தொலைந்து போன ஒத்தை கொலுசில்தான் ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும் பத்து ரூபாயில்தான் சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது. வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின் பெருமூச்சு கேட்கின்றது. பலூன்காரனுக்கு- எப்போதும் பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம் எப்போதும் குழந்தைகள். சிவன்கோயில் அய்யருக்கு தட்டுகளில் ஜீவனம். பலாச்சுளை விற்பவனுக்கு பத்து ஈக்கள் சொந்தம். குருட்டு பிச்சைக்காரிக்கு கோவில் வாசலே சுவர்க்கம். வரும்போகும் வாழ்கைக்கு யாரிடம் கேட்பது முகவரி!. […]
காலமும் கணங்களும் : இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 ) நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் ! முருகபூபதி பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள். தேநீரின் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி வெள்ளைப் பளிங்கில் நெடிதுயர்ந்த அந்தத் திருமண மண்டபம் அரண்மனைபோல் வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையில் பணியாளர்கள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தனர். காணொளிகள் நேரலையாக ஆங்காங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல் இனிய இசையொலி மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.பளீரென ஒளிவெள்ளம் பரவாமல், இதமாக மெல்லிய விளக்கொளி தவழ்ந்து கொண்டிருந்தது.முகப்பில் செயற்கை நீரூற்று, நான்கு புறமும் நான்கு மயில்கள் நீரை உமிழ்ந்துகொண்டிருந்தன. நடுவில் ஒயிலாக மணிமுடி தரித்த வெண்சிறகுத் […]
தோப்பின் நடுவே ஒரு செல்ல மரம் அணில்கள் குருவிகள் பூச்சிகள் வாழ்த்தின கும்மியடித்தன குறுஞ்செடிகள் ஆரத்தி சுற்றின மற்ற மரங்கள் செல்ல மரத்தின் பூக்கள் சிரித்ததில் சுரந்த தேனை வண்டுகள் மேய்ந்தன வழிந்த தேனை எறும்புகள் செரித்தன-அதன் பிள்ளை பேரர்கள் காடுகள் வளர்த்ததில் மழைகள் வாழ்த்தின ஒரு பொட்டல் வெளியில் தனிமரம் ஒன்று ஒத்தையாய் நின்று ஒத்தையாய் செத்தது அமீதாம்மாள்
வெங்கடேசன் நாராயணசாமி யுகள கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா.10.35.2,3] இடது கன்னம் இடது தோளில் சாய்த்து வில்லாய் புருவம் வளைத்தசைத்து மெல்ல உதட்டைக் குழலில் வைத்து தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்! வானுறை வனிதையர் வல்லினரொடு வானளாவி வியந்து வேணு காணமதில் மயங்கி காமன் கணையொறுத்த சித்தம் கலங்கி வெள்கி அரையிடை அழுக்காடை அவிழ்வதையும் அறியாதசையா நின்றனரே! [ஶ்ரீம.பா.10.35.4,5] நங்கைமீர்காள்! இந்நந்தகுமாரர் நலிந்தோர்க்கு நலம்பல செய்து தேற்றும் வெண்முத்துச்சர சிரிப்பழகர், […]