நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண் விடுதலை பற்றிய சிந்தனையும் தோன்றி, முயற்சியையும் தொடங்கிவிட்டனர். இந்த மண்ணில் பெண் சமுதாயம் ஏறிவந்த முன்னேற்றப் படிகளைக் காணலாம். முதலில் பெண்களுக்கு அடையாளம் பெற்றுத்தர வேண்டுமென நினைத்தனர். அன்னிபெசன்ட் அம்மையாரால். அகில இந்திய மாதர்சங்கம் தோன்றியது அதன்மூலம் ஓட்டுரிமை பெற்றுத் தந்தனர்.. இதனை யாரும் மறத்தல் கூடாது 100 ஆண்டுகளுக்கு முன்னரே விழிப்புணர்வு முயற்சியை மேற்கோண்ட வைகளை […]
சிறகு இரவிச்சந்திரன். பசியோடு, மலையாளக்கரையோரம் ஒதுங்கும், தமிழ் பாடும் குருவிக்கு, புட்டும் கடலைக் கறியும் வைத்தால் எப்படியிருக்கும்? பசிக்கு கொஞ்சம் உள்ளே போகும். அடங்கியவுடன் புறந்தள்ளும். இட்லி வடை கிடைக்காதா என்று ஏங்கும். அப்படி இருக்கிறது படம். சந்தோஷ் சிவன், பிரபு தேவா, ப்ருத்விராஜ், ஜெனலியா, வித்யா பாலன். பெத்த பெயர்கள். சிறந்த ஒளிப்பதிவு, சோடை போகாத நடிப்பு. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் தமிழ் மணம். கேரளக் கரை. பதினைந்தாம் நூற்றாண்டுக் […]
முத்துராமன். வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. சுகுணாவை அழைத்து வரவேண்டும். அவளாகவே வந்தாலும் வந்து விடுவாள். பஸ்ஸை எதிர்பார்த்து, காத்திருந்து காத்திருந்து, பொறுமை இழந்து நடந்தே வந்தாலும் வந்து விடுவாள். வீட்டுக்கு வந்து சேர முக்கால் மணி நேரம் ஆகும். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் படுத்துக் கொள்வாள். கம்பெனியில் தையல் பவர் மிஷினை அழுத்தி அழுத்திச் சோர்ந்து போன கால் களுடன் முக்கால் மணி நேர நடை வேறு. வெளியே எட்டிப் பார்த்தான். மழை லேசாகத் தூறிக் […]
அமைதிச்சாரல் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல கவலைகள் வருத்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் காற்றிலகப்பட்ட சருகாய்ப் பறந்து விடும். மகிழ்ச்சியான பொழுதுகளில் மட்டுமல்ல துன்பம் வரும்போதும் மனம் தளராமல், கலங்காமல் அதைப்பார்த்து நகைக்கும் லேசான மனம் இருந்தால் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மன உறுதி தானே வந்துவிடும். இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லியிருக்கிறார் நம் […]
மழை ஈரத்தில் பூமி பதிந்துகொண்ட பாத அடையாளங்கள் போல எல்லா நினைவுகளும் காலத்தில் தேங்கி நிற்கவில்லை. ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற உறைந்த வெள்ளைப் புகை உருவாக்கின ஒற்றையடிப்பாதையை சூரியன் உருகிக் கரைத்துவிடுவதுபோல என் வாழ்க்கை வனாந்தரத்தின் ப்ரத்யேக ஸ்வரங்களைத் தொடுத்து விடுமுன்னர் கலைத்துவிடுகிறது காலம். கர்ப்ப வாசம் தேடி இப்போது அலையும் மனமும் விட்டுச் செல்லவில்லை எந்தச் சுவட்டையும். — ரமணி
இன்று உலகில் தங்கத்தின் மதிப்பு உயர உயர, அதைப் பற்றிய ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. தங்கக் குழுமங்கள் பல நாடுகள் உருப்பெற்று, தங்கச் சந்தையின் நிலவரத்தை உடனுக்குடன் பொது மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, கணினி மூலம், தங்க விலை நிலவரம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்;டுள்ளது. பல நாட்டு வர்த்தகர்கள் சேர்ந்து ஒரு பொதுக் குழுமத்தை 1987இல் உருவாக்கினர். அது தான் இயன் டெல்பெர்ரைத் தலைவராகக் கொண்ட உலகத் தங்கக் குழுமம். […]
பாட்டிலில் இருந்த குடிநீரை ஒரு மிடறு குடித்து, மறுபடி மூடி வைத்தான் ராஜேந்திரன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் நீரில் எந்த அளவு எங்கே போய்ச் சேருகிறது? மரத்தின் ஆணி வேர்கள் அருந்துவது எப்பொழுது மழை பொழிந்து நிலம் உள் வாங்கிய ஈரம்? இந்த பாட்டிலில் உள்ள நீரைப் போல அடை பட்டோ, நதி போல ஒழுங்கு பட்டோ, பொழிந்தோ, நிலத்துள் ஊடுருவியோ வெவேறு வடிவங்களில் குதூகலிக்கிறதா? ஈரமான காற்றில் தண்ணீர் காற்றுடன் கலந்ததும் […]
டமாரக் கோமாளி 2ஜி, காமன்வெல்த், கார்கில் வீரர்களின் வீட்டு ஊழல், சுரங்க ஊழல் என்று கலக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட்டை விட்டு வைப்பார்களா? எல்லாத்தையும் பத்தி சிரிச்சாச்சு, இதையும் சிரிச்சு வெப்போமே? கல்மாடி ப்ரொமோட்டர்ஸ் கல்மாடி: வாங்க வாங்க, எங்கிட்ட வீடு வாங்கினீங்கன்னா, உங்களுக்கு ஒரு தங்க மெடல் தருவேன். நாங்க கட்டற வீட்டில மாடி மட்டும் தான் இருக்கும். நோ க்ரவுண்ட் ஃப்ளோர். எங்க பேரைப் பார்க்கலை? கல்மாடி ப்ரொமோட்டர்ஸ். எங்க […]