தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி

This entry is part 2 of 42 in the series 22 மே 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கிய உலகில் அதிகமாக எழுதி புகழ் பெற்றவர்களும் உண்டு. குறைந்தளவே எழுதி புகழ்பெற்றவர்களும் உண்டு. சங்க இலக்கியமான புறநானூற்றில்“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி மிகுந்த புகழைப் பெற்றவர் கணியன் பூங்குன்றனார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் தான் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருலட்சம் கவிதைகளுக்கும் மேல் எழுதிப் புகழ் பெற்றவராவார். இதனைப் போன்றே தமிழ்ச் சிறுகதை உலகில் மிகக் குறைந்தளவே […]

ரீங்கார வரவேற்புகள்

This entry is part 1 of 42 in the series 22 மே 2011

சில பூக்கள் வண்டுகளின் ரீங்கார வரவேற்புகளில் பழகிவிடுகின்றன…   ரீங்கரிக்க மாட்டாத வண்டுகளுக்கு தேன் பரிமாற எந்தப் பூவும் விரும்புவதில்லை…   ரீங்காரங்களின் வசீகரங்களில் தொலைந்துபோகும் வண்டுகள் தேயும் தன் முதுகெலும்புகள் மேல் காலம்தாழ்த்தி கவனம் கொள்கின்றன…   எதற்கோ பிறந்துவிட்டு ரீங்கரிக்கவே பிறந்திருப்பதாய் காட்சிப்பிழை காணும் வண்டுகளுள் கூடுகளையும், கிளைகளையும் அடையும் வண்டுகளின் பாடங்கள் சுவாரஸ்யமானவை…     – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)