இங்கே..

This entry is part 14 of 44 in the series 16 அக்டோபர் 2011

. பொய்கள் எல்லாம் மெய்யென்று மேடையேறி நடிப்பதாய்.. புரியாத வாக்குறுதிகள் புதிதுபுதிதாய் அரசமைத்திட ஆதாரமாய்.. ஏமாற்றுதல் என்பது ஏகமனதாய் ஏற்றுக்கொண்ட கொள்கையாய்.. ஏணிகளை எட்டி உதைப்பது என்றும் காணும் காட்சியாய்.. சுரண்டல் என்பது சுதந்திரத்தின் ஒரு பாகமாய்.. சூழ்ச்சியுடன் காலை வாருதல் கைவந்த கலையாய்.. எல்லாம் நடப்பது இங்கே அரசியலில்தான்…! -செண்பக ஜெகதீசன்…

அதில்.

This entry is part 13 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஓர் எண்ணம் மன தொலைவுகளை கடந்து கொண்டிருக்கிறது இக்கணம் . அதில் நம் கனவுகள் மீதம் கொண்டு உருவாக்கப்படுகிறது இந்த இரவு. அதில் சிதறல் கொண்டிருந்த ஒரு மவுனம் மன ஒலிகளில் விழுங்கப்படுகிறது . அதில் ஒன்றும் நிகழ்த்தியிருக்கவில்லை ஒரு அக மவுனமே அனைத்தும் சாத்தியமாக்கியது . அதில் என்னை விதைக்கும் பிரபஞ்சத்தில் இயக்கமாவேன் உணர்த்துவதற்கு காலம் பின் தொடரும் பிறகு நீயும் . அதில் நிறைவு தன்மையற்ற பகிர்வுகள் நேற்றைய மீதம் கொண்டு வளர்த்தெடுக்கப்படுகிறது . […]

வீடு

This entry is part 12 of 44 in the series 16 அக்டோபர் 2011

விடுமுறை நாளொன்றில் வீடு சுத்தம் செய்யுகையில் விடுபட்ட இடங்களில் விரல்கள் துலாவியதில் தொலைந்துபோன பொம்மைக்காரின் ரிமோட் தீர்ந்துபோன பேட்டரிகள் மூடிகள் மூடிகளற்றப் பேனாக்கள் பொத்தான்கள் பொத்தான் குறைந்த சொக்காய்கள் ஓரிரண்டு உலர்ந்த உணவுத் துணுக்குகள் என எல்லாவற்றையும் அகற்றியும் கைப்பற்றியும் தொடர்ந்து அத்தனைப் பொருட்களையும் அதனதன் இடத்தில் அடுக்கியும் நிறுத்தியும் அழகுற வைத்த்தும் ஏனோ ஷாப்பிங் மாலின் நடைபாதை கடைகளின் கட்டுக்குள் இருப்பதுபோலொரு உணர்வு வியாபிக்க பிள்ளைகள் பள்ளிக்கூடம்விட்டு வரும்வரைக் காத்திருக்கலானேன் மீண்டும் கலைத்துப் போட்டு வீடாக […]

அலைகளாய் உடையும் கனவுகள்

This entry is part 11 of 44 in the series 16 அக்டோபர் 2011

சங்கர பாலசுப்பிரமணியன் தன் சுய பிம்பத்தை நீரில் பார்த்து கொத்துகிறது பறவை ஒன்று அலைகளாய் சிதறிச் செல்லும் பிம்பங்கள் மறுபடியும் கூடுகின்றன இரவு வரை கொத்திக் கொண்டேயிருக்கும் பறவை பிம்பத்தை அழித்து விட்ட மகிழ்வில் பறந்து செல்கிறது களிப்பில் அதற்குப் புரியவில்லை பிம்பத்தை அழித்தது இருள் என்று அதற்குப் புரிவதேயில்லை பிம்பத்தை அழித்தது இருள் என்று நானும் பறவையைப் போல உடைத்துக் கொண்டே இருக்கிறேன் என் வாழ்வின் கனவுகளை அலை அலையாய் உடைந்து செல்லும் கனவுகள் என் […]

இதுவும் அதுவும் உதுவும்

This entry is part 10 of 44 in the series 16 அக்டோபர் 2011

சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக் கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டேப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டு விடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் […]

புரட்டாசிக் காட்சிகள்

This entry is part 9 of 44 in the series 16 அக்டோபர் 2011

புலால் தவிர்த்துச் “சைவ”மாகிப் போன வைஷ்ணவர்களின் உதட்டிலும் நெற்றியிலும் விதவிதமான நாமங்கள். வெங்கட் ராமா கோவிந்தா எனக் கூவிவரும் பக்தர்களுக்குப் பிடியரிசிபோட வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா ரேஷன் கடையிலிருந்து. பக்தர்கள் வரிசைக்காக மூங்கில்கொண்டு கட்டியிருக்கிறார்கள் பெருமாள் கோவிலில் தூணையும் அதில் நிற்கும் அனுமாரையும். அடுத்துக் கட்டியிருந்த பசுமாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கச்சொல்லி வற்புறுத்திகொண்டிருந்தான் வியாபாரி மாடு அவனுடையதென்று சொல்லாமல் _ ரமணி

எஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு

This entry is part 8 of 44 in the series 16 அக்டோபர் 2011

(கே.எஸ்.செண்பகவள்ளி) கடந்த ஆகஸ்ட் மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் மலேசியத் தலைநகர் குவாலா லும்பூர் ‘கிராண்ட் பசிபிக்’ தங்கும் விடுதியில் மூன்று நாள் சிறுகதைப் பயிலரங்கினை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தியது. இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றிய முனைவர் முல்லை இராமையா ஒரு மாதகாலமாக தொய்வில்லாது உழைத்து நல்லதொரு பங்களிப்பை வழங்கினார். இந்தியாவில் ‘தாகூர்’ விருது பெற்ற முதல் தமிழர் என்ற சிறப்புக்குரிய தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களைத் தலைமைப் பயிற்றுனராகக் கொண்டு நடத்தப்பட்ட இம்மூன்று நாள் […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்

This entry is part 7 of 44 in the series 16 அக்டோபர் 2011

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 21அன்று நடந்தது. 2010ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தினசரி, மாத, வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு செய்து கதைகளுக்கு ரொக்கப் பரிசளிக்கும் திட்டத்தைச் சங்கம் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. காலாண்டுக்கு ஐந்து கதை வீதமாக ஆண்டுக்கு இருபது கதைகளைத் தேர்வுச் செய்து அவற்றுக்குத் தலா இருநூறு வெள்ளி பரிசளிக்கப்பட்டது. தேர்வுச் செய்யப்பட்ட இருபது கதைகளிலிருந்து ஒரு கதையைத் தேர்வுச் செய்து […]

மீண்டும் ஒரு முறை

This entry is part 6 of 44 in the series 16 அக்டோபர் 2011

மீண்டும் ஒரு முறை வேண்டும் எனக்கேட்கிறது உயிர், அந்த சிலிர்ப்பை.. உடல், அந்த பறத்தலை.. மனம், அந்த புல்லரிப்பை.. நீ கேட்ட அந்த நொடி “என்னோடு வருவாயா வாழ்வு முழவதும்?” பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட வாக்குவாதங்களுக்கிடையே.. “பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!” என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது! “அழகாய் இருக்கிறாய்!” என்று நீ ரசித்த தருணங்கள்தான் என் முகப்புத்தக முகப்பைப் பிடித்தன அன்று.. முகப்புத்தகப் படங்களில் பார்த்து கூட உனக்கு ரசிக்கத் தோன்றுவதில்லை […]

ஒருகோப்பைத்தேநீர்

This entry is part 5 of 44 in the series 16 அக்டோபர் 2011

கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர் சற்று நேரத்தில்விழித்து எழக்கூடும். அதற்க்குள் தயாரிக்க வேண்டும் அவர் அருந்த ஒருகோப்பைத்தேநீர். RAVIUTHAYAN raviuthayan@gmail.com