அன்புடையீர், வணக்கம். திரு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருதாக வழங்கப்பட்டு வருகிறது. இதுஉலக அளவில் வழங்கப்பட்டு வருவதால், வேற்று நாட்டு தமிழ் எழுத்தாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் பரிசு பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதனாலேயே இந்த விருது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. எதிர்வரும் அக்டோபர் 2, 2014 ம் தேதி இந்த அமைப்பின் 6-வது ஆண்டு விழா “இலக்கிய […]
சில தினங்கள் வழக்கமானவை. சில தினங்கள் வழக்கத்திற்கு மாறானவை. காலம் மாறும்போது அதன் பயணம் மாறுகிறது. அப்படி நிகழ்ந்தது ஒன்று. நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக என் இனிய நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான திரு.வையவன் அவர்கள் ஹார்ட்பீட் டிரஸ்ட்டையும் என்னையும் பார்வையிட வரப் போவதாக முந்தின நாள் அறிவித்தார்கள். உலக புத்தகத் தினத்திற்காக மாநில கல்விக் கருவூலம் தமிழ்நாடு ஆளுநர் மேதகு .ரோசையா அவர்கள் ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர்கள் அந்தச் செய்தியைத் […]
சுதந்திரம் கிடைத்தது ‘இந்தியா’ என்ற இந்த நாட்டிற்கு மட்டும் தானா? அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லையா? தற்போது நடைமுறையில் நடக்கும் செயல்களைப் பார்த்தால் திருடர்களுக்குத் தான் ‘ஏகபோக சுதந்திரம்’ கிடைத்து விட்டதை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. சொல்லப் போனால், ஒரு விஷயம் என்றில்லாமல் அனைத்து தீய செயல்களிலும் சுதந்திர மனப்பான்மையோடு செயல்படும் கும்பலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்க நேரிடும் நாள் இன்னும் தூரத்தில் இல்லை. திருட்டும், குற்றங்களும் புரையோடிக் கொண்டிருக்கும் […]
மீனா தேவராஜன் ராஜேஷ்க்கு அன்று பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் தினச் சந்திப்பு. அவன் அப்பா அவனுடைய ஆசிரியரைச் சந்திக்க விரும்புவதாக முன்பே சொல்லியிருந்தார். அவனுடைய மனதில் அவரை நம் ஆசிரியரைச் சந்திக்க விடக் கூடாது என்ற எண்ணம் வலுத்திருந்தது. ராஜேஷ் உயர்நிலை பள்ளி ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவன். அவன் நண்பர்கள் அவனிடம் கேட்பாங்க, ‘ ஏன்டா ராஜேஷ் உங்க அப்பா மட்டும் பள்ளிக்கே வரமாட்கிறாரே, அத ஏன்டா? எங்க அப்பாவெல்லாம் ஒரு முறை […]
எஸ்.ஜயலக்ஷ்மி ஒப்பனை என்ற சொல்லுக்குப் பொதுவாக அலங்கரித்தல் என்ற பொருள் என்றாலும் வழக்கில் பெண்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையும் நாடக நடிகர்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையுமே குறிக்கிறது. நாடகங்களில் இளைஞனை முதியவனாகவும், முதியவரை இளைஞனாகவும் காட்டுவது இந்த ஒப்பனைக் கலையால் தான். இன்னும் ஆணுக்குப் பெண் வேடம் போடு வதும் பெண்ணுக்கு ஆண் வேடம் போடுவதைம் இந்த ஒப்பனையால் தான்.. இன்னும் விரிவாகப் பார்த்தால் நடிகர்களை தேவர்களாகவும், தேவிகளாகவும். அசுரர்களாக வும் கூட மாற்றி விடுகிறார்கள் ஒப்பனைக் […]
நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் […]
மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். மனம் ஒரு குரங்காகத் தாவுகிறது என்கிறோம். மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். மனம் நெருப்பாக எரிகிறது என்றும் மனம் பாலைவனமாக வறண்டுபோய்விட்டதாக என்றும் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும் சொல்கிறோம். பல சமயங்களில் மனம் எரிமலையாக வெடித்துவிட்டது என்றுகூட குறிப்பிடுகிறோம். மனத்தின் இயக்கத்தைக் குறிப்பிட இப்படி ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அது நிலையற்றது என்பதாலேயே, அதன் இயக்கத்தைக் குறிப்பிட இத்தனை சொற்கள் உருவாகியிருக்கலாம் என்று […]