சசி சேகர் குஜராத் முதலமைச்சர் இந்தியா டுடே கான்க்லேவ் 2013 நிகழ்ச்சியில் பேசியது, அந்த நிகழ்ச்சியிலும், இணைய உலகத்திலும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. அதனை இணைய ஒளிபரப்பு செய்தது ஒருமுறை தடங்கலுக்கு உள்ளானாலும் அந்த நிகழ்ச்சியே 20 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது என்பதும், அந்த நிகழ்ச்சிக்குள் நுழைய ஏராளமான கூட்டம் இருந்ததும், அதனால் தடங்கலானதும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துகொண்டே இருந்தார். நரேந்திர மோடியின் பேச்சுக்கு இருந்த எதிர்பார்ப்பு புரிந்துகொள்ளக்கூடியது. நமது ஜனநாயகத்தில் இன்னமும், முதன்மை அரசியல்கட்சிகள் […]
வேங்கட ஸ்ரீநிவாசன் மார்க் துல்லி – கல்கத்தாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்ற ஆங்கிலேயர். பி.பி.சி.யின் தெற்காசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர். தற்போது புது தில்லியில் பத்திரிகையாளராக இருப்பவர். ஜில்லியன் ரைட் – இவர் துல்லியின் தோழி. இந்திய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர். இந்த இருவரும் இணைந்து பல புத்தகங்களை எழுதியுள்ளனர். ‘No Full Stops in India’, ‘The Heart of India’ ஆகிய புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. 2002-ஆம் […]
இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை […]
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48 சீதாலட்சுமி வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. “சாதிகள் இல்லையடி பாப்பா _ குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” பாப்பாவிடம் பாடுகின்றான் பாரதி. பிஞ்சு மனத்தில் பதிய வைத்தால் பருவத்தில் அவனை வழி நடத்தும் என்று எண்ணியுள்ளான். பெரியவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே! சொல்லிப் பயனில்லை. அப்படியும் அவன் மனம் சமாதானமாக வில்லை. தனக்குள்ளும் முணங்குகின்றான் சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சரியாய் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாவனாவுக்கு விழிப்பு வந்தது. தன்னை யாரோ தூக்கிக்கொண்டு போவது போன்ற கனவு. அதற்குள் அது கனவு இல்லை என்றும், நிஜம்தான் என்றும் புரிந்துவிட்டது. புரிவதற்கு முன்பு அவள் சமையல் அறையில் இருந்தாள் அவள். தரையில் பொத்தென்று போட்டார்கள். கத்தி கூச்சல் போடாமல் அவள் வாயைப் பொத்தினார்கள். வசந்தி கால்களைப் பிடித்துக்கொண்டாள். தலைமாட்டில் கணவன் இருந்தான். மண்ணெண்ணெய் வாசனை […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி தூண்டியது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதல் டியென்ஏ உருவாக்கியது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் உறுதிப் படுத்தும் இப்போது. ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில் எதிர் எதிரே புரோட்டான்கள் மோதி சக்தி துகளாய் மாறும் விந்தை ! பூஜியச் சுழற்சி ஹிக்ஸ் […]
எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, நியாயமாக, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக, […]
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ வால்ட் விட்மன், அவனோர் பிரபஞ்சம் ! மன்ஹாட்டன் மைந்தன் ! புரட்சிக் காரன் ! உப்பிய சதை ! மோக முள்ளவன் ! பெருந் தீனியான் ! குடிப்பான் !, பிள்ளைகள் பெற்றவன் ! உணர்ச்சி வசப்படான் ! உயர்ந்தவன் அல்லன் மனித குலத்தில் ! தன்னடக்க மற்ற அகங்காரன் ! பிறன் ஒருவனை அவமதிப் […]
அன்று அலுவலகத்தில் அதிசயமாய் நீண்ட நேரம் பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேலை, எதிர்பாராமல் சீக்கிரமாய் முடிந்ததில் கார்த்திக் சந்தோஷத்தின் உச்சத்துக்குச் சென்றான். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு வந்து, இரவு பத்து மணிக்கு மேல் ஹோட்டலுக்குச் செல்வதிலிருந்து இன்று விடுதலை. வெளியில் வானம் வேறு மப்பும் மந்தாராமாய் இருந்தது, லேசான தூறலும் அதனால் ஏற்பட்ட சாரலும் அதனுடன் இணைந்த மண் வாசனையும் அவன் மனதுக்கு இனிமையைத் தந்தது. கார்த்திக், நல்ல சிவந்த தேகம், ஆறு அடி வாட்டசாட்டமான […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உனக்குத் தெரியாமல் போனது என்னைப் பற்றி ! அதுவும் நல்லதே ! அதுவும் நல்லதே ! அப்பால் நீங்குவ தற்குப் பதிலாய் அருகி லிருந்து நீ யெனக்கு அளிப்பது வேதனை ! திக்கு முக்காடச் செய்வதேன் நீ பக்கத்தில் அமர்ந்து ! என் வசந்த காலம் ஈர்த்துக் கொள்ளும் மெய்யாக இசைத் தொனியை ! மூங்கில் மரத் தோப்பு நிழல் ஓங்கி வளர்க்கும் […]