மனச்சோர்வு ( Depression )

This entry is part 2 of 19 in the series 5 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன் ” டிப்ரஷன் ” என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அல்லது சில நாட்களில் அந்த கவலையை மறந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறோம்.அன்புக்குரியவர்களை பிரிய நேர்ந்தால் அல்லது அவர்களை மரணம் காரணமாக நிரந்தரமாக இழக்க நேர்ந்தாலும்கூட கொஞ்ச நாட்கள் கவலைப்பட்டு பின்பு காலப்போக்கில் அதிலிருந்து விடுபடுகிறோம்.இத்தகைய […]

ஜெயமோகன் – என் குறிப்புகள்.

This entry is part 3 of 19 in the series 5 ஜூலை 2015

பி.கே. சிவகுமார் (ஜூலை 2, 2015 அன்று, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் – சிந்தனை வட்டம் கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றுவதற்கு முன் அவரை அறிமுகப்படுத்தும்விதமாக, நேரம் கருதி இவ்வுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் வாசிக்கப்பட்டன. பிற பகுதிகள் இணைந்த இந்த முழு-உரையின் பிரதி ஜெயமோகனிடம் கொடுக்கப்பட்டது.) அனைவருக்கும் வணக்கம்! எழுத்தாளர் ஜெயமோகனை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்க நிர்வாகிகள், ஜெயமோகன் வாசகர் வட்ட நண்பர்கள் பாஸ்டன் பாலாஜி, பழனி, கார்த்தி உள்ளிட்ட […]

தொடுவானம் 75. காதலிக்க காலமுண்டு

This entry is part 4 of 19 in the series 5 ஜூலை 2015

ஆங்கில வகுப்பு மதிய உணவுக்குப்பின் தூக்க நேரத்தில் நடந்தாலும் நாவலின் கதை உற்சாகம் நிறைந்ததாகவே தொடர்ந்தது. வழக்கம்போல் ஒருவர் உரக்கப் படிக்கவேண்டும். அப்படி செய்தால் தூங்குபவர்கள் விழித்துக்கொள்வார்கள் என்பது குண்டர்ஸ் அவர்களின் அற்ப ஆசை. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டவர்களை எவ்வளவு உரத்த குரலாலும் ஏதும் செய்ய முடியவில்லை. மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் கதை தங்குதடையின்றி தொடர்ந்தது. கேஸ்ட்டர்பிரிட்ஜ் டவுனில் உள்ள பெரிய ஹோட்டலில் இரவு விருந்து நடைபெறுகிறது. அதில் ஊரின் முக்கிய பிரமுகர்களும், செல்வந்தர்களும் […]

ஆம்பளை வாசனை

This entry is part 5 of 19 in the series 5 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 என்னுடைய மனைவிக்கு அவர்கள் தூரத்துச் சொந்தம். அத்தை முறை என்று சொல்வாள். சிறு வயதில் எப்போதாவது அவளுடைய அம்மா அங்கே கூட்டிப் போவதுண்டாம். அப்போதெல்லாம் அந்த அத்தைகள் பெரிய படிப்பு படித்து பெரிய பதவியில் இருந்தார்கள். இவர்கள் இருக்கும் ஒரு மணி நேரத்திலே ரொம்பவும் நாசுக்காக ரெண்டொரு வார்த்தைதான் பேசுவார்களாம். ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர்களுக்குப் பேசத்தெரியாது. இன்னும் கூட நினைவிருக்கிறது என்பாள் என் மனைவி. குழந்தையாக இருக்கும்போது இவளைத் துடைக்க பயன்படுத்திய துண்டை […]

வெசயம்

This entry is part 6 of 19 in the series 5 ஜூலை 2015

எஸ்ஸார்சி அனேகமாக புது வீட்டின் ஆசாரி வேலைகள் முடியும் சமயம்.நான்கு ஆசாரிகள் ஒரு மாதமாக தட்டி தட்டி வேலை செய்து நான்கு அறுகால் ஆறு ஜன்னல்கள் மஞ்சளைப் பூசிக்கொண்டுதயார் ஆனது.அவன் அனுவலகத்துக்கு ஒருமாதம் விடுப்பு போட்டான்..இதற்கு செலவு ஆகாத விடுப்பு பின் எதற்கு என்றுதான் தோன்றிற்று. ரெடிமேடாகவே அறுகாலும் ஜன்னலும் மரவாடியில் தயாராக விற்பனைக்கு இல்லையா என்ன. நாமே ஆசாரி வைத்து செய்வது போல் ஆகுமா என்று சொல்கிறார்களே. ரெடிமேடு ரெடிமேடு தான் நாம ஆசாரி வச்சி […]

சஹானாவின் மூக்குத்தி

This entry is part 7 of 19 in the series 5 ஜூலை 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இனி மேல் எழுந்து குளித்து நமாஸ் செய்துவிட்டு காப்பி பாத்திரத்தை சைக்கிளில் ஏற்றிக் கயிறு கட்டி இறுக்கி விட்டு அவர் கிளம்ப வேண்டும். சஹானா படித்துக்கொண்டிருந்த அறிவியல் புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு அவரைத் திரும்பி பார்த்தாள். சாதாரணமாக அவர் இவ்வளவு நேரம் […]

வலையில் மீன்கள்

This entry is part 8 of 19 in the series 5 ஜூலை 2015

வளவ.துரையன் விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. பறவைகள் கூடு விட்டுக் கிளம்பி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. பால்காரர்களின் ‘பாம்-பாம்’ சத்தம் போய் இன்னும் உறங்குபவர்களையும் விழிக்க வைத்தது. ”ஞாயிறுதானே, மெதுவாக எழுந்திருக்கலாம்” என்று எண்ணியவாறே கண்களை மூடிப்படுத்திருந்தவனைத் தொலைப்பேசி ஒலி கிளப்பி விட்டது. “வணக்கம்! யாருங்க பேசறது?” என்றேன் வழக்கம் போல. “நான்தாண்டா தமிழ்மணி பேசறேன், எங்கியும் போயிடாத, இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்” “நீ வர்றது சரி, வா, என்னா செய்தியைச் சொல்லு” என்றேன் அவசரமாக. “வந்து…ஒண்ணுமில்ல” […]

தொன்மம்

This entry is part 9 of 19 in the series 5 ஜூலை 2015

சத்யானந்தன் அன்று நான் அழைத்தபோதெல்லாம் உங்கள் கைபேசி அழைப்பை ஏற்காவில்லை என் குறுஞ்செய்திகள் கண்டுகொள்ளப் படவில்லை நேரில் சந்தித்த போதும் நீங்கள் பிடி கொடுக்கவில்லை உங்களைத் தேடிய சூழ்நிலை மட்டுமல்ல பின்னர் என் தேவையா இல்லை உங்கள் இடமா எது காலாவதியானது நினைவில்லை இன்று உங்கள் பெயரும் கைபேசி எண்ணும் என்னுடையதில் தொன்மமாய்

இரத்தின தீபம் விருது விழா

This entry is part 10 of 19 in the series 5 ஜூலை 2015

2015.06.28 அன்று கண்டி கெபட்டி பொல ஞாபகார்த்த அரங்கில் இலங்கையில் புகழ்பெற்ற மலையாக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா ஜென்கின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரத்தின தீபம் விருது விழாவின்போது காவிய பிரதிபா சிலாவத்துறை ஹமிட் ஆ. சுஹைப் அவர்கள் இரத்தின தீபம் கௌர பட்டதை பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம். (படமும் தகவலும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்) Thanking You. இப்படிக்கு, வெலிகம ரிம்ஸா முஹம்மத் 077 5009 222

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015

This entry is part 11 of 19 in the series 5 ஜூலை 2015

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015 பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவின்போது கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் H.M.சுகைப் அவர்களால் பாடசாலை மாணவனுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார் இவரோடு வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் A.h.M..சாபி அவர்களும் சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் புத்தளம் தெற்கு கோட்டம் யு.ரங்கநாதன் அவர்களும் காணப்படுகிறார்கள். (படமும் தகவலும் வெலிகம ரிம்ஸா முஹம்மத்) Thanking […]