This entry is part 1 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா

கவிதை எழுதுதல்

எனது நங்கூரம்

என

நம்பி இருந்தேன்

திடீரென புரிந்தது இன்று

அது அப்படி இல்லை என்று

கடலில் ஆடிக் கொண்டிருக்கும்  ஓட்டைப் படகு

மூழ்காமலிருக்க

அதில் நிரம்பும் நீரை

வெளியே கொட்டுவதைப் போல்

நான்  செய்து கொண்டிருக்கும்

சுய பாதுகாப்பு பணி

அது

என்று

தேட வேண்டும்

எனக்கான நங்கூரத்தை

இனிமேல் தான்

Series Navigationநங்கூரம் 2