கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு

This entry is part 5 of 6 in the series 9 ஜூன் 2019

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்கத் தாவுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைப் பகுதிகள் மூழ்குது !மெல்ல  நோய்கள் பரவி, நம்மைக்விரைவில் கொல்லப் போகுது !தொடரும் மூன்றாம் உலகப் போர் ! ++++++++++++++++ சூழ்வெளித் தூய்மையைச் சிதைக்கும் கிரீன்ஹவுஸ் […]

வாழ்தல் வேண்டி

This entry is part 6 of 6 in the series 9 ஜூன் 2019

கு.அழகர்சாமி விடி காலை. சிந்தியிருக்கும் தான்யங்களைச் சீக்கிரமாய்க் கொறிக்கப் பார்க்கும் அணில்கள்- படபடத்து  இறங்குகின்றன புறாக்கள் எங்கிருந்தோ. ஓடிச் சிதறுகின்றன திசைகள் தேட அணில்கள். ஒரு தான்யமும் விட்டு வைக்கவில்லை புறாக்கள். உதிக்கும் சூரியனைக் கொறிக்கிறது முன் கால்களில் தூக்கி ஓர் அணில். கு. அழகர்சாமி

உரசும் நிழல்கள்

This entry is part 4 of 6 in the series 9 ஜூன் 2019

மஞ்சுளா                             மதுரை என் கால்சுவடுகள் எனக்கான மண்ணில் கருவுற்று கிடக்கின்றன எனது பிள்ளைப் பிராயங்களைபிரியமுடன் கூடிக் கழித்த அமைதியுடன் பழைய வீட்டின் வாயிற்படியை பிடித்தபடி காத்திருக்கும் வாசனைகளை முகர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கும் காற்றுடன் திசையெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன என் சிறகுகள் இன்று மாறிய என் உடலெங்கிலும்அதன் நிழல்கள் உராய்ந்து கொண்டிருக்க எனது பிரியங்கள் யாவையும் விட்டு விட்டு பெரும் கால மழையில் நனைந்து கரைந்து கொண்டேயிருக்கிறேன் மிகுந்த வலியுடன்                          […]

அட்டைக் கத்திகள்

This entry is part 3 of 6 in the series 9 ஜூன் 2019

‘குருவே வணக்கம்’ என்ற வாட்ஸ்அப் செய்தி என் தொலைபேசியில் படபடத்தது. குருவா? நானா? இதுவரை என்னை அப்படி யாரும் அழைத்ததில்லையே. இது யாராக இருக்கும்? என் சேமிப்பில் இருக்கும் நண்பர் பட்டியலிலிருந்து வரவில்லை. ஒரு எண்ணிலிருந்து வந்திருக்கிறது. அந்த வாட்ஸ்அப் எண்ணோடு இருந்த புகைப்படத்தை அகல விரித்துப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகமாகத்தான் இருக்கிறது. யாராக இருக்கும்? வாட்ஸ்அப்பிலேயே உரையாடினேன். ‘குருவா? நானா?’ ‘ஆம்’ ‘நீங்கள் என் சிஷ்யனா?’ ‘ஆம்’ ‘ஹ்ஹ்ஹ்ஹ்ஹா. சரி போதும். சொல்லவந்ததைச் சொல்லுங்கள்’ […]

பொடியா

This entry is part 2 of 6 in the series 9 ஜூன் 2019

கௌசல்யா ரங்கநாதன்          -1- வழக்கம் போல,  அன்றும், மதிய சாப்பாட்டுக்கு 1 மணியளவில் கிளம்பிய  நான், என் உதவியாளரை அழைத்து என் பார்மசியை  பார்த்துக்கொள்  வழக்கம்போல என்று சொல்லிக்கொண்டிருக்கையில், ” புஸ், புஸ்”என்று பெருமூச்சு விட்டவாறு அந்த கொளுத்தும் கோடை வெயிலில், நடைபின்ன, ஒரு முதியவர் வியர்வை ஒழுக, ஒழுக,  என் கடைக்குள் அடியெடுத்து வைத்த போது  “தள்ளுபா, தள்ளு அந்தாண்ட” என்று ஒரு ஆட்டோ ஓட்டுனர் வேகமாய் கடைக்குள் நுழைந்து “இந்தாபா […]

நிழல் தேடும் வெயில்

This entry is part 1 of 6 in the series 9 ஜூன் 2019

வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ள “நிழல்தேடும் வெயில்? என்பதாகும். இயற்கை, சமூகச்சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக இத்தொகுப்பில் பல ஹைக்கூக் கவிதைகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம். நம் வாழ்க்கையில் பல பேரைச் சந்திக்கிறோம். அவர்களில் ஒரு சிலர்தாம் அவர்கள் மறைந்த பின்னரும் நம் மனத்தில் நிற்கின்றனர். திடீர் திடீர் என அவர்களின் நினைவு வந்து மனத்தில் சத்தம் போடுகிறது. நல்ல நிகழ்வோ அல்லது சோக எண்ணங்களோ வரும்போது கூடவே அவர்களும் வருகிறார்கள். இதை ஓர் […]