ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng (Nuclear), கனடா பாரத தேசத்தின் விண்ணலை முன்னோடி ஆராய்ச்சி விஞ்ஞானி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சி யில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் ரஷ்ய […]
துர்கேஸ்வரி தன் சீனக் கணவனைக் காதலித்துக் கொண்டிருந்த போது மிகவும் தான் சந்தோஷமாய் இருந்தாள். மென்மையான அவனின் குணமும், பிறரை, முக்கியமாய் பெண்களை மதிக்கும் அவனது தன்மையும் அவளை மிகவும் கவர்ந்தன. அம்மாவை அலட்சியமாய் நடத்திய அப்பாவைப் பார்த்தே வளர்ந்தவளை, அவனது சுபாவம் வீழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை. அவனுடன் சாங்கி பீச், கேத்தே திரையரங்கம், கோப்பிக் கடை என்று சுற்றிய போது, பல தலைகள் இவர்களை நோக்கி திரும்பின. பொதுவில் இந்திய ஆண்களுடன் மற்ற இனப் […]
மீட்சி என்னும் சிற்றிதழில்தான் நான் கோணங்கியின் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன். அதில் அவர் எழுதியிருந்த மதனிமார்கள் கதை என்னும் சிறுகதை வெளிவந்திருந்தது. நான் அதை மிகவும் விருப்பத்துடன் வாசித்தேன். தொடக்கத்திலிருந்து முடிவுவரைக்கும் ஒரே வேகம். சொந்த ஊர் ஏக்கமும் சொந்த மனிதர்கள் ஏக்கமும் எனக்குள் எப்போதும் நிறைந்திருக்கும் உணர்வுகள் என்பதால் அந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. நான் அப்போது ஹோஸ்பெட் என்னும் ஊரில் வேலை பார்த்துவந்தேன். அந்த ஊரில் வெங்கடேஷ் என்னும் நண்பரிருந்தார். வழக்கறிஞர் […]
(டி.ஆர்.மகாலிங்கம்) சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் […]
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அன்பு தெரியாமல் வளர்ந்துவிட்டேன். அது கிராமமாக இருந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை என்று கருதுகிறேன். அங்கு அப்பாவுடன் வளர்ந்த பிள்ளைகள் என்னைவிட எந்த விதத்திலும் சொகுசாக இருந்ததாகத் தெரியவில்லை. விவசாய வேலை காலங்களில் பெரும்பாலான பெற்றோர் நாள் முழுதும் வயல் வெளியில்தான் கழித்தனர். இருட்டிய பின்புதான் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறு பிள்ளைகள் பள்ளி செல்வதும் தெருவில் விளையாடுவதுமாக இருப்பார்கள். என்னுடன் விளையாடும் […]
ரங்கம்மா டீச்சர் பிடிவாதமாக மருத்துவ சிகிச்சை வேண்டாம் என கூறி விட்டார். எனவே ரங்கம்மா டீச்சரின் ஆப்த நண்பரும் அந்த நட்பின் காரணமாக இரண்டு தலைமுறை உறவினர்களின் பாராமுகத்தை எதிர் கொள்ள காரணம் ஆனவருமான மகாலிங்கம் வீட்டில்தான் ரங்கம்மா டீச்சரின் கடைசி தருணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. சுவாசத்தில் சில நாழிகை தெளிவு ஏற்படும்.அந்த நேரம் டீச்சர் முகத்தில் ஒரு தெளிவு ஏற்படும்.அந்த சமயம் ரங்கம்மா டீச்சரின் முகம் பிரகாசமாகும்.” இப்பல்லாம் நிறைய மேடைகச்சேரி கொடுக்கிறாளே புடவை விளம்பரத்துகேல்லாம் […]
ஹார்ட் பீ டிரஸ்டிற்கு உதவ முன்வந்துள்ள பண்புடன் குழும நண்பர்கள் ஆசிஃப் மீரான், புவனா கணேசன், மற்றும் கோகுல் குமரன் (கூகுள் ஜி) ஆகிய அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பண்புடன் குழுமத்தில் நானும் ஒருத்தி ஆகையால் ஆர். வேணுகோபாலன் அவர்களின் வாழ்த்துக்களை மனமுவந்து ஏற்கிறேன். ஹார்ட் பீட் டிரஸ்டு உருவாகக் காரணமாக இருந்த என் வாழ்க்கைப் பின் புலங்களைக் குழும / இணைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். […]
படிக்க: http://pesaamoli.com/index_content_23.html நண்பர்களே, பேசாமொழி இதழில் 23வது இதழ் வெளியாகிவிட்டது. கீலோ பொண்டகார்வோவின் அருமையான நேர்காணல் ஒன்றும், அவரது ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் பற்றிய நேர்த்தியான கட்டுரை ஒன்றும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து, கே.வி.ஷைலஜா திரை இதழுக்காக மொழிபெயர்த்த இந்த கட்டுரையை நண்பர்கள் தவறாமல் படிக்க வேண்டும். கோவிந்த் நிஹ்லானி மற்றும் அவரது படங்கள் பற்றிய யமுனா ராஜேந்திரன் கட்டுரையும், லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரையும், தவறவிடக்கூடாதவை. ஓவியர் […]
புட்ட லக்ஷ்மி அம்மாள் தன் மகளுக்கு, எவ்வளவு வெறி என்றே சொல்லக் கூடிய தீவிரத்தில், சங்கீதம், நடனம், இதிகாச புராணங்கள், சமஸ்கிருதம், உட்பட பல மொழிகளிலும் வித்வத்தை ஊட்ட முயற்சித்திருந்தாலும், அதில் ஏதும் குறை இருந்ததில்லை, தன் மரண தருவாயில் தன் சபதத்தை நிறைவேற்றும் தகுதி பெற்றுவிட்டாள் என மனம் நிறைவு பெற்றாலும், நாகரத்தினத்தினுள்ளும் அதே தீவிரமும் கற்கும் உற்சாகமும் இயல்பாகவே இருந்திராவிடில் அவர் பின்னர் சந்திக்க நேர்ந்த சவால்களைச் சந்தித்திருப்பாரா, தேவதாசி குலத்தில் பிறந்து […]
ஜெயந்தன் சீராளன் அவமானம் தாங்கிய முகத்துடன், சற்று தலை கவிழ்ந்தே இதைத் தொடங்குகிறேன். என் சகோதரனின் மனத்தில் ஆறா ரணங்களின் ரத்தம் வடிந்துகொண்டேதான் இருக்கிறது. அவனுக்கு பஞ்செடுத்து துடைத்து மருந்திட எனக்கு வக்கும் வாகும் இல்லை. அவனுக்கும் அதுவல்ல தேவை. உன் கவிதைகள் குறித்துப் பேசும் யோக்கியதை எனக்கில்லை. இரத்தச் சேற்றில் விழுந்து புரண்டு துரோகத்தால் விரட்டப்பட்டு நீங்கள் வந்து சேர்ந்த பொழுதில் நாங்கள் காமெடி நேரங்களில் மயங்கியிருந்தோம். வசதியான, பொருள் நிறைந்த வாழ்க்கை என்கிற இலக்கு […]