங்கப்படும். இப்பயிலரங்கில் பங்கேற்க கட்டணம் எதுவும் […]
– கே.எஸ்.சுதாகர் சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் கனடாவில் ரொறன்ரோவில் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில், சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள். “அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்.” “அது சரி. […]
இப்போதுபோல பிரபலம் ஆகாத நிலையிலேயே எஸ்.ராமகிருஷ்ணனை நான் அறிவேன். இதற்கும் கிரியா ஊக்கி பால்நிலவன் தான். அப்போதைய இலக்கிய தேடலில் பல, எனக்கு அறிமுகமில்லாத படைப்பாளிகளை அவர் எனக்கு பரிச்சயப் படுத்தினார். அந்த வரிசையில் வந்தவர்தான் எஸ்.ரா. நாற்பதுகளைக் கடந்து ஐம்பதைத் தொட்டுக்கொண்டிருக்கும் வயதில் இருந்த அவரை நான் பார்த்தபோது பெரிதும் சிலாகிக்கவில்லை. நமக்கு எப்போதுமே ஒரு ஜெயகாந் தன் பிம்பம் முன்னேராக ஓடிக்கொண்டிருக்கும். அதன் வழியாகப் பார்க்கும்போது எதுவும் பளிச்செனப் பதியாது. வழுக்கைத் தலையை மறைக்க […]
சிறகு இரவிச்சந்திரன் ஓவியர் ஆதிமூலத்தின் புகைப்பட அட்டையுடன் வந்திருக்கிறது சுகனின் 296வது இதழ். தஞ்சையிலிருந்து தனியொருவன் முயற்சியாக வந்து கொண்டிருக்கும் இதழ். ஆசிரியர் என்று துணைவியின் பெயர் இருந்தாலும் முழு முயற்சி சுந்தரசரவணன் தான். என்ன பல ஆண்டுகளாக இதழின் பொருட்டே விளிக்கப்படுவதால் அவரும் சுகன் என்றே அழைக்கப்படுகிறார். மற்ற சிற்றிதழ்கள் போலல்லாமல் இது கொஞ்சம் அரசியல் பேசும். ஒரு நிலை எடுத்துக் கொள்ளும். சுகனின் பிடிக்காத பகுதி எனக்கு இது. ஆனால் உரிமை சுகனுக்கே. சிற்றிதழ் […]
முட்டை விரிந்து வெளிவரும் போதே ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது அக்காகக் குஞ்சுக்கு … சக முட்டைகள் விரிந்து அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல் மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில் வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு.. பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது .. முடியாது போக கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது.. தாய்க் காகம் அதற்கு கொண்டு […]
பழநிக்கு அருகில் நெய்க்காரப்பட்டி என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே ஒரு பெரிய மிராசுதார். நெய்க்காரப்பட்டி மைனர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. பெயருக்கேற்ற மாதிரி ஐந்து சவரனில் வடக்கயிறு போன்ற மைனர் செயின் அவரது பொன்னிற மேனியில் தவழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் நெற்றியில் மட்டும் பட்டைப்பட்டையாக விபூதி. பெரிய முருகபக்தர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “முருகா! முருகா!” என்று வாய் முனகிக்கொண்டே இருக்கும். முருகன் பெயரை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக ‘முருகன்’ என்ற […]
பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன் நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில் அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான் அதீத ஞானம்பெற்றவன் போல் போதியின் நிழலில் நின்று எதேதோ பிதற்றுகிறான் இலையுதிர்த்த விருட்சத்தின் கடைசி இலையை கையிலெடுப்பவன் இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான் போலப் பொழிதலும் ஆகச் சிறப்பதுமாய் பயணத் தொடர்கையில் மௌனமாய் பொருளுணர கிரகிக்கிறான் கவலையால் நிரம்பியவனின் ஓலம் கவிதையாயின் அவன் கவிஞன் பேத்தலெனின் புத்தி சுவாதீனமற்றவன் தத்துவமெனில் ஞானியாகிறான் ஏதுமற்று போனால்… வெற்றுவெளியில் உலவும் ’வெறுமனா’ய் போவான் அவன்!? […]
சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய இவரது கவிதை இவரது ஆழ்ந்த அறிவுக்கு அடையாளம். ஒரு வானம்பாடியின் கானம் ——————————– ஒரு வானம்பாடியின் கானம் என்னைக் கனவினின்று வெளியே இட்டு வரும் காலை ஒளிரும் ——————————— வசந்தத்தின் முதற் […]