இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின் மின்னஞ்சல் வந்தது. ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது. அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் […]
கவிதை நந்தவனமாகிய நந்தனம் செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண்தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம்தாமரைக் குடியிருப்பிலுள்ள பொதுவுடமை கட்சியின் மூத்த தோழர்இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்தில் எளிய இலக்கிய நிகழ்வாக கடந்த செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிஞர்ஆ.கிருட்டிணன், […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவின் துருவங்களில் உறைந்தநீர்ப்பனிக் குழிகள்இருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடி பணச் செலவு !மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள்பல யுகங்களாய் இறுகிஉறைந்து கிடக்கும்பரிதிக் கண்ணொளி படாமல் !எரிசக்தி உண்டாக்கும்அரிய ஹைடிரஜன் வாயுக்கள்சோதனை மோதலில் வெளியேறும் !சூரியப் புயலில் வெளியாகும்வாயுக்கள் சிலநீரை உண்டாக்கும் நிலவில் !செவ்வாயிக்குச் செல்லும்பயணிகட்குஒருவாய் நீர் குடிக்கவெண்ணிலவுப் பனிக்குழியில்தண்ணீர் வளம் உள்ளது !எரிசக்தி ஹீலிய வாயுஏராளமாய்ச் சேர்க்கலாம் நிலவில் !மீதேன், மெர்குரி, மெக்னீசியம்வெள்ளி, அமோனியா வாயுவெண்ணிலவில் […]
ஆர். வத்ஸலா பல விநாயகர்கள் உண்டுபூஜையறையில்பர்மாவிலிருந்து அகதியாக நடந்து வருகையில்ஒரு சிகை மழித்த பாட்டி தூக்கி வந்த பளிங்கு விநாயகர்நிற்க வைத்தால் லொட்டென்று விழும் நவதானிய விநாயகர்கற்பனை வளத்தால் மட்டுமே அது விநாயகர்என்று ஒப்புக் கொள்ளக் கூடிய மொண்ணை உருவம் கொண்டநாள் நட்சத்திரம் பார்த்துவெட்டிய எருக்கம் வேரில்செதுக்கப் பட்டஅரிய பொக்கிஷவிநாயகர்மரப் பொடியில் அருமையாக செதுக்கப்பட்டவிநாயகர்திருமணமானதும்அம்மா பிடித்தமுதல் விநாயகர்ஒரு மாதிரி இருந்ததால்எங்கள் வீட்டில் களி மண் விநாயகர்கிடையாதுமற்றபடி விநாயகர்கள்எல்லோரும்எங்களுடன்நிரந்தரமாக
ச.சிவபிரகாஷ் வருடம் : 2023நூ காவாலயா….காவாலயா…என மகள்கள் பாடிக்கொண்டும்,அம்மாவிடம்(என்மனைவி) தமன்னாவை போல் ஆடிக்காட்டியும்.குதுகலித்துக்கொண்டிருந்தனர்.விஜய் ரசிகைகளான இவர்கள் கொஞ்சம் நாட்களுக்குமுன்பு வரை “நான்…ரெடி தான் வரவா.,அண்ணன் நா இறங்கி வரவா”.எனபாடி, ஆடி கொண்டிருந்தவர்களை,இதுவரை பார்த்திடாத, புது மாதிரியான(?)உடை உடுத்தியும்,ஆடியும்,பெரியவர் முதல் சிறியவர் வரை தன் பக்கம்ஈர்த்து கொண்டிருந்த தமன்னா.என் மகள்களை தாண்டி,உலகெங்கும் பலயுவன்,யுவதிகளையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார்.என்பதை பல ரீல்ஸ்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முடிந்தது. நான் தீவிரகமல் வெறியன் என்பதால், அது ரஜினி படத்தின் பாடல் என்பதாலும்,அந்த பாட்டின் மீது பெரிதாக […]
நண்பர்களுக்கு வணக்கம் அடுத்த நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் படைப்புகள் குறித்த நேரடி அமர்வாக வரும் வார இறுதியில் நிகழவுள்ளது 24-09-2023 ஞாயிறு மதியம் 03:00 மணி முதல் 08:00 மணி வரை கவிக்கோ அரங்கம், CIT colony, மைலாப்பூர், சென்னை வரவேற்புரை:-எழுத்தாளர்:- ஜா.ராஜகோபாலன் வாழ்த்துரை:-எழுத்தாளர்.:- ரகுநாதன் ஜெயராமன் அமர்வுகள்:- அ) அரசூர் நாவல்கள்1.சுரேஷ்பாபு ( நற்றுணை ) 2. காளிப்ரஸாத் ( நற்றுணை ) ஆ) பிற நாவல்கள் 1. மூன்றுவிரல் – யோகேஸ்வரன் […]
ஆர் வத்ஸலாஒரு சாண் துணை தான்அமையும்உனது நங்கூரமாகஎனபூர்வ ஜென்மங்களில்சலவை செய்யப்பட்ட மூளையுடனேயே பிறந்தேன்பணி, அண்ணனுக்குப் பிறகுகவனித்தார் சற்றுஎன்னைதந்தைஅளவாய்பாசம் செலுத்தினர்சகோதரர்கள்தங்களுக்கு மணமாகும் வரைகொண்டவனும்கூரையும்தூற்றினர் கைகோர்த்துஆண் பெண் நட்பிலக்கணமறியாமடையரைபுறந்தள்ளிதோழியர் உதவியுடன்உற்பத்தி செய்து நானேபாய்ச்சிக் கொண்டேன்எனது நங்கூரத்தை
ஆர் வத்ஸலா கவிதை எழுதுதல் எனது நங்கூரம் என நம்பி இருந்தேன் திடீரென புரிந்தது இன்று அது அப்படி இல்லை என்று கடலில் ஆடிக் கொண்டிருக்கும் ஓட்டைப் படகு மூழ்காமலிருக்க அதில் நிரம்பும் நீரை வெளியே கொட்டுவதைப் போல் நான் செய்து கொண்டிருக்கும் சுய பாதுகாப்பு பணி அது என்று தேட வேண்டும் எனக்கான நங்கூரத்தை இனிமேல் தான்