ஏதோ ஒரு கிணற்றில் கங்கதத்தன் என்ற பெயருடைய தவளையரசன் இருந்தது. அது ஒருநாள் தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டு, கிணற்றில் தொங்கிய வாளியில் ஏறி படிப்படியாக வெளியே வந்து சேர்ந்தது. ‘’இந்த உறவினர்களுக்கு தீங்கு செய்வதற்கு என்ன வழி? ஆபத்து வந்தபோது உதவி புரிகிறவனுக்கும், கஷ்ட தசையை எள்ளி நகையாடுகிறவனுக்கும் உதவி புரிந்தால் மனிதன் மறுபிறப்புப் பெறுகிறான். என்றொரு பழமொழி உண்டு என்று எண்ணமிட்டது. இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கருநாகம் புற்றில் நுழைவதைத் தவளையரசன் பார்த்துவிட்டது. அதைக் கண்டதும் […]
ஜாசின் ஏ.தேவராஜன் (குறிப்பு: இக்கதை மலேசியத் தமிழ் இளந்தையர்களின் விளிம்புநிலை கூட்டத்தாரின் பேச்சு மொழியில் சொல்லப்பட்டது. தளச்சூழலில் தமிழும் மலாயும் கலந்து பேசுகின்ற நிலை வெகுநாட்கள் புழக்கத்தில் உள்ளன. பின்வரும் சொற்கள் வாசகர்களின் புரிதலுக்காக வழங்குகிறேன். சீஜில்- சான்றிதழ், பெர்ஹிம்புனான் – பள்ளியில் மாணவர் சபை கூடல், ஹரி அனுகெராஹ் செமெர்லாங்- விருதளிப்பு நாள், துங்கு டுலு- முதலில் காத்திரு, ஜபாத்தான் – (கல்வி) இலாகா, எஸ்.பி.எம் – 17/18 வயதில் அமரும் […]
புதிய கம்பெனியில் முதல்நாள் அனுபவம். உற்சாகத்துக்குக் குறைவு இல்லை. வேலை எனச் சேர்ந்தவர்களே வெவ்வேறு ஊர்க்காரர்கள். புதிய பாஷைக்காரர்கள். ஆனால் எல்லாருமே தாய்மொழியை விட ஆங்கிலம் அதிகமாகவும், நன்றாகவும் பேசினார்கள். ஒரே பாஷைக்காரர்களே கூட தங்களுக்குள் ஆங்கிலம் பேசிக்கொள்ளவே விரும்பினார்கள். மணிவண்ணனுக்குத்தான் என்னமோ தாய்மொழி என்று, அதில் தான் சரியாக ஊட்டம் பெறவில்லை என்று இருந்தது. தமிழ்பேசும் இன்னொரு புதியவனைப் பார்த்ததும் என்னமோ மனசு இளகிக் கொடுத்தாப் போலிருந்தது. ஆனால் மற்றவன் இவனது எல்லா தமிழ்க் கேள்விக்கும் […]
-வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் […]
1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை அம்மா, போகலாமா? சாமா கேட்டான். மேல் சட்டையில்லாத உடம்பில் குற்றாலம் துண்டைப் போர்த்தி, கையில் சின்ன மூட்டையைத் தூக்கிப் பிடித்திருந்தான். இடுப்பில் வார் பெல்ட்டில் பத்திரமாக ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, பர்ஸை மருதையனிடம் கொடுத்தான். குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துக்கலாமய்யா. அண்டா குண்டாவிலே வச்சு கங்கா ஜலம்னு சகலமானதுக்கும் எடுத்து நீட்டறான். மத்ததெல்லாம் சரிதான். குடிக்கவும் அதானான்னு எதுக்களிச்சுட்டு வருது. மருதையன் சொல்வதும் உண்மைதான். பத்து அடி […]
51 வறண்டு கிடக்கும் ஆற்றில் கரை புரண்டோடும் வெயில் வெள்ளம். மேலே பறந்து கொண்டிருக்கும் தனித்தொரு பறவை வானில் ஒரு குளிர்மேகம் தேடி. 52 செடியின் ஒரு மலர் உதிரும். ஒரு மொட்டு அவிழும். செடி செடியாய் இருக்கும். 53 ஒரு கோவணம் கூட இல்லை. அண்ணாந்து ஆகாயம் போர்த்திக் கொள்ளும் அந்தக் குழந்தை. 54 நேற்றிரவில் எனக்குப் பெய்த மழை எல்லோருக்கும் பெய்யவில்லை. என் கனவில் மழை. 55 ஒற்றைப் பனைத்தூரிகையும் ஓவியமும் ஒன்றோ? 56 […]
ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” ! நான் அறிந்தவரை ஈழத்துக் கவிதைகளின் அசைவுகள்,அனுபவங்கள் அண்மைக்கால சூழலில் புலமும் புறமுமாக எழுதப்படுவதையும் சித்தரிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.பிரிநிலை என்பதுகளில் தீவிரமாக கட்டமைக்கப்பட்ட சூழலில் யுத்தத்தின் அனுபவங்களை அல்லது வரலாற்றுப் பதிவுகளை தொண் ணூறுகளில் துயர்தலின் வலிகளாக,ஆறாத காயங்களின் முறையீடுகளாக காணப்பட்டன. நீளும் சமூகப் பிரச்சினைகளை அகிலன்,சிவசேகரன்,அரபாத்,ஜெயபாலன்,இளைய அப்துள்ளாஹ் என படைப்புக்கள் காயங்களோடு வெளிவந்தன.நெஞ்சை உழுக்கும் விதமாக வாசிப்புக்கள் அமைந்ததோடு உண்மைநிலை சடுதியாக […]
மரணம் பின்பு சிலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்துவிடுவர் வருமானம் வீடு தேடி வரும் சமணத்தில் முக்தி பெண்களுக்கு கிடையாதாம் பிரமாண்ட நந்தி கூடவே பிரஹன்நாயகி இவ்வளவுக்கும் தகுதியுடையவனா பிரகதீஸ்வரன் கல்வி நிறுவனங்கள் அம்பானிக்கும்,டாடாகளுக்கும் தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன பெண்களால் வீழ்ந்தன எத்தனையோ சாம்ராஜ்யங்கள் சாவுக்கு பின்னும் மதச் செயல்பாடு இருக்குமானால் மனிதனுக்கு இன்னல் தான் அரசர்கள் காலத்தில் அரண்யத்தில் வசித்த காபாலிகக் கூட்டம் கொலை செய்யத் தயங்காது அஹிம்சையால் சுதந்திரம் வாங்கிய […]
கண்ணெதிரே சிறிது சிறிதாக மறந்து வருகிறேன் இன்னாருக்கு கணவன் என்பதை இன்னாருக்கு தகப்பன் என்பதை தான் எந்தப் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை சொந்த பந்தங்களை அண்டை வீட்டுக்காரர்களை முக்கியமாக வீட்டின் முகவரியை தொலைபேசி எண்களை வங்கிக் கணக்குகளை வாகனத்தின் இலக்கங்களை மொழியின் அவசியத்தை உடையின் அலங்கோலத்தை சாலை விதிகளை வசிக்கும் ஊரின் பெயரை திசைகள் நான்கு என்பதை நேர்ந்த அவமானங்களை உதாசீனப்படுத்திய உள்ளங்களை பசியை மறந்து மயங்கி விழ இறந்ததையும் மறந்து நடந்து கொண்டிருக்கிறேன். பெருஞ்சுவர் நீங்கள் […]
ஓம் ஸாந்தி ஸாந்தி நதிப் பிரவாகம் பேதம் பார்ப்பதில்லை மதுக் குப்பிகளை திறக்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வருகிறது இரவின் நாயகி நீயெனவும் பகலின் நாயகன் நானெனவும் விந்தை மனிதர்கள் விரைவில் புரிந்து கொள்வர் இரவுக்கு ஆகாரமாகவும் பகலுக்கு ஆதாரமாகவும் நீ இருக்கிறாய் சக்தி ஆட்டுவிக்கிறாள் சிவன் நடனமாடி களிக்கிறான் விழிகள் போடும் கோலங்களை வியந்து போய் பார்க்கிறேன் நகத் தீண்டலிலே என்னுள் மிருகம் விழித்துக் கொள்கிறது ஆதி நாட்களில் பாம்பாக அலைந்து கொண்டிருந்த நடராஜரும் சிவகாமியும் […]