பாடம் (ஒரு நிமிடக்கதை)

This entry is part 11 of 26 in the series 10 மே 2015

சந்தனா சமையலை முடித்துவிட்டு ஒவ்வொன்றாக உணவு மேசை மீது கொண்டு கொண்டு வந்து வைக்கலானாள். உணவு மேசை முன் நான்கு வயது மகள் வாணி உட்கார்ந்திருந்தாள். துறு துறு கண்கள், பொசு பொசு கன்னம், பலாச்சுளை நிறம், வகுப்பில் முதல் மாணவி, ஆண்டு விழாப் போட்டி என்றால் எல்லா வெற்றிக் கிண்ணங்களும் வாணிக்குத்தான். சொல்லிக் கொடுத்த எதையும் மறக்காத நினைவாற்றல். ஆனால் என்ன ? பிடிவாதம் மிகவும் அதிகம். கடைசியாகச் செய்த வெங்காயப் புளிக்குழம்பு மணம் நாசியை […]

இயல்பான முரண்

This entry is part 12 of 26 in the series 10 மே 2015

சத்யானந்தன் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை இருந்தும் என் எழுத்துக்கள் சொற்கள் இடைப்பட்டு புள்ளி ஒன்று உன்னாலே முளைத்து விடுகிறது இதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் என் முரண்பாடுகள் சில புதிதாய் சில வேறு வடிவாய் தடம் மாறுதல் இயல்பான முரண்

மிதிலாவிலாஸ்-13

This entry is part 13 of 26 in the series 10 மே 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றுதான் சித்தார்த்தை நர்சிங் ஹோமிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப் போகிறார்கள். அபிஜித் நான்கு மணிக்கு தான் வந்து விடுவதாகவும், இருவரும் சேர்ந்து சித்தார்த்தை வீட்டில் கொண்டு போய் விடுவோம் என்றும் சொல்லியிருந்தான். மதியம் மூன்று மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மைதிலி அபிஜித்தின் வருகைக்காகக் காத்திருந்தாள். சித்தார்த் டிசைன் செய்த ஆடைகளில் சோனாலியின் போட்டோக்களைப் பார்த்த பிறகு மைதிலிக்கு சித்தார்த் மீது பிரியம் மேலும் கூடிவிட்டது. அபிஜித்தும் காபி அருந்தும் […]

வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்

This entry is part 14 of 26 in the series 10 மே 2015

வையவன் தூங்கிக் கண் விழித்ததும் ஜின்னிக்கு சிரிப்புதான். மாயா ஜாலம் போல மனசை மாற்றும் சிரிப்பு. மூன்று மாதம் முடிந்து நான்கு ஓடுகிறது. கைக் குழந்தை. ஷேவிங் நுரையோடு தற்செயலாகத் திரும்பினான் அதியமான். ஜின்னி சிரித்துக் கொண்டிருந்தது. எந்தப் பறவை, எந்தப் பூ இப்படி சிரிக்கும்? யார் கற்றுத் தந்தது? அவனுக்கு ஞான மேரி நினைவு வந்தது. சிசுவான ஜின்னியைக் குளிப்பாட்ட வந்தவள். அவள்தான் சிரிக்க வைத்தாள். சிரித்துச் சிரித்துக் கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் சிரிக்கின்றன, நிலா […]

தொடுவானம் 67. விடுதி வாழக்கை

This entry is part 15 of 26 in the series 10 மே 2015

  விடுதி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. அதிகாலையிலேயே உற்சாகத்துடன் எழுந்து வகுப்புகளுக்குச் செல்வது இனிமையான அனுபவம். காலையில் பசியாறும் போது புது நண்பர்கள் கிடைத்தனர். அவர்களில் சில தமிழ் மாணவர்கள் என்னுடன் நெருக்கமானார்கள். அவர்களில் பெஞ்சமின் மிகவும் நெருக்கமானான். அவன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தான். தமிழ் நன்றாகப் பேசுவான். அவனுடன் மாலையில் அல்லது இரவில் ஆரணி ரோட்டில் வெகுதூரம் நடந்து செல்வோம். இரவில் நடப்பது கொஞ்சம் ஆபத்தானது. வீதியின் குறுக்கே பாம்புகள் நடமாட்டம் அதிகம். எதோ ஒரு அசட்டு […]

பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி

This entry is part 16 of 26 in the series 10 மே 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! உயிரினம் உருவாக சக்தி விசையூட்ட வேண்டும் ! கோடான கோடி யுகங்களில் உருவான பூமியும் ஓர் நுணுக்க அமைப்பு ! தனித்துவப் படைப்பு ! அகிலாண் டத்தில் நிகரில்லை அதன் படைப்பிற்கு ! நாமறிந்த […]

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5

This entry is part 17 of 26 in the series 10 மே 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் 5 அந்த வீடு நிசப்தமாய் இருந்தது. காரியம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ராகவ் வந்திருந்தான். அவன் அக்காவும் உடன் மாமாவும் வந்திருந்தார்கள். ஊதுவத்தி மணம் இன்னும் அந்த வீட்டை விட்டு சாவு மணம் அகலாதிருந்தது. ஏங்க யாழினி இங்க இருந்தா அழுதே செத்துடுவா உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடறீங்களா? என்றாள் சகாதேவனின் தாய் அதெல்லாம் எதுக்கு இங்கயே இருக்கட்டும், ராகவ் அப்பப்ப வந்து பார்த்து எதாச்சும் செலவுக்கு தந்துட்டு போவான். ஜாதகம் […]

சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

This entry is part 18 of 26 in the series 10 மே 2015

முருகபூபதி (அவுஸ்திரேலியா) படித்தோம் சொல்கின்றோம் சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில் பத்திரிகையாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே மாற்றமடையும்  உரைநடை தண்ணீரும்  தமிழ் இனமும் இரண்டறக் கலந்த வரலாறும் எமக்குண்டு.                              தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில் பாரதி, வ.வே.சு. அய்யர் முதல்  தற்பொழுது எழுதும் இமையம் வரையிலும் – இலங்கையில்  சம்பந்தன், வயித்திலிங்கம், இலங்கையர்கோன் முதல் இன்று எழுதும்  சமரபாகு சீனா  உதயகுமார் வரையிலும் -புகலிடத்தில்  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் நடேசன் வரையிலும் தொடர்ந்து இவர்களும் […]

‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை

This entry is part 19 of 26 in the series 10 மே 2015

வணக்கம். எனது பெயர் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் – www.pratilipi.com. எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ மின்னூலாக பதிப்பித்துக் கொள்ளலாம். (அமேசான் கிண்டில், கூகிள் புக்ஸ் போல). ஒரு மாதத்தில் சராசரியாக 100000 வாசகர்கள் எங்கள் தளத்தை உபயோகிக்கிறார்கள். தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால், தங்களிடம் இது குறித்து பேச விரும்புகிறேன். நன்றி. -சங்கரநாராயணன், ப்ரதிலிபி. […]

திரை விமர்சனம் – உத்தம வில்லன்

This entry is part 20 of 26 in the series 10 மே 2015

கலைஞானி கமலஹாசன் ஒரு அதிசயம். மொழியும் இசையும் அவரது அங்கங்களை அசைக்கும் விதம், காணக் காண ஆச்சர்யம். உத்தம வில்லன் ஒரு கலைப்படம். கமர்ஷியல் படமல்ல. மனோரஞ்சன் திரையுலக சூப்பர் ஸ்டார். அவரை உருவாக்கிய இயக்குனர் மார்கதரசியிடமிருந்து பிரிந்து, மசாலா படங்களில் நடித்து, உச்ச நட்சத்திரமாக ஆனவர். அவரை பாதை மாற்றி, தன் பெண்ணையும் கட்டிக் கொடுத்து, தன் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கும் மாமனார் பூர்ண சந்திர ராவ், மனோவுக்கு வெற்றியைக் கொடுத்தாலும், அவரது காதலியையும், அவள் […]