அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில் பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது வேட்டுச் சத்தம் கேட்டதும் யானைகள் ஓடி இடம் பெயர்ந்தன கிரகணத்தில் சூரியன் மறைந்ததும் பறவைகள் மரங்களுள் தஞ்சமடைந்தன இதில் எதையுமே பார்த்ததில்லை போலும் அவன் மூர்க்கத்துடன் எறிந்தான் என் மீது முதல் கல்லை […]
அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது? எந்த ஒரு பிரதியும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதாவது அதை வாசித்த பின் நம் மனதுள் ஆழப்பதியும் அதன் மையப் பொருளை வைத்தே முடிவு செய்யப்பட வேண்டும். ஜெயந்தியின் நாவல் நம்முள் எதுவாக ஆழப்பதிகிறது? சிங்கப்பூரில், இந்தியாவில் புனே, […]
The Bhagavad Geetha, written by me in free rhyming verses has been brought out by Cyberwit.net, Allahabad, under the caption THE LYRICS OF THE LORD.
முருகபூபதி – அவுஸ்திரேலியா ஈழத்து பேச்சுவழக்கின் பொதுப்பண்புகள் இந்தியப்பேச்சுவழக்குடன் வேறுபடும் தன்மைகள் பற்றி ஆய்வுசெய்துள்ளார். தமிழ்மொழி நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாறுபட்ட ஒலியில் பேசப்படுகிறது. உதாரணங்கள் ஏராளம். சமகால தமிழ்த்திரைப்படம் – தொலைக்காட்சி நாடகங்களில் வரும் தமிழ் வேறுபட்ட தளத்திலிருந்து ஒலிக்கிறது. புகலிடத்தில் ஆங்கிலம் அல்லது அய்ரோப்பிய மொழிகளின் கலப்புடன் தமிழ் ஒலிக்கிறது. இந்தப்பின்னணிகளுடன் எனது பூர்வீக ஊரில் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் கத்தோலிக்க மக்களின், குறிப்பாக அவர்கள் மத்தியில் […]