சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு, துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது. துருக்கிய சட்டப்படியும் ஒத்தோமான் சட்டப்படியும், ஹாகியா சோபியா இருக்குமிடம், ஒரு வக்ப் நிலம் என்பதால், அவ்வாறு அந்த மசூதியை மியூஸியமாக அறிவித்தது தவறு என்று வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 1934ஆம் வருடத்தில் செய்த மாற்றம் செல்லாது என்று அறிவித்தது. பின்னர் துருக்கிய […]
கேஎஃப்சி என்னும் அமெரிக்க விரை உணவகம் அனைவரும் அறிந்த ஒரு உணவகம். இந்த உணவகத்தில் கோழிவறுவல் மிகவும் பிரசித்தம். இந்த கோழி துண்டுகள் மாவில் பிரட்டப்பட்டு எண்ணெயில் வறுக்கப்பட்டு வாளி வாளியாக விற்கப்படுகின்றன. தற்போது இந்த அமெரிக்க நிறுவனம், கோழி இல்லாமலேயே கோழி வறுவலை தயாரித்துவிற்க போவதாக செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இதில் என்ன விஷேசம் என்றால், இவை கோழி மாமிசம் போன்று வடிவமைக்கப்பட்ட சோயா அல்லது தாவர பொருட்களால் உருவான போலி மாமிசம் அல்ல. […]
பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய புலிகள், சிங்கங்கள் தங்கள் பரப்புகளை சிறுநீர் மூலம் எல்லை வகுத்துகொள்கின்றன. இவை எல்லாமே ஒருவகை மொழிகள். மற்ற விலங்குகளுடன் தொடர்புகொள்ள இவை அனைத்துமே உதவுகின்றன. இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் பல்கலைக்கழகத்தின் மொழி ஆய்வாலர்கள் ஒரு குறிப்பிட்ட விலங்கு குறைந்தபட்சம் ஒரு பொதுவான வழியில்-ஓநாய்கள் ஒருவருக்கொருவர் அலறுகின்றன, பறவைகள் பாடுகின்றன, நடனமாடுகின்றன, துணையை ஈர்க்கின்றன […]
க. அசோகன் ஆல்பர்ட்டுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கிட்டத்தட்ட எல்லாமே மறந்துபோன மாதிரி தோன்றியது அவருக்கு பல எண்ணங்கன் ஓடியபடி இருந்தாலும் மனம் எதிலும் லயிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை தன் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பகுதியை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார். அவரின் இந்த நிலைக்குக் காரணம் செல்ல பேத்தி டீனுவே. அவள் இன்று காலை கேட்ட கேள்விதான்! பெரும்பாலும் தனது அறைக்கு […]
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமேஅரியணையைச் சுமந்தபடி. நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயேஅந்த வளரிளம் மனம்ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது….. உளவியலை அறிந்துகொள்ளும் முன்பேஎதிர்–உளவியலை அறிந்துகொண்டதில்நான் அடைந்த லாப நஷ்டங்களைஇந்தக் கொரோனா காலஉலகளாவிய பேரிழப்புகளின் சமயத்தில்பேசுவது சரியல்ல. ஒருவகையில் வாழ்க்கை வியாபாரம்தான்என்றாலும்வியாபாரிக்கும் இசைகேட்கவேண்டிய தேவையிருக்கிறதுதானே…. பட்டறிவு என்ற பெயரில் அவனுக்கு அறவுரை சொல்லஅனுபவங்கள் அத்தனை ஒற்றைத்தன்மை வாய்ந்தவையா என்ன? ஆனாலும் இன்று அந்த இளைஞனின் […]
பிரேமா ரத்தன் மா மரக் கிளைகள் அசைந்து காற்றை வரவேற்றுக் கொண்டிருந்தன. நான்கு கிளிகள் பழுத்த மாம்பழத்தைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. போட்டியாக அருகில் ஒரு அணில், கிளி கொத்திய பழங்களின் மிச்சத்தைத் தின்று கொண்டிருந்து.. சுனிதா இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்தாலும், அவள் மனம் அதில் லயிக்கவில்லை.பிரேமா ரத்தன் பக்கத்து வீட்டில் வயதான தம்பதியர் வசித்தனர். அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். ஒருத்தருக்கு லண்டனில் இந்திய தூதரகத்தில் வேலை. மற்றொருவருக்கு […]
மஞ்சுளா பகலின் பாதியை மூடி மறைத்து குட்டி மழையை கொண்டு வந்தன மேகங்கள் வெடித்த நிலப்பரப்பில் தன் தலை நுழைத்து விம்முகின்றன மழைத் துளிகள் நெகிழ்ந்தும்… குழைந்தும் மண் மற்றொரு நாளில் பிரசவித்தது தன் சிசு ஒன்றை இதுன்னா….? அதன் பெயர் எதுவென்று தன் குளிர் மொழியில் கேட்கிறாள் தளிர் நடை பயிலும் குட்டி இளவரசி – மஞ்சுளா
துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் தனகருந் தலைவராகப்பட்டவரைதன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியைவறுத்த முந்திரியை_தானுற்ற தலைவலியை திருகுவலியைஇருமலை சளியை_சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோபேசிவிட்டாலோகறுவிச் சிலிர்த்தெழுந்துஆனமட்டும்அருவாளாய் வார்த்தைகளை வீசிஆடுகளத்தில் வெட்டிச்சாய்த்துகாணாப்பொணமாக்கி நாசமாக்காமல்ஓயமாட்டார்….அவரேஅடுத்தவரின் தலைவரைஅடுத்தவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரைஅடுத்தவருக்கு விருப்பமான தேங்குழலைவெங்காயப் பொக்கோடாவைபால்கோவாவை ஃபலூடாவைஅடுத்தவரின் வயிற்றுவலியைமுதுகுவலியைமலச்சிக்கலைமண்டையிடியைமெத்துமெத்துப் பாதங்களின் பித்தவெடிப்பைபழித்துப் பழித்துப் பாசுரங்கள் குறைந்தது நூறேனும்எழுதித்தள்ளுவார்.அடுத்தவருடைய அவமரியாதைச் சொற்களாகக்கொள்ளப்படுபவைதான் உதிர்க்கும்போது‘அநீதியைக் கண்டு வெகுண்டெழலாகி’விடுகின்ற _அடுத்தவருடைய அகங்காரமாகச் சுட்டிக்காட்டப்படுபவைதன்னிடத்தில் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கையாகி விடுகின்றஇருநாக்கு இருமனப்போக்கு இருப்பாரிருக்கஇருக்குமிங்கே நியாயமும்ஒருதலைப்பட்சமாய்…. கைவசம் இருக்கவேண்டிய ஆறேழு வார்த்தைகள் கண்டிப்பாக […]
வே.ம.அருச்சுணன் – மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று, மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா…கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன். […]
கடல்புத்திரன் ஒன்பது ஐயனார் திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது அது அங்கு விசேசமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று, ஆடு வெட்டும் வேள்வி சிறப்பாக நடை பெறும். அன்று எல்லாரையும் மகிழ்ச்சி பற்றிக் கொள்ளும். ஆண் பகுதியினர் வீட்டிலே கசிப்பு. கள் போத்தல்களைச் சேர்ப்பார்கள். பெண்கள் வீடு மணக்க ஆட்டுக்கறி சமைப்பார்கள். ஒவ்வொரு வள்ளக்காரர்களும் இரவில் தம்மொடு தொழிலுக்கு வந்தவர்களை. வருபவர்களை, நண்பர்களை விருந்துக்கு அழைப்பார்கள். செல்லன் அப்படி கனகனைக் கூப்பிட்டிருந்தான். வீட்டுக்குள் நுழைகிற போது […]