பாலகுமாரசம்பவம்

This entry is part 21 of 22 in the series 16 நவம்பர் 2014

எஸ். ஸ்ரீதுரை கடிந்து கொண்டவர்கள் கை நீட்டுகிறார்கள் – முகத்தைத் திருப்புகிறான் மனிதன், முந்திச் சிரிக்கிறது குழந்தை; புதிதாக வந்த அறிமுகம் புன்சிரிப்பு சிரிக்கிறது – சந்தேகப் படுகிறான் மனிதன், சந்தனமாய்ச் சிரிக்கிறது குழந்தை; வேற்று மனிதன் இனிப்பை நீட்டுகிறான் – விலகிச் செல்கிறான் மனிதன், விரைந்து சுவைக்கிறது குழந்தை; பறித்துக் கொண்டவனைப் பகைக்கிறான் மனிதன், பிடுங்கிய பொம்மை திரும்ப வந்ததும் பழம் விடுகிறது குழந்தை; விரோதம் சந்தேகம் வேற்றுமை பகைமை எதுவும் பாராட்டாமல் குழந்தைகளாகவே இருந்துவிட்டுப் […]

நிலையாமை

This entry is part 20 of 22 in the series 16 நவம்பர் 2014

எஸ். ஸ்ரீதுரை வாழ்க்கையின் நிலையாமை, வயசாளிகள் படும் பாடு, வசதியான ஹோம் எதுவென்ற விசாரம், அத்துவைத தத்துவம் பற்றிய அரைகுறைக் கேள்வி பதில், ‘அந்நியன்’ படப்புகழ் கருடபுராண தண்டனைகள், ஏகாதசியன்று நேரும் இறப்பின் மகிமை, கல்யாணத்தை விடவும் அதிகமாகிவிட்ட ‘காரியச்’ செலவுக்கான கடன்கள், ‘போய்ச்சேருவதற்கான’ காத்திருப்பு பற்றிய கதையளப்புகளுடன் கூடிய மயானம் நோக்கிய யாத்திரைகள் யாவும், எரித்துவிட்டுத் திரும்புகையில் பெரும்பாலும் இறந்தவரின் சொத்துக்கணக்கையும் அந்தரங்கங்க வாழ்வையும் பற்றிய விவாதங்களுடனே முடிவுக்கு வருகின்றன…. sriduraiwriter@gmail.com