அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )

This entry is part 21 of 24 in the series 13 செப்டம்பர் 2015

(14 வாரங்கள் தொடர். பிரதிவாரம் தொடரும்) சேதுராமன் சித்தப்பா அப்படித் திடீரென்று வந்து நிற்பார் என்று கண்ணன் எதிர்பார்க்கவேயில்லை. முன்னதாக ஒரு தகவல் கொடுக்கமாட்டார்களா? இந்தப் பெரிசுகளே இப்படித்தான். எதையாவது அவர்களாக மனதில் பரபரப்பாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்குள்ளேயே பதறிக்கொண்டு, என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்று அரக்கப் பரக்க ஓடி வருவார்கள். பெரியவர்களை இம்மாதிரிப் “பெரிசு” என்ற சொல் பதத்தில் விளிக்கக் கூடாது என்று அப்பா கோவிந்தன் எத்தனையோ முறை கூறியிருக்கிறார். எல்லோருக்கும் வயதாவது என்பது பொது. […]

நெஞ்சு வலி

This entry is part 22 of 24 in the series 13 செப்டம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு வலி என்றாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறோம். அது நல்லதுதான்.அனால் வேறு உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் நெஞ்சு வலி உண்டாகலாம். இத்தகைய உறுப்புகளில் உண்டாகும் பிரச்னைகளை வைத்து நெஞ்சு வலியை […]

அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

This entry is part 23 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பேராசிரியர் கே. ராஜு நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற 200 அடி வரையும் அதற்குக் கீழேயும் ஆழத்தில் குழாய்க் கிணறுகள் (bore wells) தோண்டப்படுகின்றன. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிக்காமல் இந்த குழாய்க் கிணறுகளிலிருந்து எத்தனை நாட்களுக்குத் தண்ணீரைப் பெற முடியும்? மழைநீரைச் சேகரிக்கவில்லையெனில் […]

X-குறியீடு

This entry is part 24 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பாண்டித்துரை கடந்து சென்ற 024 நபகர்கள் X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள் வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து X குறியிட்டு படுத்துக்கிடந்தவன் இன்னும் சற்று நேரத்தில் எழுந்திருக்ககூடும் சற்று நேரமென்பது 420 நபர்கள் கடந்து செல்லுதல் ஒரு கவிதை சில வாட்ஷப் பகிர்தல் முகப்புத்தகத்தில் நிலைத்தகவலான X குறியீடுக்கு எழும்புதல் புதிதலல் மீண்டும் ஒரு ஞாயிறு வேறு இடம் X குறியீடாக