ஜெயபாரதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
வளவ. துரையன் மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது கடந்த காலம் அன்று முதல் பார்வையில் நீ தந்த குளிர்மொழிதான் மனக்குகையில் உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது நினைத்து நினைத்து மறக்க முயல்கிறேன் நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து கரும்பறைக்கும் இயந்திரமாக மனம் கசப்பு கொள்கிறது எல்லாம் காலியானாலும் சமையல் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் ஒரு சிறு சோற்றுப் பருக்கையாய் நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய் அதனால் பசியாறாது என்று தெரிந்திருந்தும் […]
வளவ. துரையன் வெயிலில் நடந்து வாடும்போதுதான் நினைவுக்கு வருகிறது தோட்டத்துச் செடிக்கு நீர் ஊற்றாதது நடும்போதே நான் சொன்னேன்ல தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு அம்மா கத்துவார் ஆனால் நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவதுபோல அம்மா அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார் நான் என்னை நம்பியா வைத்தேன் அம்மாவை நம்பித்தானே அம்மா இல்லையா?
ஹிந்தியில் : ஆலோக் தன்வா தமிழில் : வசந்ததீபன் _______________________________ ஒன்று ______________ வீட்டின் சங்கிலிகள் எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றன ? எப்போதும் வீட்டிலிருந்து ஏதாவதொரு சிறுமி ஓடிப்போகிறாள்? என்ன அந்த இரவின் நினைவு வந்து கொண்டிருக்கிறதா? அது பழைய சினிமாக்களில் அடிக்கடி வந்து இருந்தது எப்போதும் ஏதாவதொரு சிறுமி வீட்டிலிருந்து ஓடிப் போயிருந்தாளா? மழைக் காலத்தினால் வீழ்ந்த அந்தக் கல் விளக்குத் தூண் வெறுமனே கண்களின் அமைதியின்மை காட்டும் அதிகமாக அதனின் ஒளியா? மற்றும் அந்த […]