கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! (கட்டுரை 1)

This entry is part 3 of 45 in the series 2 அக்டோபர் 2011

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே […]

ஆத்மாவில் ஒளிரும் சுடர்

This entry is part 2 of 45 in the series 2 அக்டோபர் 2011

      பசுமையான, நெஞ்சை ஈர்க்கும் வண்ணம் கச்சிதமான அட்டைப் படத்தைக் கொண்ட அந்தப் புத்தகத்தைக் கண்ட போது, உடனேயே வாங்கிப் படித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுப் போனது. அதிலும் சுரா அவர்களின் இளமைத் தோற்றம் எங்கள் குடும்பத்து சாயலாக, அப்படியே அச்சு அசலாக ஒத்து இருந்ததாக உணரவே, மனதில் சட்டென்று பரவிய ஈரமும் நெருக்கமும் என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டன.   திரு சுரா அவர்களின் துணைவியார் அவரோடு இணைந்த வாழ்க்கையின் சாராம்சங்களையும், […]

வரலாற்றின் தடத்தில்

This entry is part 1 of 45 in the series 2 அக்டோபர் 2011

என் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார். ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஏதேதோ காரணங்களை அடுக்கி விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பத்தை அவருக்காக எழுதிக் கொடுக்கும் வேலையை என்னிடம் ஒப்படைத்துவிடுவார். என் முணுமுணுப்புகளை அவர் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அந்தப் பத்து நாட்களில் ஊர் சுற்றிய அனுபவத்தை அவர் விவரித்துச் சொல்வதைக் கேட்டு மனம் மயங்கி […]

பேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….

This entry is part 39 of 45 in the series 2 அக்டோபர் 2011

கோவிந்த் கோச்சா ஒவ்வொரு தெருவும் சுத்தமாக அழகாக இருக்கனும் என்று வீடுகளின் மதில் ஓரம் சென்னையில் சிறு சிறு செடிகள் வைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் எக்ஸ்னோரா முயற்சி… ஆனால் அது இப்போது கண்டுள்ள அவதாரம்…? சென்னையில் ரோட்டை ஆக்கிரமித்து அன்றாட வயிற்று பசி தீர ஏதாவது சிறு கடை போடுபவர்கள் போலீஸ் கொண்டு அப்புறப்படுத்தப்படுவர்…. ஆனால் கீழ்கண்ட மாதிரியான ஆக்க்கிரமிப்புகள்…? படத்தில் நீங்கள் காண்பது சென்னை இந்திரா நகரில் எடுத்தது.. தனி வீடு.. குறைந்தது 6கோடி […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 13

This entry is part 14 of 45 in the series 2 அக்டோபர் 2011

நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு வாய்ப்பை வென்றெடுக்கவும், போராடி ஒரு வசதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், குற்றம் சாட்டவும், தன்னிலையை விளக்கவும் என புறவுலகில் நம் நிலைப்பே பேச்சில் தான் இருக்கிறது. எப்போது பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், […]