நிழல் தரும் மலர்ச்செடி

This entry is part 10 of 25 in the series 15 மார்ச் 2015

சேயோன் யாழ்வேந்தன் இடையில் சிறுத்த கரிய அழகிய அதன் நிழலுக்காகத்தான் அந்தச் செடியை நான் வாங்கினேன் நிழலில் கூட அது கறுப்பு மலர்களை பிறப்பித்திருந்தது நிழலுக்காகத்தான் அந்த மலர்ச்செடியை நான் வாங்குவதாக உன்னிடம் சொன்னபோதே மர்மப் புன்னகை பூத்தாய் செடியை நான் மடியில் வைத்து பேருந்தில் அமர்ந்தபோதுதான் பார்த்தேன் நிழலின்றிச் செடி அம்மணமாய் இருந்ததை. உடனே நான் உன்னிடம் ஓடி வந்தேன் செடியை நீ நிழலின்றி கொடுத்ததைச் சொன்னேன் வெட்கமின்றி நீ வாய்விட்டுச் சிரித்தாய் – இங்கேயும் […]

வரலாறு புரண்டு படுக்கும்

This entry is part 11 of 25 in the series 15 மார்ச் 2015

சத்யானந்தன் பலரை சிறையில் அடைத்த வாளும் கிரீடமும் சிறைப்பட்டிருக்கின்றன அருங்காட்சியகத்தில் உயரமான மாணவர்களுக்குக் கூட பெருமிதமான வரலாறு சிறு குறிப்புகளின் ஊடே பிடிபடவில்லை சிறுவரை அழைத்து வந்த ஊர்தியில் யாருமில்லை வெற்றிடமுமில்லை பையன்கள் விளையாடுவர் காட்சிக் கூடத்துக் காணொளிப் பதிவு இயங்கும் வரலாறு புரண்டு படுக்கும் சிலிக்கான் சில்லுகளில் வெளியே வெய்யிலில் மௌனமாய் திறந்த அடைப்பில் வரலாற்றின் உள் அறிந்த அரிய பார்வையாளனாய் கல் மரம்

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

This entry is part 12 of 25 in the series 15 மார்ச் 2015

சுப்ரபாரதிமணியன் போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது பழைய போபால்… யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அருகாமையில் சுலபமாய் 5 கி மீ பகுதியில் வசிப்பவர்கள் படும் சிரமங்களை நினைத்துப் பார்க்கவே வேதனை பெருகுகிறது போபால் நினைவுச்சின்னம் பார்க்க கெடுபிடிகள் சோர்வைத் தந்தன. முகப்பு காவலாளிகள் கும்பல் உள்ளே […]

நாதாங்கி

This entry is part 13 of 25 in the series 15 மார்ச் 2015

தாளிடப்பட்ட கதவின் பின் பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை எத்தனை முறைதான் அழைப்பது ? தட்டத் தட்ட அதிர்கிறது நாதாங்கி. உள் அலையும் சுவாசம் வெப்பமாக்குகிறது அறைக்கதவை சண்டையிட அல்ல சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை கதவு திறவாத ஒருவரிடம் கத்தாமல் தெரிவிப்பதெப்படி மீன்முள்ளாய் மாட்டிய செய்தியை துப்பவும் விழுங்கவுமியலாது தினம் வாசல் வரை வந்து திரும்பும் சூரியனைப் போல மீள்கிறேன். புறத்திருந்து உழிந்த எச்சிலாய் முதுகில் குளிர்கிறது காற்று சாளரங்கள் திறந்திருக்கக்கூடும் சுதந்திரமாய். திரும்பிப்பார்க்க விழையும்மனதை இழுத்து விரைகிறேன். […]

“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”

This entry is part 14 of 25 in the series 15 மார்ச் 2015

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று இதையெல்லாம் கடந்து ஆடிவீதியில் நடக்கும் ஆன்மீக சொற்பொழிவுகளும் தான் இங்கே பிரசித்தம். பல பிரபலங்களின் கதாகாலாக்ஷேபம் ,  கச்சேரிகள், என்று ஆடிவீதி அடிக்கடி களைகட்டும். அலைமோதும் கூட்டத்தின் நடுவில் தென்றல் நுழைந்து செல்லும். தொலைக்காட்சி […]

தொட்டில்

This entry is part 15 of 25 in the series 15 மார்ச் 2015

ஜெயஸ்ரீ சங்கர் ,ஹைதராபாத் அம்மா…வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி. இன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக இழுத்து விட்டுக்கொண்டவளின் குரலிலும் லேசான நடுக்கம் தெரிந்தது அகிலாவுக்கு. இன்னிலேர்ந்து மார்கழி மாசம் ஆரம்பிச்சிருச்சுல்ல …அதான் கோலமும்…குளிரும்..என்ற அகிலா தலையில் முடிந்திருந்த ஈரத்துண்டை அவிழ்த்தபடியே , ‘இரு லெட்சுமி காப்பி போட்டிட்டுருக்கேன், குளிருக்கு சூடா […]

மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்

This entry is part 16 of 25 in the series 15 மார்ச் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா போன்றே தோன்றினாலும் இது ஆஸ்த்மா இல்லை. இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் புகைத்த வருடங்களும் நோயின் கடுமையுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக காற்றில் தூசு, […]

அம்மா

This entry is part 17 of 25 in the series 15 மார்ச் 2015

ருத்ரா “தாய்மை” ஏதோ ஒரு கடனை தீர்த்துக்கொள்ளவா இந்த தலைப்பு? இலக்கணங்களின் இலக்கணத்துக்கு ஏது இலக்கணக்குறிப்பு? அம்மா என்று சும்மா தான் கூப்பிட்டேன். செங்கல் பட்டு அருகே இருந்து பங்காரு அடிகள் சிரித்தார். பாண்டிச்சேரி மண்ணின் அடிவயிற்றிலிருந்து வேர் ஊடி விட்ட‌ அரவிந்தப்புன்னகை வெள்ளையாய்ப்பார்த்து வெள்ளமாய் பாய்ந்தது. அமிர்தமாய் ஒரு அம்மாவின் குரல் நெஞ்சை வருடியது. வாஞ்சையாய். எனக்கு அம்மா எதிரொலி எங்கிருந்தோவெல்லாம் கேட்டது. அன்பின் ஒலிக்கு முகம் தேவையில்லை. வறுமையும் பிணியும் சமுதாய வக்கிரங்களும் பெண்மையை […]

தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !

This entry is part 18 of 25 in the series 15 மார்ச் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சில்லென்ற காற்று உடல் தழுவும் உணர்வைப் போல மனம் ரம்மியமாய் இருந்தது அன்றைய பொழுது. திரு.வையவன் அவர்கள், “தமிழ்ச்செல்வி உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப் போகிறோம். அன்னை நிர்மலா தொழிற்பயிற்சி மையத்தில்,” என்ற பொழுது, எனக்குள் உதயமான கேள்வி, நான் என்ன சாதித்து விட்டேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துகிறார்கள் என்பதுதான். இந்த பாராட்டு விழாவில் எல்லாம் எனக்கு நாட்டமில்லை. வேண்டாம் என்றேன். அவரோ “உன் சாதனை களைப் பற்றி உனக்கு தெரியா திருந்தாலும், உன்னைப் […]

ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா

This entry is part 19 of 25 in the series 15 மார்ச் 2015

திண்ணை வலைப் பூங்கவில் பல வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த பெர்னாட் ஷாவின் தமிழ் மொழிபெயர்ப்பு நாடகம், ஜோன் ஆஃப் ஆர்க்கை, [Saint Joan]  தற்போது ஒரு நூலாக, திரு. வையவன் தனது தாரிணி பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார்.    இந்த நாடகத்தைத் தொடர்ந்து வெளியிட்ட திண்ணை ஆசிரியர்களுக்கும், நூலாய்ப் பதிப்பித்த திரு. வையவனுக்கும் என் நன்றிகள்.   சி. ஜெயபாரதன், கனடா