சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’

This entry is part 5 of 9 in the series 16 ஜூன் 2019

(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு விழா 14.4.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பனிரெண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.  நான் தேர்ந்தெடுத்தது, சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ என்கிற கதை. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியானது.  சிறுகதையைத் தெரிவு செய்த கட்டுரை […]

மீட்சி

This entry is part 6 of 9 in the series 16 ஜூன் 2019

கு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த துணிமணிகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிய்ந்த சட்டைப் பித்தான்களைத் தைத்தேன். ஓர் ஊசியால் பிரிவுற்ற உறவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் சிறகுகள் போல் உதிர்ந்த நினைவுகளைத் தைத்தேன். ஓர் ஊசியால் என் உயிரையும் உடலையும் தைக்கப் பார்த்தேன். நூல் அறுந்தது. ஊசி செத்தது. கு. அழகர்சாமி

நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”

This entry is part 8 of 9 in the series 16 ஜூன் 2019

விமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் ( ஆஸ்திரேலியா மெல்பனில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்டது) ஒரு மிருக வைத்தியராக பணியாற்றும்  நடேசனின்   தொழில்சார் அனுபவங்கள், மற்றும் அவர்  சந்தித்த சம்பவங்களைப்பற்றிப் பேசும்  தொகுப்பும் தான் இந்த புத்தகம்.  மிக எளிய நடையில், அற்புதமாக ஒரு மிருக மருத்துவராக தன் அனுபவங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். 56 தலைப்புகளில் வெவ்வேறு சம்பவங்களை பதிவிட்டிருக்கிறார். ஜீவகாருண்யத்தை தொழிலோடு தொண்டாகவும்  செய்து வருகிறார் என்பது தெளிவாக விளங்குகிறது. […]

முதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி

This entry is part 9 of 9 in the series 16 ஜூன் 2019

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை திருக்குறளுக்கு உரை வரைந்தவர்கள், உரை வரைந்துகொண்டிருப்பவர்கள் பலர் ஆவர். இந்நெடு வரிசையில் பெண் ஒருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவர் கி.சு. வி. லெட்சுமி அம்மணி ஆவார். உரையாசிரிய மரபில் ஆண்களே கோலோச்சிக்கிக் கொண்டிருந்த நிலையில் இப்பெண் வரைந்துள்ள திருக்குறள் உரை,  உரையாசிரிய மரபில் முதல் பெண் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.            மருங்காபுரி ஐமீன்தாரிணியாக விளங்கிய இவர் திருக்குறள் […]

கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

This entry is part 2 of 9 in the series 16 ஜூன் 2019

தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், திறனாய்வாளர். ஆர்வம் குறையாத வாசிப்பாளர். அவர் அமரராகி ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதைகளுமாக ஒரு சிறிய தொகுப்பு வெளியிட்டேன். அநாமிகா ஆல்ஃபபெட்டின் சிறிய துவக்கம் அந்த நூலில் தான் ஆரம்பமாயிற்று. தணல்கொடிப் பூக்கள், மரமல்லிகைகள் என மூன்று நான்கு கவிதைத் தொகுப்புகள், அநாமதேயக் கரைகள் என்ற சிறுகதைத் தொகுதி, ஆண்டாள் திருப்பாவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய உயர்பாவை என்ற […]

மனப்பிராயம்

This entry is part 4 of 9 in the series 16 ஜூன் 2019

மஞ்சுளா                       மதுரை  என்  மனப்பிராயத்தின் வயது  இன்னும் ஒன்றுதான்  அதில்  நகராத கணங்கள்  இன்னும் என்னுள்  என்னை நீரூற்றி வளர்க்கின்றன. சிற்சில சமயங்களில் பூக்கும் பூக்களை  சுற்றி  நினைவுப் பட்டாம்பூச்சிகள்  பறந்து  கதை சொல்லும் . அந்த வயதில்  பார்த்தே அறியாத  எதைப் பற்றியும்  வேகமாகப் பாயும்  காலச்சாத்தனின்  கைப்பிடிக்குள் சிக்கி  இறக்கைகள்  உதிர்ந்து போன  இன்றும் கூட  எதையோ நினைத்தபடி  மண்புழுவாய்  […]

ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….

This entry is part 7 of 9 in the series 16 ஜூன் 2019

கோ. மன்றவாணன்       நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரில் உள்ள வீட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் தனிமையில் இருந்துள்ளார். தோசை வார்த்து உண்ணலாம் என்றெண்ணிய அவர், அருகில் உள்ள வசந்தம் மளிகைக்கடைக்குச் சென்று மாவு பாக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளார். அந்த மாவு கெட்டிருந்தது. கெடுநாற்றம் வீசியது. அந்த மாவுப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்று மாவு கெட்டிருக்கு என்று சொல்லி உள்ளார். மாவு பாக்கெட்டைத் திரும்ப வாங்க மறுத்த அந்தக் கடையின் அம்மையார், ஜெயமோகனை வசைபாடி உள்ளார். […]

புகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன

This entry is part 3 of 9 in the series 16 ஜூன் 2019

FEATURED Posted on June 15, 2019Video Player00:0000:05 [ கட்டுரை – 3 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://youtu.be/-pZVPux-bzs https://youtu.be/6ae4GZ9t6Vs https://youtu.be/c_gVEZi_xSc https://www.fairewinds.org/nuclear-energy-education/new-tepco-report-shows-damage-unit-3-fuel-pool-much-worse-unit-4 முதன்முதல் யூனிட் -3 இன் கதிரியக்க அணு உலை எரிக்கோல்கள் நீக்கப் பட்டன. https://gizmodo.com/nuclear-fuel-rod-removed-from-stricken-fukushima-reactor-1834048278  [April 15, 2019] 2019 ஏப்ரல் 15 டெப்கோ [TEPCO]  [Tokyo Electric Power Company] பொறியியல் நுணுக்கவாதிகள் முதன்முதல் தூர இயக்குச் சாதனங்களைப் பயன்படுத்தி புகுஷிமாவின் சிதைந்த யூனிட் -3 […]

நியாயங்கள்

This entry is part 1 of 9 in the series 16 ஜூன் 2019

கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு நான் கல்லூரியில் என் படிப்பைத் தொடர்ந்தேன். அவன் கோலாலம்பூரிலிருக்கும் அவன் அத்தாவின் பணமாற்று வியாபாரத்தில் இறங்கிவிட்டான். அசாத்தியத் துணிச்சல்காரன். ஒரு மழை இரவு முடிந்து நானும் அவனும் அறந்தாங்கி புதுக்குளக் கரையில் நடந்தோம். ஒரு நண்டுப் பொந்தைப் பார்த்துச் சொன்னேன். ‘இதுதான் […]