புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 25

This entry is part 26 of 26 in the series 22 செப்டம்பர் 2013

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 25.​நோயாளியா வாழ்ந்து புகழ் ​பெற்ற ஏ​ழை….. வாங்க..வாங்க என்னங்க ஒரு மாதிரியா இருக்குறீங்க…என்னது ஒடம்புக்கு முடிய​லையா…? அடடா…..என்ன பண்ணுது…ஜல​தோஷமா..இதுக்​கே நீங்க இப்படி இருக்குறீங்க​ளே…இ​தைவிடக் ​கொடு​மை என்ன ​தெரியுமா…? வாழ்நாள் முழுவதும் ஒருத்தர் ​நோயாளியா​வே இருந்தாரு…ஆனாலும் அவரு அ​தைப் ​பொருட்படுத்தாம கடு​மையா ஒ​ழைச்சு முன்​னேறிப் புகழ் ​பெற்றாரு… அவ​ரைப் பத்தித்தான் […]

கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்

This entry is part 25 of 26 in the series 22 செப்டம்பர் 2013

வணக்கம் உங்கள் வருகைக்கும் பார்வைக்கும் நிதி உதவிக்கும் அன்புடன் இரா.தெ.முத்து

திண்ணையின் இலக்கியத் தடம் – 1

This entry is part 19 of 26 in the series 22 செப்டம்பர் 2013

அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன் பகிர்ந்தால் நான் கண்டிப்பாக வாசிப்பேன் என்று தோன்றியது. திண்ணையின் முதல் இதழ் முதல் வாசிக்கத் துவங்கி உள்ளேன். ஒவ்வொரு கட்டுரையில் இரண்டு மாதங்களின் பதிவுகளை அலச விரும்புகிறேன். இரண்டு மாதங்களில் வரும் சுமார் எட்டு பதிப்புகளை நான் வாசித்து, கட்டுரைகளின் சாராம்சத்தைத் […]

கற்றல்

This entry is part 24 of 26 in the series 22 செப்டம்பர் 2013

  கடல் பேசிக் கொண்டே இருக்கும்.   கேட்டுக் கொண்டே இருப்பேன்.   ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும்.   கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக் கொள்ள கடல் கேட்கும் கேள்விகளா?   ஆழத்தில் உள்ளொடுங்கின் அமைதியென்று மெளனமாய் இருக்கை நன்றென்று உணர்வேன்.   கடல் மறந்ததை கடலிடம் சொல்லி விடலாமென்றால் கடல் பேசாமல் ஓய்வதாயில்லை. கு.அழகர்சாமி

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்

This entry is part 23 of 26 in the series 22 செப்டம்பர் 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     அண்டவெளிக் களிமண்ணில் ஆப்பமாய்ச் சுடப் பட்டுக் குண்டான சட்டி ! காலக் குயவன் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்கடிக்கும் மேளம் ! சுற்றும் உட்கரு ஒருபுறம்  ! சுழலும் திரவ வெளிக்கரு எதிர்ப்புறம் ! காந்த சக்தியில் இயங்கும் பூமி மின் ஜனனியா ? மோட்டாரா ? அடித்தளத் தட்டுக்கள் மோதி துடிப்புகள் உண்டாக்கும் ! எரிமலை வெடித்துப் பீரிட்டெழும் ! […]

அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

This entry is part 22 of 26 in the series 22 செப்டம்பர் 2013

        எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே.     பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது,     நம்முடை நாயகனே, நான்மறையின் பொருளே,             நாவியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்     தம்மனை யானவனே, தரணி தலம்முழுதும்             தாரகை யினுலகும் தடவி யதன்புறமும்     விம்ம வளர்ந்தவனே, வேழமும் ஏழ்விடையும்             விரவிய […]

குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

This entry is part 5 of 26 in the series 22 செப்டம்பர் 2013

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக […]

அகநாழிகை – புத்தக உலகம்

This entry is part 21 of 26 in the series 22 செப்டம்பர் 2013

சென்னை அண்ணா சாலையில் தமிழ்ப் புத்தகங்களுக்கான ஓர் கடை. சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய புத்தக வெளியீடு / அறிமுக / விமர்சன / குறும்பட திரையிடல்கள் / கலந்துரையாடல் மற்றும் புத்தகம் சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான வசதியுடன் அமைந்துள்ளது. இணைய வழி விற்பனையும் உண்டு. வாய்ப்பும், நேரமும் அமைகையில் வருகை தாருங்கள். மிக்க அன்புடன் பொன்.வாசுதேவன் 999 454 1010

ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்

This entry is part 3 of 26 in the series 22 செப்டம்பர் 2013

  இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக நம்மை ஆளும் பிரதமரையும் அமைச்சர்களையும் நாம் பலமுறை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களும் வழிகாட்டிகளும் அவர்களுடைய பிறந்தநாள் அன்றும் இறந்தநாள் அன்றும் மட்டும் நினைக்கப்படுகிறவர்களாக இன்றைய சூழல் மாறிவிட்டது. சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் […]

விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?

This entry is part 20 of 26 in the series 22 செப்டம்பர் 2013

பூமி சூரியனின் கதிரில் குளித்து கொதித்து உருண்டு கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வெய்யிலுக்கு வெளியே போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடப்பவர் தவிர வெளியில் மொட்டை வெய்யிலில் மண்டை காய வண்டியோடு போராடிக் கொண்டு, டிராஃபிக் சிக்னலின் அதட்டலுக்கு பயந்து ஒடுங்கி நின்று கொண்டிருக்கும் அனைவருக்கும் அந்த கவுண்ட் டவுன் எண்கள், அவர்களின் நெஞ்சுப் படபடப்பை அதிகப் படுத்திக் கொண்டு தான் இருந்தது. அதும் இந்த வேலையாவது கிடைக்குமா..?  என்று […]