ஶ்ருதி கீதை – 3

This entry is part 3 of 3 in the series 9 மார்ச் 2025

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.31] ஆக்கலுமில்லை! காத்தலுமில்லை! அழித்தலுமில்லை! எங்குமெதுவும் எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை! பிறப்பில்லா காளியும் காளையும்  உன் உளவாக்கலால் கூடிக் குழைந்து  குணத்திரிபால் பல உயிர்களாய்த் தோன்றினர்  உன்னிடமே நீர்க்குமிழி போல்.  குமிழும் நுரையும் அலையும் அரியாமே! ஊனுயிர் உலகம் ஈஶன் பரமனாம் நீயே அன்றோ? ஆழிசேர் ஆறுகள் பெயருரு அற்றுப்போவது போல், மலைத்தேனுள் வெவ்வேறு மகரந்த மலரின்பம் மறைந்து செறிந்திருந்தாற் போல், உயிர் உலகம் ஊழி உம்பர் உம்பர்கோன் ஏனையோர் பலரும் என்றும் மாறா […]

கவிதைகள்

This entry is part 1 of 3 in the series 9 மார்ச் 2025

– கு.அழகர்சாமி (1) பாறையின் விழி என்னை நான் உடைந்து போக விடுவதில்லை கண்ணாடியாய். உடைக்கப்பட்டாலும் உடைவேன் ஒரு பாறையாய் ஊற்றின் விழி திறந்து.  (2) முடிபு இன்னும்  முடிக்கப்பட வேண்டியிருக்கிறது அது. முடிக்கப்பட்ட அளவில் முடிந்திருக்கிறது முடிக்கப்பட வேண்டியதும். முழுதும் முடிந்த எதுவும் ஒரு வகையில் முடிக்கப்பட்ட அளவில்- முடிக்கப்பட வேண்டியது போதுமென்றே- முடிந்ததே. முடிக்கப்பட்ட அளவில் முடிந்து கனவு முடிந்திருக்கவில்லையென்றால் முழுதும் கனவு முடியாது இன்னும் விடியாது கனவாக முடிந்திருக்குமோ நனவு? (3) ஒரு […]

ஆடுகளம்

This entry is part 2 of 3 in the series 9 மார்ச் 2025

கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக  அசைத்துக்கொண்டு  உற்சாகத்தில்  துள்ளி குதித்தான்.  ம்…ம்…ஓடுங்கள். .ஓடுங்கள் என்று  விசில் அடித்தான்.  கோல் என்று துள்ளி குதித்தான். ஆடுகள் மேய்க்கவந்த  மலைச்சி  யாருமற்ற  மைதானத்தைப் பார்த்தாள்  கையசைத்து துள்ளிக்குதிக்கும் இவனைப்பார்த்தாள்.  அவளும் அவன் உற்சாகத்தில்  கலந்துக்கொண்டு  துள்ளிக்குதித்தாள்.  வறண்டுப்போன  மலச்சிக்கும்  மகிழ்ச்சி வந்தது.  கொஞ்ச நேரத்தில்  மனநல காப்பக வேனில்  அவனை ஏற்றினார்கள்  அவளையும் தான்.  மலச்சி  சத்தோஷமாக ஏறிக்கொண்டாள்.  எங்கிருந்தாலும்  […]