மெஹ்தி ஹசன் சமீப காலங்களில், 1400 வருடங்கள் பழைய மதமான இஸ்லாமில் சீர்திருத்தம் (reformation) வேண்டும் என்று பல தேய்ந்த ரிக்கார்ட் போல குரல்கள் எழும்பியிருக்கின்றன. “நமக்கு முஸ்லீம் சீர்திருத்தம் வேண்டும்” என்று நியூஸ்வீக் அறிவிக்கிறது. “ஹப்பிங்க்டன் போஸ்ட் “இஸ்லாமின் உள்ளேயே சீர்திருத்தம் நடைபெற வேண்டும்” என்று கூறுகிறது. பாரிஸில் ஜனவரில் நடந்த படுகொலைக்கு பின்னர், எகிப்திய ஜனாதிபதியான அப்துல் ஃபடா அல் சிசி, “முஸ்லீம் சமுதாயத்தின் மார்ட்டின் லூதராக” வரலாம் என்று பைனான்ஸியல் டைம்ஸ் எழுதியது. […]
72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம் கோகிலத்தின் விபரீத ஆசை கேட்டு நான் திடுக்கிட்டேன். ஒருவர் மேல் பிரியம் அல்லது காதல் கொண்டால் அவருடைய கையில் உயிரைத் துறக்க யாரும் முன்வருவார்களா? உன்னை நான் உயிராகக் காதலிக்கிறேன் என்றுதான் பெரும்பாலோர் காதல் மயக்கத்தில் கூறுவார்கள். ஆனால் காதல் நிறைவேறாமல் பிரிய நேர்ந்தால் கொஞ்ச காலம் கவலைப்பட்டு மறந்து போவதுதான் உலக இயல்பு. பின்பு இன்னொரு புதுக் காதல் தோன்றும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. ஒருவேளை விபத்தில் ஒருவர் இறக்க […]
இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது ஒரு கடிதம் வந்தது. சினிமா பற்றி ஏதாவது எழுதும்படி. அது மாலனோ அல்லது ஜெயபாரதியோ அல்லது இருவருமே அடுத்தடுத்தோ, சரியாக நினைவில் இல்லை. என்ன எழுதினேன் என்று நினைவில் இல்லை. என்ன எழுதக்கூடும் நான் […]
பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் புரிந்தது குறைவாக இருக்கும் ஆழமானவற்றின் அறிகுறிகள் தெரியும் மறைத்தாலும் முடியாது மறைபொருளை அறிந்துகொள்ளமுடியும் பக்கம் மாறுவதில்லை பாடங்கள் மாறிக்கொண்டே இருக்கும் மையிட்டு எழுதுவதில்லை மனமிட்டு எழுதுவது நாடக ஓவியங்களை ஓவிய நாடகங்களை ஒருசேரக் காணலாம் அலங்கார நூல்களும் அமைதியான நூல்களும் ஆழமான நூல்களும் வெறுமையும் வறுமையும் வறுத்தெடுத்த வாட்டி எடுத்த நூல்களும் உண்டு பளிங்குபோல் […]
தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட் [ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ] தரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் இருந்த தரை விரிப்பில் தண்ணீரை விசிறியடிக்கக் காற்று இப்போது குளிர்ச்சியாக வீசத் தொடங்கியது. நான் என் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாகத் தெருவை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதிய வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த புழுதி மண்ணாலான தெருவைப் பார்த்துக் கொண்டே யோசனை செய்து கொண்டிருந்தேன். ஒரு கார் வேகமாகப் போக புழுதி […]
தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மொழியியல் செய்திகள் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்துபார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் பேராய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். தொல்காப்பியத்தை நடுவணாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரைவரைந்துள்ளனர். தொல்காப்பியத்தை […]
சிறகு இரவிச்சந்திரன் பாஸ்கருக்குப் போனமாதம்தான் கல்யாணம் ஆகியிருந்தது. ஒருமாதம் விடுமுறையில் சீரங்கம் போனபோது தீடீரென்று ஒரு வரன் குதிர்ந்திருப்பதாக அம்மா சொன்னாள். பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று கௌசல்யாவை. முகூர்த்த நாள் பார்த்து, சத்திரம் பார்த்து கல்யாணம் முடிவதற்குள் அவனுடைய ஒரு மாத விடுமுறை ஏறக்குறைய காணாமல் போயிருந்தது. ஐந்து நாட்கள் மட்டுமே அவன் கௌஸல்யாவுடன் இருக்க முடிந்தது. அதிலும் பாதி உறவினர் விருந்து உபசாரத்தில் கழிந்து விட்டிருந்தது. ஆசை அறுபது நாள் என்பது மைக்ரோ சிப்பில் போட்ட […]
மாதவன் ஸ்ரீரங்கம் இதை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை. இந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம் இருக்கிறது. நடமாட்டம் என்ன நடமாட்டம் பேய்கள் இருக்கின்றன. பத்துவருடங்களாக நாங்கள் இந்தவீட்டில்தான் குடியிருக்கின்றோம். நாங்கள் என்றால் நானும் கண்பார்வையில்லாத என் மனைவியும் மூன்று வயது மகளும். நான் சொந்தமாக கம்பெனி வைத்திருக்கிறேன். பெரிய மண்ணார் அன் கம்பெனி. அதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. நான் வாங்கி விற்கும் கம்பெனி வைத்திருக்கிறேன். இது அதுவென்று இல்லாமல் எதுகிடைத்தாலும் வாங்குவேன். விற்பேன். […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நான் புறப்படறேண்ணா என்றாள் யாழினி ஏன் என்ற கேள்வி அனைவர் முகத்திலும் தெரிந்தது. யாழினிக்கு அந்த கடிதத்தைப் படித்த பின்பு வினோதனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அந்தகடிதம் தன்னை இலக்கு வைத்து எழுதியதைப் போன்ற உணர்வு. யாழினி கவனமாய் அந்த நாட்குறிப்பை எடுத்துவைத்துக்கொண்டாள். அடுத்து படிக்க வேண்டும். படிப்பதற்கும் இங்கிருந்து வெளியேறியாக வேண்டும். ஏதோ ஒரு இலக்கு வைத்துத்தான் அனைத்தும் நடந்தேறுகிறதோ. யாரோ ஒருவரின்வாழ்வின் தொடர்ச்சியாக யாழினியின் பயணம். மாறுப்பட்ட கோணமாய் […]
கே.எஸ்.சுதாகர் என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம். எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை. குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் […]