சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwELia_RAn0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZCZdrfDHwgU http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_yWiE8yFPtk பிரபஞ்சம் மாறி வரும், உப்பி விரிந்து செல்லும். கால வரையற்ற பிரபஞ்சமே கருவாகி உருவாகி வருகிறது ! காலத்துக்கு ஆதியந்தம் இல்லை ! முறிந்த கருந்துளைக் கர்ப்பத்தில் பிறக்கும் சேய்ப் பிரபஞ்சம் ! மாண்ட பிரபஞ்சம் உயிர்த்து மீண்டெழும் ! ஆதி அந்த மற்ற காலத் தூரிகை வரையும் கோலமே மூலமும் முடிவு மில்லாப் பிரபஞ்சம் ! பிரபஞ்சம் முறிந்து சேயாய்ப் பிறக்கும் […]
க.நாகராஜன் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ’வீரப்பனின் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் நூலை சமீபத்தில் நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கன்னடத்தில் எழுதியவர்கள் கிருபாகர் மற்றும் சேனானி. மீசை புகழ் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பதினான்கு நாட்கள் அவன் பாதுகாப்பில் இருந்த இரண்டு வனவியலாளர்கள் எழுதிய நூல் என்பதால் ஒரு துப்பறியும் நாவலைப் படிக்கும் முன்தயாரிப்போடு இறங்கினேன். ஆனால், சமூக நாவலைப்போல வாழ்க்கைச்சுமைகள், அலைச்சல், வேட்டை, காட்டைப்பற்றிய ஞானம், விலங்கினங்களைப்பற்றிய புரிதல், நம்பிக்கைகள், நகைச்சுவை என பலவிதமான […]
வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள் என்றும் நகர்ப்புற விளையாட்டுக்கள் என்று இரண்டு பிரிவாக பிரிக்கலாம். நாட்டுப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பரவியது ஒரு வகை. இன்று நாம் காணும் நகர்ப்புற விளையாட்டுகள் பெரும்பாலும் நாட்டுப்புற விளையாட்டுக்களில் கிடைக்கப்பெற்றிருந்தன. ஆண்கள் விளையாடும் கபடி, […]
ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி விவரிக்கிறது.கவிதையின் கணங்களை பிரித்துக் காட்டுவது எனவும் சொல்லலாம். குட்டி ரேவதியின் காதலியரின் அரசி சாப்போவின் கவிதைகளை முன்வைத்து சுயமோகநிலையை வரைந்து காட்டுகிறது. சவுதிப் பெண் திரைப்பட இயக்குநர் ஹைபா எத்தனை இடையூறுகளுக்கிடையில் ஒரு இயக்குநராகப் பரிணமிக்கிறார் என்பதைச் சொல்லிச் செல்கிறார் பீர் முகமது. ஸ்டாலின் ராஜாங்கத்தின் […]
ரமணியை அந்தப் பரதேசிப் பெண்ணிடமிருந்து பிரிப்பதற்கு என்ன வழி என்று எவ்வளவோ யோசித்தும் கணேசனுக்கு உருப்படியாக எந்தத் திட்டமும் புலப்படவில்லை. சினிமாக்களில் வருவது போல் ஆள் வைத்து அந்தப் பெண்ணின் கையையோ, காலையோ முறித்தாலென்ன என்று கூட ஒரு கணம் அவர் யோசித்தார். பின்னர் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று தோன்றியதில் சினிமாத்தனமானது என்று தம்முள்ளேயே முனகிக்கொண்டு அவ்வெண்ணத்தைக் கைவிட்டார். அப்படியே அவர் செய்தாலும், மிகவும் நல்லவனான ரமணி அவர்தான் அதைச் செய்தவர் என்பது தெரியவரா […]
அன்று காலை குளிப்பதற்கு குளியல் அறைக்குச் சென்றேன். அது பெரிதாக இருந்தது தனித்தனியாக கழிவறைகள் இருந்தன. ஆனால் குளிக்கும் இடம் பொதுவானது. ஒரு பெரிய தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது.அதிலிருந்து குவளையால் மொண்டு ஊற்றித்தான் குளிக்கவேண்டும். ஒரே நேரத்தில் பலர் குளிக்கலாம். அங்கு ஒரு வினோதம் கண்டேன். நான் குளித்தபோது ஐந்து பேர்கள் வேறு விதமாக இருந்தனர். நாம் நல்ல சிவப்பு என்போமே அந்த வெள்ளை நிறத்தில் இருந்தனர். ஆஜானுபாகுவாக உயரமாகவும் காணப்பட்டனர். மீசை தாடியுடன், பெண்களுக்கு உள்ளதுபோல் […]
தினேசுவரி , மலேசியா அவசரத்தில் அன்பு பார்த்து மணம் ஏற்ற தருணங்கள் தகரங்களாய் மட்டுமே துருபிடித்து… நல்ல வேளை நினைவுகள் நிழலாகவும் புகையாகவும் இல்லை புதைத்துவிட ஏதுவாய்… பொன் பித்தளையாகி கறுத்து கழுத்து வரை சீழ்பிடித்து … மீந்தது மிச்சம் இருந்து காய்ந்து போன இரத்த வாடை… இது வாடகை வாழ்க்கை உயிருக்கு மட்டுமல்ல உடலுக்கும்தான்… இது ஆண்மைக்கும் பெண்மைக்குமான முரண்பாடு அல்ல … ஆம்பிளைத்தனத்தில் கீழ்மட்ட செயல்பாடு … உயர்மட்ட இக்கல்வியை பள்ளியறை சென்றுதான […]
By – IIM Ganapathi Raman 1. //திருக்குறளிலிருந்து சிலப்பதிகாரம் கம்பராமாயணம் வரை அத்துணை தமிழ் இலக்கியங்களையும் இழித்துப்பழித்தமைக்கு உங்கள் யாரிடமிருந்தும் பதில் இல்லை என்பதால் வாதத்தை திசை திருப்பப் பார்க்கிறீர்கள்.// 2. //ஈழத் தமிழ்ப்புலவரை தமிழ் விரோதியான ராமசாமி நாயக்கர் இழிவு செய்ததற்கு உங்களிடமிருந்தெல்லாம் ஏன் பதில் வரும்.// இவை கிருஸ்ணகுமார் என்பவர் வைத்த இரு விமர்சனங்கள் திரு வெ.சாமிநாதனின் கட்டுரையின் பின்னூட்டப்பகுதியில். முதல் பாகத்தில் இலக்கியங்களை இழித்துரைத்தலைப்பற்றிப் பார்ப்போம். இரண்டாம் பாகத்தில் ஈழத்தமிழ்ப்புலவருக்கும் ஈவேராவுக்கு […]
(மணிமாலா) கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் சென்ற வெள்ளிக்கிழமை 31-10-2014 அன்று ஸ்காபரோவில் உள்ள கொன்வின்ஷன் சென்ரரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதை, ஈழத்தமிழ் எழுத்தாளரான குரு அரவிந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு […]