சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –

This entry is part 12 of 42 in the series 22 மே 2011

‘மண்ணையும், மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாக அமைந்து விட்டால்,அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை! மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு’ என்கிறார் கவிஞர் புவியரசு. அப்படித் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த பேறுகளில் ஒருவர் சூர்யகாந்தன். வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் பார்வையும், வாழ்வின் வலி கண்டு உருகும் மனிதநேய மும் அவருக்கு அமைந்திருப்பதால் அவரது கதைகளில் மனித வாழ்வின் வதைகளும், போராட்டங்களும் உருக்கமாய்ச் சித்தரிக்கப் படுகின்றன. கொங்குநாட்டு மண்ணின் மைந்தரான அவர் தன் பிராந்தியம் மட்டுமின்றி சென்னை போன்ற இடங்களிலும் […]

உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்

This entry is part 11 of 42 in the series 22 மே 2011

இறுதி யுத்தத்தின் இறுதி போராளியை விழுங்கிய வாளில் இன்னமும் ரத்தக் கறை காய்ந்திருக்கவில்லை.   வெந்தழல் மேகங்களில் நீதித்தேவதைகளைக் கண்டதாக வாக்குமூலம் அளித்தவர்கள் கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள்.   பிசாசெழுதும் வரலாற்றினில் நம்பிக்கையின் பெயரால் சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு கோமாளிகளின் முகமூடி அணிவிக்கப் படுகிறது.   ஓராயிரம் நூற்றாண்டுகளாக மண்ணுக்கடியில் புதையுண்டிருந்த புரட்சியின் சொல்லை விடுவித்த கவிஞன், தானெழுதிய கவிதைகளை கிழித்தெறிகிறான்.   கோப்பைகளில் நிரம்பிய அழுகுரல்களை பருகும் அரக்கனுக்கு தெரியவேயில்லை தான் சுவைப்பது தீரா மௌனத்தினையே […]

திரிநது போன தருணங்கள்

This entry is part 10 of 42 in the series 22 மே 2011

மலர் கண்காட்சியில் சிவப்பு நிறத்தில் சின்னதாய் வெள்ளை நிறத்தில் வெகுளியாய் மஞ்சள்  நிறத்தில் மகிழ்வாய் … அத்தனையும் அழகு !! எதை பார்ப்ப்து எதை விடுவதென்ற தவிப்பை தவிர்க்க தெரியாமல் லயிக்க நேரமும் இல்லாமல் …       கால்பாத வளைகுழியில் பிடிக்க நினைத்தும் கடல் அலை இழுக்க … உருளை உருளையாக நகரும் மணல் துகல்கள் வியப்பான கிச்சுகிச்சு …       பிடிக்க நினைத்த தருணங்கள் உருளையாக கிச்சுகிச்சு மூட்டாமல் விசுக் […]

நகர் புகுதல்

This entry is part 9 of 42 in the series 22 மே 2011

அர்த்தமிழந்த வார்த்தைகள் சமைக்கும் தருக்கச் சகதியுள் அமிழ்ந்தென்ன லாபம் துடிதுடிக்க காலத்தைக் கொல்வதைத் தவிர கால்களையும் கைகளையும் குரல் வலையையும் சுற்றியிறுக்கும் மொழியின் வேர்களும் கொடிகளும் மண்டிய வனம் சொற்களுக்கு அனுமதியில்லா நகரமொன்று வேண்டும் வன வாசம் துறந்து நகர் புக.   – வருணன்  

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….

This entry is part 8 of 42 in the series 22 மே 2011

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளான தேமுதிக, இடதுசாரி கட்சிகள், மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் எதிர்பார்த்த படியே மகத்தான வெற்றி பெற்றுள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகளுடன், சில வார்த்தைகள்.  இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான, ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான வாக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலில் நிலவும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான எதிரான, இலங்கை போன்ற நாடுகளுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் வாக்களிப்பாகவும் கொள்ளலாம். இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு […]

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11

This entry is part 7 of 42 in the series 22 மே 2011

யுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதி யுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக மரபுகளை நிலை நிறுத்துபவனாகவே உணர்ந்தான். ஒரு அரசன் என்னும் நிலையில் பல மரபுகளை நிலை நாட்ட அவன் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வந்தது. க்ஷத்திரிய தர்மம் என்று முன்னாளில் கடைப்பிடிக்கப் பட்டவற்றில் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து கவனிக்கும் போது நம்மால் […]

தூசி தட்டுதல்

This entry is part 6 of 42 in the series 22 மே 2011

  உலக உருண்டையின் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் அழகிப்போட்டி.. மட்டைப்பந்து போட்டியில் நெட்டை வீரர் ஒருவரின் ரெட்டை சதம்.. அரைகுறை ஆடை நடிகையின் ரகசியதிருமணமும் தொடரும் விவாகரத்தும்.. தெற்கில் எங்கோ ஒரு வாய்க்கால் தகராறில் நிகழ்ந்த குரூரக் கொலை.. நம்ப வைக்க முயற்சிக்கும் தேர்தல் அறிக்கைகளும் அது குறித்த ஆட்சி மாற்றங்களும்.. எத்தனை முறை வாய் பிளந்து பார்த்தாலும் திருந்தாத மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் உண்மை மகான்களும்..   என எதுவும் கிடைக்காத அன்று மீண்டும் தூசி […]

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

This entry is part 5 of 42 in the series 22 மே 2011

எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த ‘யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்’ மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை மின்னச் செய்தது.   நான் யாழ்ப்பாணத்தில் வைத்து, வெவ்வேறு பிண்ணனிகளுடன் வந்திருந்த இளைஞர்கள் சிலருடன் […]

வார்த்தையின் சற்று முன் நிலை

This entry is part 4 of 42 in the series 22 மே 2011

இதுவரையிலும் உனக்கு சொல்லப்படாத வார்தையை என் மனதில் தேடிகொண்டிருக்கிறேன் அவை உனக்கு பல ரகசியங்களை சொல்ல கூடும் சற்று சந்தேகி .   சில பொய்மையும் அதன் கண்ணீரும் வடிந்தோடி கொண்டிருக்கும் அதில் சற்று மூழ்கி எழுந்து விடு .   அவைகளை ஒரு சொல்லாகவே நீ எதிர்கொள்ளவில்லை என்பதை சற்று நிம்மதி அளிக்கிறது .   வாழ்வியலின் அடிப்படை பதிவிறக்கம் போல உனக்கு சொல்லப்பட்டதை தகர்க்க செய்யும் வார்த்தையாய் அவைகளை மேலும் நம்பிக்கையாக்குகிறாய் .   […]

இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்

This entry is part 3 of 42 in the series 22 மே 2011

1. என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள்தாம். சமூகம், நாடக மேடையில் ‘காட்சி ஜோடனையாக’ மட்டும் இருந்தால்போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன.மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும்தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். 2. அன்றாடம் சந்திக்கும் பஸ் ரயில் பிரயாணிகள், காரியாலய சிப்பந்திகள்,டாக்சிக்காரன், பிச்சைக்காரன், பெரிய மனிதன், சிறிய மனிதன் எல்லோரும்பிரும்மாண்டமான பட்டைக் கண்ணாடியின் பல பட்டைகள். இவர்கள் எல்லாக்காலத்திலும் இருக்கிறவர்கள். இவர்களைத் […]