கடந்த ஆண்டு மே 12ம் நாளில் சாலை விபத்தில் மறைந்த ஊடகவியலாளரும் மனித நேயரும் ,கருத்து போராளியுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஊடகம் மற்றும் பண்பாட்டு துறைகளில் பெரியாரின் பல்வேறுபட்ட கருத்து நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர் ஒருவருக்கு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது வழங்க பெரியார் சாக்ரடீஸ் நினைவு விழாக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டு பலரும் பரிந்துரைக்கும்படி முக நூல் மற்றும் இணையத்தில் கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக பலரும் […]
சாயாசுந்தரம் 1. ஒரு அண்ணனுக்காக ஒரு நிறைவேறா நீண்ட நாள் கனவு… தூக்கி வைத்து கொஞ்ச நிலவு காட்டி சோறூட்ட பங்கு பறித்து சண்டை போட ஜடை பற்றி இழுக்க.. கை பிடித்து பள்ளி அழைத்துப் போக அழாதே சனியனே என அவ்வப்போது திட்ட அங்கையேல்லாம் நிக்காதடி என்றதட்ட… காய்ச்சல் வந்த போது கைபிடித்துக் கொள்ள தவறென்றால் காது பிடித்து திருக நண்பனே என்றாலும் வாசலோடு வழியனுப்ப கலர் பற்றிப் பேசி கலாய்த்துச் சிரிக்க… மத்தாப்பூ […]
0 1.தொழில் போட்டியால் மோதலில் ஆரம்பிக்கும் வக்கீல் ஜோடி காதலில் சிக்கும் கதை 2.இரு இதயங்களை காதலால் இணைய வைக்கும் இந்தியன் பீனல் கோட்! 3.இரு துருவங்கள் காதல் வயப்பட்டு ஒரு துருவமாகும் படம்! பல்பொருள் அங்காடியில் மெலினாவை பார்க்கிறான் கார்த்திக். மெல்ல காதல் அவன் இதயத்தில் எட்டிப் பார்க்கும்போது, அவனுக்குப் பிடித்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்பட குறுந்தகடு அவளுக்கும் பிடிக்கிறது. ஆனால், அதன் உள்ளே ஒரு சிக்கல் இருப்பது அறியாமல், இருவரும் அந்த தகடுகளை வாங்குகிறார்கள். […]
ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-06-2015 *அனுப்ப வேண்டிய முகவரி […]
—-நாஞ்சில்நாடன் ’ஐஎனும் இந்தச் சொல், இன்று,இங்கு ஒரு தமிழ் சினிமாவின் தலைப்பாக அறியப்படுகிறது. அல்லது நான் என்ற பொருளில் வரும் ஆங்கிலச் சொல் I என்பதை நினைவுபடுத்தும். மேலும் சிலருக்கு கண் எனும் பொருளில் வரும் Eye எனும் சொல்லை. நம்மில் எவருக்கும் ஐ என்பது தமிழ்ச்சொல் அன்று. ஆனால் இந்த ஓரெழுத்துத் தமிழ்ச் சொல்லை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை எனும் எட்டுத்தொகை நூல்களும் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி […]
கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15 தலைமையுரை : நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன் வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான […]