படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

This entry is part 4 of 14 in the series 24 ஜனவரி 2021

                                  முருகபூபதி – அவுஸ்திரேலியா  “ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…?  “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி. எனக்கு  ‘ஜமாத்  ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “ இவ்வாறு தனுஜா,  தன்வரலாற்று நூலில்  பேசும் வரிகள்  133 ஆம் பக்கத்தில்  இடம்பெறுகின்றன. ஆம் ,  எமக்கும் திருநங்கை ஜமாத் பற்றி எதுவுமே அதன் அரிச்சுவடியே தெரியாதுதான். தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகளை ரசிகர்களை சிரிக்கவைக்கும் பாத்திரமாக படைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் […]

பீதி

This entry is part 3 of 14 in the series 24 ஜனவரி 2021

அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பாடையிலிருந்து அறுந்து வீழ்ந்து மிதிபட்டு நசுங்கி- வறிய தெருநாய் சாவினை முகர்ந்ததெனும் நறுமாலைகள் சிதறிக் கிடக்க- நகர்ச் சாலையில் சுடலை நோக்கி சாவதானமாய் நகரும் சவ ஊர்வலத்தின் பின் வழி விட- விடாது ஒலி ஒலித்து இங்கிதமற்ற பேருந்து அவசரப்படுத்தும் பதற்றத்தில் பிணம் பயந்ததெனும் பயம் பிணத்தினின் பயமாயிருக்கும்- விழி இடுங்கிப் பிணத்தை வெறித்தபடி ஊரும் பேருந்துக்குள் உறைந்து கடக்கும் எனக்கு. கு.அழகர்சாமி

டெனிஸ் ஜான்சன் கவிதைகள்

This entry is part 2 of 14 in the series 24 ஜனவரி 2021

தமிழில்: ட்டி. ஆர். நடராஜன்  1. ஏறுதல்  நடப்பவர்களுக்கான சாலைக் கோடுகளின் மேல் விழும் வெண்மேக நிழலுக்குக் கீழே ஒரு நாள் விழுந்து கிடப்பேன்  சாலைமேல் எனது மருந்துகள் அடங்கிய பையிலிருந்து மாத்திரைகள் சிதறி விழும். ஒய்வு பெற்ற  கிழங்களும்,  மெக்சிகோ இளைஞர்களால் ஆன தெருக் கும்பலும் என்னைத் தின்னும் வியாதிகளைப் பார்ப்பார்கள். என் உள்ளாடையையும், சிலந்தியின் வலையெனப்  படர்ந்திருக்கும்  கிழவிக் கால் நரம்புகளையும் பார்ப்பார்கள். ஆகவே இளைஞனான கறுப்பின டிரைவர் அவர்களே !   நான்  பொருட்படுத்துவதெல்லாம் இதுதான்: இருக்கையின் மேல் வைத்திருக்கும் என்  பொருட்களைப் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் சொர்க்கத்திலிருந்து […]

புனிதக் கருமாந்திரம்

This entry is part 1 of 14 in the series 24 ஜனவரி 2021

                 சோம. அழகு                                                                                                                ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. – ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற(!) ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. […]