மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். எனது அன்பிற்கு உரியது உறுதியான கரை நானோ அவன்றன் நெஞ்சம் கவர் கன்னி இருவரும் இணைந்தோம் ஒன்றாய் அன்பின் உந்துதலால். இழுக்கிறது நிலவு என்னை அவனிடம் இருந்து விரைந்து விரைந்து திரும்பிச் செல்கிறேன் மீண்டும் அவனிடம் தயங்கித் தயங்கிப் பெறுகிறேன் பிரியா விடை. நீலமாய் நிறைந்த தொடுவானின் பின்னிருந்து கவர்ந்து வருகிறேன் வெள்ளியின் நிறத்தை கலக்கிறேன் நுறையாய்க் கரையோர மஞ்சள் மணலுடன் என்னே வனப்பு எங்களின் சங்கமம் […]
மூலம்: கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் ;புதுவை ஞானம் இந்த உலகிற்கும் எதிர் வரும் உலகிற்கும் இணைப்புப் பாலம் அவன். தாகத்தால் தவிக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் அருந்த நீர் வழங்கும் தடாகம் அவன். பசியால் வாடும் பறவை இனத்துக்குப் பழம் தரும் மரத்தின் பாசனக் கால்வாயாய் அழகுற அமைந்த ஊற்று அவன். குமுறும் ஆன்மாக்களின் குழப்பம் தணிக்கும் அழகிய கீதமாய் மென்மையாய் இசைக்கும் வானம் பாடியாய் வெண்ணிற மேகங்களின் மேலாக தொடுவானில் தோன்றி ஏறி உயர்ந்து வானம் முழுதும் […]
மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். சொர்க்கத்திலிருந்து துளித்துளியாய் இறைவனால் இறக்கி விடப்படும் வெள்ளிக் கோடுகளாக இருக்கிறேன் யான் என்னைக் கையேற்று வளம் சேர்க்கிறது இயற்கை வயல்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும். பூங்காக்களுக்கும் அழகூட்டு முகத்தான் விடியலின் தேவதையான இஷ்தாரின் மணிமுடியில் இருந்து பறிக்கப்பட்ட அழகிய முத்து யான். மலைகள் சிரிக்கின்றன நான் அழும் வேளையில் மலர்கள் குதுதூகலிக்கின்றன மகிழ்ச்சியால் . என்னை யான் தாழ்த்திக் கொள்கையில் எல்லாமும் உயர்வடைகின்றன. வயல்வெளிகளும் வான்மேகமும் காதலர்கள் […]
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இத்துடன் ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம் பற்றிய ஓர் அறிவிப்பை இணைத்துள்ளேன்.தயவு செய்து இதைத் தங்கள் இணைய இதழில் ‘அறிவிப்புகள்’ பகுதியில் வெளியிட்டு எங்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ‘தளம்’இதழ் சார்பாகவும், ஆசிரியர் பாரவி சார்பாகவும், தங்கள், எஸ்.எம்.ஏ.ராம். ‘தளம்’-மின் பதிப்புத் துவக்கம் பற்றிய அறிவிப்பு ‘தளம்’-கலை இலக்கியக் காலாண்டிதழ் சென்ற ஜனவரி,2013- இலிருந்து வெளிவருவது குறித்து வாசக நண்பர்கள் அறிந்திருப்பார்கள். முதல் இதழ் சி.சு.செல்லப்பா நூற்றாண்டு விழாச் சிறப்பிதழாகவும், இரண்டாம் இதழ் […]
டாக்டர் ஜி.ஜான்சன் தூக்க மூச்சடைப்பு ( sleep apnoea ) என்பது தூங்கும்போது மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போவதாகும்.இது சில வினாடிகளே நீடிப்பதால் , பாதிப்புக்கு உள்ளானவர் உடன் திணறிக்கொண்டு விழித்து எழுந்து விடுவர்.தேவையான கார்பன்-டை -ஆக்ஸ்சைடு இல்லாதிருத்தல் , சுவாச மையத்தில் தூண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும். தூக்க மூச்சடைப்பு நடுத்தர வயதுடைய , உடல் பருமன் அதிகமுள்ள ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும். மொத்த ஜனத்தொகையில் 1 முதல் […]
14 மனமாற்றம் காலையில் எழுப்பினாலும் படுக்கையை விட்டு எளிதில் எழுந்திரிக்க மாட்டேன்கிறான்! “என்னங்க……பார்த்திபன் இப்படிப் பண்றான்……நீங்கப்பாட்டுக்கு அவனை ஒன்னும் கேட்காம இருக்கிறீங்க?” “அவன்,எங்க பேசறமாதிரி நடந்துக்கிறான்……?” “அதற்காக……அவன் செய்யிறத் தப்ப கேட்காம இருந்திட முடியுமா….?” “அவசரப்பட வேண்டாம் அம்பிகை, எதையும் பக்குவமாத்தான் கேட்கனும், கொஞ்சம் விட்டுதான் கொடுப்போமே!” “நாளைக்கு ஏதும் பிரச்சனைனு வந்துட்டா இழப்பு நமக்குதான் என்பதை மறக்காம இருந்தா சரிங்க…..!” “அம்பிகை, நீ எதுக்கும் பயப்படாதே…..! நடப்பதெல்லாம் நன்மைக்கேனு நினைச்சுக்க!” மாலையில் கணவனும் மனைவியும் […]
விட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ். வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில் தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம். கர்நாடகத்திலிருந்து அதிக தூரம் தள்ளி வந்துவிடவில்லை. தமக்கை கன்னட நாடகக் குழுக்களிலும் ஆரம்ப கால தமிழ் சினிமாக்களிலும் நடித்தவர். அதிகம் கன்னட நாடக குழுக்களில். சங்கீதமும் நாடக நடிப்பும் மிக பரிச்சயமானவை விட்டல் ராவின் சகோதரிக்கு. இதன் காரணமாகவும், விட்டல் ராவுக்கு கன்னட தமிழ் நாடகச் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. அந்தி மங்கியச் செவ்வானில் கார்முகில் மறைத்து விடும் தாரகை தன்னை ! உரைத்திட நான் நினைத்தது இறுதியாகி விட்டது ! நீ முழுவதையும் ஒரு வேளை கேட்டிருக்க முடியாது ! அதனால் தான் சுமுகமாய் நான் செல்ல நீ அனுமதித்து விட்டாய் ! அதற்குப் பிறகு வானத்தில் இடிமழை முழக்கம் வாய்க்குரல் ஆனது ! நானுன் முகத்தினுள் நோக்கிய போது […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 14. நேர்மையால் உயர்ந்த ஏழை வாங்க…வாங்க…என்னங்க..உம்முன்னு பேசாம இருக்குறீங்க…சரி உடம்புக்கு ஏதாவது சுகமில்லையா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? சும்மா சொல்லுங்க…என்ன ஒண்ணுமில்லையா? அப்பறம் ஏன் உம்முன்னு நிக்கறீங்க…நான் கேட்ட வினாவிற்கு விடை தெரியலியேன்னு வருத்தமா….அடடா…இதுக்குப் போயி வருத்தப்படலாமா? விடைய நானே சொல்லிடறேன்.. இதுல என்ன இருக்கு…. அவரு வேற […]
“என்ன, ராதிகா, அப்படிப் பாக்கறே? இதுக்கு முன்னாடி மிஸஸ் சிந்தியா தீனதயாளனை எங்கேயாச்சும் பாத்திருக்கியா?” என்று முதல்வர் தெரெஸ்ஸா வினவியதும், ஒரு திடுக்கீட்டுடன் அவள் தன் பார்வையை நீக்கிக்கொண்டதோடு, தன் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் தவழவிட்டுக்கொண்டாள். “இல்லே, மேடம்,. பாத்ததில்லே.” “சரி…. இப்ப நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யணும்னா, இந்தக் காலேஜுக்குள்ளாறவே இவங்க குடுத்திருக்கிற டிக்கெட்ஸை வித்துத் தரணும். அதுக்குப் பெறகு, வெளியிடங்கள்லேயும் – பல பணக்காரப் பெரிய மனுசங்க வீடுகளுக்குப் போய் – முடிஞ்ச […]