கருநிற மேகமொன்று சற்று வெளிறிப் போயிருந்தது அவளது பார்வை கலைந்து போனதில் நிலைத்து மேகத்திரையில் காற்றின் அலைகள் பிய்த்து போட்டன கற்பனைகளை மீண்டும் ஒன்று கூடிற்று கலைந்து போனவை பார்வையின் உஷ்ணம் தாங்காது கோர்த்து வைத்தவை காணாமல் போக கண்ணீர் வடித்தது வானம் , அவள் பார்வையில் பட்டபடி இடியாகவும் மின்னலாகவும் உருமாற்றம் பெற்றன குரோதம் கொப்பளித்த கணங்கள் சலனங்கள் ஏதுமற்று மீண்டும் மீண்டும் வெறித்தபடி பார்த்துக் கொண்டேயிருக்கின்றன அவளிரு விழிகள் ஷம்மி முத்துவேல்
ஓவிய பலகையில் பளீரென்று வரவேற்ற ஊதா, புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக … முன்வாசலில் நிலைப்பாட்டை நிறுத்த சிவப்பை போல ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டுமோ ? வெள்ளை போல வெள்ளெந்தியாய் இருந்திருக்க வேண்டுமோ ? நீலம் போல ஆழமாய் இருந்திருக்க வேண்டுமோ ? எல்லாமும் கொஞ்சமாக கலந்து இருந்தது தவறோ ? என்றும் ஓவியன் கையிலெடுக்கும் நிறம் எந்நிறமாக இருக்க கூடுமோ என ஏக்கம் கொண்ட ஊதா, அனுமானங்களை […]
சிரிக்கவும் இயல்பாய் கரைந்துருகி அழவும் மரணிக்கவும் தெரிந்த கடிகார விட்டத்தின் முட்கள் ஒலிஎழுப்பி தெரிவிக்கும் அதன் குறிப்புணர்த்தலில் காலம் கட்டுண்டு கிடக்கிறது நிறுத்தினால் முடியாத கால ஓட்டத்தை பந்தயவீரர்கள் கடந்துவிட முயற்சிக்கிறார்கள் காலத்தை கைப்பற்றும் முயற்சியில் எல்லோரும் தோற்றுப் போக அகாலவெளியில் சூரியன் மட்டும் பறந்து கொண்டிருக்கிறது. சகுனம் பார்த்துச் சென்ற நாயொன்றோ பிறிதொரு நாயைத் தேடி அலைந்தது. காலம் மீறி தன் நிழல்பார்த்து குரைத்தபோது தூரத்தில் இன்னும் நாய்கள் தெரிந்தன. நிழல் உருவம் பெரிதாக இன்னும் […]
(பெயர்கள் அனைத்தும் உண்மையல்ல.) ஒரு மலைப்பாம்பு சுற்றிக்கொண்டு இறுக்குவதுபோல் உணர்ந்தார் தர்மலிங்கம். பாதித் தூக்கத்தில் எழுந்தமர்ந்தார். நிமிடத்துக்கு அறுபது மூச்சுக்கள் இழுத்தார். கால்கள் உடம்புக்குச் சம்பந்த மில்லாததுபோல் தொங்கிக் கொண்டிருந்தது. கால் விரல்களின் இடைவெளியை வீக்கம் மூடியிருந்தது. தூங்கிக் கொண்டிருக்கும் மனைவி கோமளாவை எழுப்ப நினைக்கிறார். வார்த்தைகள் வரவில்லை. ஆனாலும் அத்தனையும் கோமளாவின் கனவில் ஓடிக் கொண்டிருக்கிறது. கோமளாவின் மணிக்கட்டை இறுகப் பற்றினார். கோமளா விழித்தபோது பயக் கோடுகள் முகமெங்கும் பரவி யிருந்தது. கனவில் கண்டது உண்மையாகவே […]
பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி உம்மா கடவுச் சீட்டு அடங்கிய கைப்பை முழங்கையில் தொங்க கடைக்குட்டியை கைகளில் ஏந்தி வாப்பா பயணம் சொல்ல குழந்தை தானும் வருவதாகச் சொன்னது. எல்லாச் சொந்தங்களிடமும் ஸ்பரிஷமோ பாஷையோ விடைதர… புன்னகை போர்த்திய முகச் சோகமும் புர்கா மூடிய அகச் சோகமும் கலாச்சார நாகரிக கட்டுக்குள் நிற்க மனைவியின் கண்கள் மட்டுமே முழுப் பெண்ணாகிப் […]
உன்னைப் போலவே தான் நானும் பிரமிக்கின்றேன் எதிர்பாரா தருணத்தில் எப்படியோ என்னுள் நுழைந்திருந்தாய் இனிதாய் நகர்ந்தவென் பொழுதுகளில் -உன் ஒற்றைத் தலைவலியையும் இணைத்துக் கொண்டாய் பழகியதைப் போலவே ஏதோ ஒரு நொடியில் பிரிந்தும் சென்றாய் ஏன் பழகினாய் ஏன் பிரிந்தாய் எதுவுமறியாமல் அலைந்த நாட்களில் தான் மீண்டும் வருகிறாய் மற்றொரு காதல் மடலோடு எப்படி ஏற்றுக் கொள்ள நானலைந்த தெருக்களில் காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய் மற்றொருவனையும் ======
ஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்கள் ஏராளம். தன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு ஜெயித்த ஒருவர் மற்ற பெண்களுக்கு ஆலோசனை சொல்லி உயர்த்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. கங்கை புத்தக வெளியீடு. விலை ரூ. 60. ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன். துணிந்துரையாக அணிந்துரை வெற்றி விடியல் […]
“என்னய்யா கேசு?”, இடுப்பில் நிக்காத காக்கி கால் சட்டையை மேலே இழுத்தபடி உள்ளே நுழைந்தார் துணை ஆய்வாளர். நாள் முழுவதும் அமைச்சரின் ‘மது, புகையிலை விலக்குப் பேரணியில்’ விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு களைத்துப் போய் வந்திருந்தவருக்கு, குடுவையிலிருந்து தேநீர் கொடுத்தார் ஏட்டு. அவர் வாயின் வலுக்கட்டாயத்தால் கொஞ்சமாக உள்ளே சென்றது நீர்மம். அவர் தேநீரின் சூட்டை சுவை பார்க்க நேரம் கொடுத்துவிட்டு, “மூணு பெற மொத்து மொத்துன்னு மொத்திருக்கான் சார்”, என்றார். “குடும்பப் பகையா?” “இல்ல சார்” […]
படிந்துறைந்த பாசிப் படலத்தின் பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற மனதின் பதிவுகளில் ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்.. வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில் அடிக்கடி எச்சரிக்கை எழுப்பும் பாதங்களின் ஏற்ற இறக்க தொனியில்.. யாரோ ஒருவரின் இருப்பு – தூசு தட்டப் படுகிறது..! கரையான் அரித்ததை விட கவலைகளே துரு பிடித்திருக்கிறது!!! *மணவை அமீன்*
“அம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.” “எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?” கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று. “என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்ல, அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் வேற […]