தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !

This entry is part 9 of 29 in the series 23 ஜூன் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   நான் அறிவேன் ! நன்றாக நான் அறிவேன் பிரிவதற் குரிய வினைகள் அனைத்தும் துரிதமாய் முடிந்தன என்பதை ! ஆயினும் பயணியே! ஏன் இப்போது சிறிது தயக்கம்  ? ஆனி, ஆவடி மாதத்து வானத்தில் பெருமழைப் பொழிவு நனைத்து தோட்டம், வாய்க்கால்கள் நிரம்பி வழியும் காட்டு மர நிழலில் ! மெல்லிய மழைத்துளி அரவத்தில் கேட்கிறது சிவ்விளிப்* பூங்கொத்தின் அழுகுரல் மண்ணிலோர் […]

நம்பிக்கை

This entry is part 8 of 29 in the series 23 ஜூன் 2013

                                                                                                                    டாக்டர்     ஜி.ஜான்சன்   நம்பிக்கை என்பது அவரவரைப் பொருத்தது. ஒருவரின் நம்பிக்கை அடுத்தவருக்கு அர்த்தமற்றதாகவும், மூடத்தனமாகவும் தெரியலாம்.சில வேளைகளில் இந்த மூடத்தனத்திலும் ஓர் உண்மை புதைந்திருப்பதையும் கண்டு வியந்துள்ளேன். இது நடந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவ்வப்போது நினைவில் வந்து போகும் பொது நான் சிரித்துக்கொள்வேன். என் பால்ய நண்பன் செல்வன். என்னைவிட இரண்டு வயது இளையவன். பட்டதாரி. நிறைய ஆங்கில நூல்களை படிப்பவன். ஆங்கில எழுத்தாளன். நல்ல சிந்தனையாளன். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்துவன்.திருமணம் […]

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25

This entry is part 7 of 29 in the series 23 ஜூன் 2013

வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள வயதிலேயே பட்டமேற்ற அவன் தனது உறவுப் பெரியவர்களான சித்தப்பா, பெரியப்பா ஆகியோரையோ, மூத்த மந்திரிகளையோ மதிக்கவில்லை. தன் மனம் போன போக்கில் ராஜ்ஜியத்தை நடத்தினான். மாளிகையிலிருந்த வசதிகள் போதுமானதாயிருந்த போதும், தங்கத் தட்டுகளைக் கட்டிலில் பதித்தான். தனது மனைவிகளுக்கும் நடன மாந்தருக்கும் தங்களை முத்து, பவளம் என்று நகைகளால் அலங்கரித்தான். இப்படிப் பட்ட ஆடம்பரத்தினால் […]

மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்

This entry is part 6 of 29 in the series 23 ஜூன் 2013

                                                        டாக்டர் ஜி.ஜான்சன் கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால் பகுதி மண்ணீரலைத் தொட்டுக் கொண்டிருக்கும்.இது சுமார் 18 செ .மீ . நீளமும்,, சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் ( Insulin ) என்ற இயக்கு நீரும் ( hormone ) […]

கல்யாணியும் நிலாவும்

This entry is part 5 of 29 in the series 23 ஜூன் 2013

-கலைச்செல்வி அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன. நிலா வந்ததும் வராததுமாக அந்த ரகசியங்கள் சொல்லப்பட நிலா சட்டென பிரகாசமாக மாறி விட்டது. மாமா வாங்கி வந்திருந்த வளையல், தோடுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிணற்றடியில் இருந்த துவைக்கும் கல்லில் பரப்பி வைத்திருந்தாள் கல்யாணி. அவள் அணிந்;திருந்த முழுப்பாவாடையும், அதற்கு பொருந்தமில்லாத இறக்கம் இல்லாத சட்டையையும் மீறி அவள் முகம் பிரகாசமாக இருந்தது. […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 12

This entry is part 4 of 29 in the series 23 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com  12.ஆடு​மேய்த்த அறிவியல் ​மே​தை…..      ஒண்ணு ​தெரியுமாங்க? அட..யாரு?…அட​டே நீங்களா? வாங்க… என்ன ஏ​தோ ​தெரியுமாங்குறீங்க?…என்னது?..அட அதுதாங்க எந்தப் ​பொருள ​மேல் ​நோக்கி எறிஞ்சாலும் அது திரும்பவும் கீழ் ​நோக்கித்தான் வருங்கற தகவலத்தான் ​கேட்​டேன். அட இது ஒரு ​பெரிய அறிவியல் ​மே​தையினு​டைய தத்துவமாச்​சே.. இது […]

தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.

This entry is part 3 of 29 in the series 23 ஜூன் 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘அம்மா என் உலகம்’ கவிதைத் தொகுப்பை எழுதியவர் திருச்சியில் அரசு பணியில் உள்ள தனலெட்சுமி பாஸ்கரன். இதில் சுமார் 130 சிறு கவிதைகள் உள்ளன. கவிதைகள் எளிமையானவை. நேர்படப் பேசுபவை. வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களின் மறுபக்கத்தை நமக்குக் காட்டுபவை. உற்று நோக்குதலைத் தொடரும் படைப்பாற்றலால் கவித்துவம் தெறித்து விழுகிறது. கிணற்றில் நீர் இறைப்பது சாதாரண செயல்தான். அதை இவர் பார்க்கும்போது கவிதையாகிறது. கவிமனம் இவருக்கு இயல்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் உரசி அமிழ்ந்து மேலெழும்பும் […]

மொழியின் அளவுகோல்

This entry is part 2 of 29 in the series 23 ஜூன் 2013

  தேமொழி   ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது?   உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்), 10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன 22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன 35% மொழிகள் நல்ல […]

படைப்பு

This entry is part 1 of 29 in the series 23 ஜூன் 2013

         கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : ஞானம். கடவுள் தன்னிடமிருந்து ஒரு ஆன்மாவைப் பிரித்து அழகுற வடிவமைத்தார் அவளை. அனைத்து அன்பையும் நளினத்தையும் அவள் மீது பொழிந்து ஆசீர்வதித்தார். அவளிடம்  மகிழ்வெனும் கோப்பையைக் கையளித்துச் சொன்னார், ” கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்து போனாலொழிய இந்தக் கோப்பையிலிருப்பதை அருந்தாதே ! ஏனெனில் மகிழ்ச்சியென்பது எங்கோ அப்பால் இல்லை இக்கணத்தில்தான் இருக்கின்றது.” அவளிடம் துயரெனும் வேறொரு கோப்பையைக் கையளித்துச் சொன்னார்: “ இந்தக் கோப்பையில் இருப்பதை அருந்து ! […]