பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி

This entry is part 21 of 31 in the series 16 செப்டம்பர் 2012

அனைவருக்கும்          வணக்கம் .      வருகின்ற 13 /09 /12 முதல் 21 /09 /12 வரை நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்போடுஅழைக்கின்றோம்….. வருக! வருக!  நேரம் : காலை:   10 மணி   முதல்   மாலை     6  மணி     வரை     அழைத்து மகிழும்     பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார   மன்றம்

சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது

This entry is part 20 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். சிறகின் ஆரம்பமே, கல்வெட்டு சொர்ணபாரதி நிகழ்த்திய, ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில்தான் நடந்தது. கவிஞர் பால்நிலவன் “ தேவநேயப்பாவாணர் சிற்றரங்குக்கு வாருங்கள்.. அங்கே சில தோழர்களைச் சந்திக்கலாம் “ என்றார். போனதில், ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கும் முன்பே, கையில் கல்வெட்டும், ஒரு கவிதை நூலும் திணிக்கப்பட்டது. அப்படி அற்¢முகமானவர்தான் முகவை முனியாண்டி (எ) சொர்ணபாரதி. சில காலம் தொடர்பில்லாமல் போய், திடீரென்று என் வீட்டு கடிதப் பெட்டியில் கல்வெட்டு! ஆகஸ்டு இதழ்! […]

கால் செண்டரில் ஓரிரவு

This entry is part 19 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  சேத்தன் பகத் – தமிழில் சிறகு இரவிச்சந்திரன். அன்னிய ஆங்கில எழுத்தாளர்களுக்கு நிகராக சேத்தன் பகத் நாவல்கள் போற்றப்படுகின்றன. பகத் வட இந்தியக்காரர். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். எல்லாம் இந்தியாவைப் பற்றி. ஒரு நாட்டின் உள்விசயங்களைத் தெரிந்து கொள்ள, அவரது கதைகளை, அயல்நாட்டினர் அள்ளிக் கொண்டு போகிறார்கள். சுவாரஸ்யம் கூடினால், சுற்றுலா பயணியாக வந்து விட்டு போகிறார்கள். அரசுக்கு லாபம் அன்னிய செலாவணி. சேத்தன் பகத்தின் ஒரு நாவலைத் தழுவி 3 இடியட்ஸ் எடுத்து நண்பனாகவும் […]

தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்

This entry is part 18 of 31 in the series 16 செப்டம்பர் 2012

அன்புடையீர் வணக்கம், இத்துடன் தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல் இணைக்கப்பட்டடுள்ளது. நன்றி. ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பேராயம் SRM பல்கலைக்கழகம் காட்டாங்குளத்தூர் – 603 203 தொலைபேசி: 044 -27417376 விருதுகள்   விருது  

“ஆத்மாவின் கோலங்கள் ”

This entry is part 17 of 31 in the series 16 செப்டம்பர் 2012

நெடுங்கதை::ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை  அதிகாலை நேரம்…சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது. நித்யா…நித்யா…. நித்யா !  எத்தனை தடவை கேட்கிறேன்…..சரின்னு ஒரு வார்த்தை  சொல்லேன்….ப்ளீஸ்… படுக்கையை விட்டு எழுந்திருக்காமலே…நேற்று ராத்திரி தான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து தேன்மொழி கெஞ்சிக் கொண்டிருந்தாள். இப்பவே ஆரம்பிச்சுட்டியா…..சும்மா நை…நை…ன்னு என்னை தொல்லை பண்ணாதே…!  கொஞ்ச நேரம் அமைதியா இரேன்..நான் முக்கிய வேலையா இருக்கேன்…இப்போ.. புரிஞ்சுக்கோ. தங்கையை […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28

This entry is part 16 of 31 in the series 16 செப்டம்பர் 2012

சீதாலட்சுமி தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை   நினைவுகள் அனைத்தும் சுகமாக இருக்குமென்பதில்லை. சுமையான நினைவுகளும் உண்டு என் பயணத்தில் மலர்த்தோட்டங்களும் உண்டு. குமுறும் எரிமலைகளும் இருக்கும். எளிதில் உணர்ச்சி வயப்படுவேன். இது என்னிடமுள்ள குறைகளில் ஒன்று. வெளிப்படையான பேச்சு விவேகமல்ல. இதுவும் என் குறைதான். என்னிடமிருக்கும் குறைகளை அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பதுடன் திருத்திக் கொள்ளவும் முயற்சிப்பேன். மனிதன் ஓர் கலவைதானே. ஒன்றில் மட்டும் என்றும் நான் உறுதியானவள். என்னால் முடிந்த உதவிகளைச் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2

This entry is part 15 of 31 in the series 16 செப்டம்பர் 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம்  அங்கம்) அங்கம் -3 பாகம் -2 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் […]

(100) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 14 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்‌ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் தான், ஊரை விட்டுப் போய்விட வில்லை. அலுவலகமும் அதேதான். அதே கட்டிடம் தான். இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் நேரம் எல்லாம் உடனிருந்து என்னேரமும் பார்வையின் வட்டத்துக்குள் இருந்து கொண்டிருந்த சோப்ரா, மிருணால், மஞ்சு சென்குப்தா, எல்லோரையும் விட்டு வேறு தளத்துக்கும் வேறு அறைக்கும் செல்வதென்றாலும் எந்த அளவுக்கு இழப்பு இருந்ததோ அது இழப்பு தானே. […]

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா

This entry is part 13 of 31 in the series 16 செப்டம்பர் 2012

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவரும், இந்தியமொழிப்புலமுதன்மையரும் சிறந்த கவிஞர் மற்றும் தமிழறிஞரும் ஆகிய பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா வரும் 2012 டிசம்பரில் வருகிறது. எனவே அதனை முன்னிட்டு மணிவிழா மலர் ஒன்று கொண்டு வர இருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பு இத்துடன் வருகிறது.  நன்றி -கிருங்கை சேதுபதி தொடர்பு முகவரி: கிருங்கை சேதுபதி, (Kirungai sethupathi) 321,மூன்றாவது முதன்மைச்சாலை, (321, 3rd Main Road) மகாவீர் நகர், (Mahaveer Nagar) புதுச்சேரி-605008 (Puducherry -605008) இணைய முகவரி- sethukapilan@gmail.com. பேச – 09443190440

நம்பிக்கைகள் பலவிதம்!

This entry is part 12 of 31 in the series 16 செப்டம்பர் 2012

 ரசிப்பு வாசு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். இருபத்தியேழு வயது இளைஞன். அந்த வயதுக்கே உரிய துடுக்கும், பழக்க வழக்கங்களும் உண்டு. கைநிறைய சம்பளம் வேறு. கேட்க வேண்டுமா? நண்பர்கள் வட்டமும் அப்படித்தான். ஆளுக்கொரு பைக், கேர்ள் பிரண்ட், சனிக்கிழமை மாலை வேளைகளில் மது. வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக கழிந்தது. அந்த சனிக்கிழமை மட்டும் வராமல் இருந்திருந்தால்… எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சனிக்கிழமை விடுமுறை நாள்தான். ஆனால் பெரும்பாலும் வாசு ஆபீஸுக்கு வந்து விடுவான். காரணம் […]