அசோகனின் வைத்தியசாலை – கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ […]
_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள் இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால் கை நழுவுகிற தருணங்களைப் பிடித்து விடலாம் நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட சொல்கிற ஒவ்வொரு இடமாற்றமும் வாழ்விலிருந்து விடுபடுகையில் , மரணத்தை நளினத்துடன் தழுவப் பயிற்றுவிக்கும் ஒத்திகைகள்…… – சித்ரா (k_chithra@yahoo.com)
ஜெயானந்தன். எல்லாமாய் நின்றேன் எனக்கு பசி கிடையாது எனக்கு ஆசை கிடையாது. மோகம் கிடையாது, காமம் கிடையாது. யாருமற்ற அநாதையாய் வானாந்தரத்தில் நின்றேன். மீண்டும் மீண்டும் சூரியனும், சந்திரனும் காற்றும் மழையும், புயழும், பூகம்முமாய் என்னை தீண்டிச் செல்லும். எல்லாமுமாய் நின்றேன் யாருமற்ற அநாதையாய் ..! – ஜெயானந்தன்.
(Song of Myself) தீயணைப்பாளி நான் .. ! (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நானொரு விடுதலைக் கூட்டாளி இரவில் வெளிப்புறக் கூடாரமே எனது குடில். தீரரின் பேருள்ளம் கூர்ந்தறிபவன் ! தற்கால வல்லமையும், எக்கால வல்லமையும் புரிந்தவன். நானோர் அடிமை வேட்டை நாய் நாய் கடித்தால் ஓடுபவன் நரகமும், நம்பிக்கை இழப்பும் என் மேல்தான். குறி வைப் போனை முறித்து […]
புவனாவா அது… துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனல் அவளைப் பார்த்ததும் எரிமலைக் குழம்பாய் கொதித்து கை நரம்புகள் புடைத்து கால்கள் தன்னிச்சையாக அவளை நோக்கி நடந்தது. கடைசியாய் ஒரு தரம் அவளைப் பார்த்து அக்னிச் சொற்களை அள்ளி தெளித்திட அலைபாயும் மனதுடன் தன் நடையை துரிதப்படுத்தினான். ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிருக்கு உயிராய்… ஈருயிர் ஓர் உயிராய் […]
மொழிவரதன் புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக வந்துள்ள தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி என் கரம் கிட்டியது. அழகான முகப்பு அட்டைப் படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது. வானத்தில் உலாவும் ஒரு தேவதையின் தோற்றமும், பறக்கும் அவளது மெல்லிய ஆடை, சிறகுகள் எல்லாம் வண்ணத்தால் மிளிர்கின்றன. ஊதா நிறத்திலான பின்னணி நிறமும், அதன் கீழே இளம் பச்சை நிறமும் கண்ணுக்கு இதமாக உள்ளன […]
கம்பன் உறவுகளே வணக்கம்! திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்! அனைவரும் வருகைதந்து சிறப்பிக்கவும் அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன் தலைவா் கம்பன் கழகம் பிரான்சு
தேமொழி நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம். உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம். இதனால் மூன்றாம் உலகப் போரும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கப் படுகிறது. நீராதாரத்தைத் தடையின்றிப் பெற மரம் வளர்த்தல், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் தன்னார்வக் குழுக்களும் அரசுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அத்துடன் நீராதரத்தின் தேவையை திட்டமிடத் தொழில்நுட்பமும் […]
ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல் தொய்வுகளேதுமின்றி எழுதிவந்த விரல்கள் வெளியெங்கும் புன்னகையை விதைக்கும் இதழ்களோடும் விழிகளோடும் சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன இரவு பகல் காலநிலையென மாறும் காலக்கணக்குகளறியாது ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன் ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது கண்களில் பேரன்பு பொருத்தித் தலைகோதி ஆரோக்கியத்தைச் சொட்டுச் சொட்டாக ஏற்றி எனது புலம்பல்களைச் சகித்தபடி நடமாடிய செவிலித்தாய்களில் அக்கா உன்னைக் கண்டேன் ஆறுதலும் அக்கறையும் மிகுந்த வார்த்தைகளை உன்னழுகையில் குரல் இடராது தொலைபேசி […]
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -3 மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் […]