This entry is part 1 of 4 in the series 18 நவம்பர் 2018
கோ. மன்றவாணன் நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நவீன கவிதை குறித்த கலந்துரையாடல் என்று நிகழ்ச்சியைத் திட்டமிட்டு இருந்தார்கள். முதலில் ஒரு நண்பர் எழுந்தார். தலைப்பை உள்வாங்காமல் தன்கருத்துகளை- தன்கொள்கைகளை எல்லாம் ஜெயமோகனின் வெண்முரசு நீளத்துக்கு அவர் பேசினார். எந்தத் தலைப்பு என்றாலும் எல்லா நிகழ்விலும் இதையேதான் இவர் பேசுவார் என்று தோழர் ஒருவர் தோலுரித்துச் சொத்தைப்பழம் இதுவென்று காட்டினார். அவரால் அந்த நிகழ்வு திசைதொலைத்த பயணமாக மாறியது. […]
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி என்றும் கூறப்படிருப்பதைக் காண முடிகிறது. ===================================================================================== குரக்குப் பத்து—1 அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் பசுப்போல் பெண்டிரும் பருகுவன் தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே! [அருந்த=தின்ற; பகர்வர்=வணிகர்; பங்கு=பை தொல்=பழமை; கேள்=நட்பு; தொல்கேள்=பல பிறவிகலிலும் தொடர்ந்த […]
“சமகாலக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சத்தியாவேசக் கதைகள்“ நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட படைப்பாளிகளை விட, கண்டு கொள்ளப்படாத தரமான படைப்பாளிகள் பலர் உண்டு. கண்டு கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பாக அடிக்கடி பேசப்படுபவர்களாக ஆகிறார்கள்.. காலத்திற்கேற்றமாதிரி மாறிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கொள்பவர்கள் இருந்தாலும், அதெல்லாம் நம்மளால முடியாதுங்க….என்று ஓரமாய் ஓதுங்கி தங்கள் இலக்கிய வாசிப்பு ரசனைக்குத் தாங்களே தீனி போட்டுக் கொள்பவர்களாய் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட்டிருப்பவர்கள், […]