வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஜனாப் பௌஸ் மௌலவி அவர்கள். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் மூலம் பத்திரிகைகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பன்முக ஆளுமை கொண்டவர். மார்க்கத்தின் மனக்கதவு, காதிகோட், போதனைப் பொக்கிஷம், நிறை மார்க்கத்தின் நிலா முற்றம், ஊடகத்தில் உதித்த உபதேசங்கள், விடியலை நோக்கிய விசுவாசிகள் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும், முஅஸ்ஸினின் முறைப்பாடு, பாரெங்கும் பலஸ்தீனம், பாசம் சென்ற பாதையிலே போன்ற கவிதைத் […]
‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’ தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள், நீண்ட நாள் எண்ணை விடாத வீட்டின் காம்பவுண்ட் கேட் ‘கிரீச்’ என்று பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட எலியாய் முனகியது, எனக்கு புரிந்துவிட்டது…வந்தவர் அப்பாவின் சிநேகிதர் ராஜாராமன் தான்… அப்பாவுடன் ஒன்றாக ஒரே ஆபீசில் வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். அவர் வரும் சமயமெல்லாம் ‘சாக்லேட்’வாங்கி வந்து என் குழந்தைகளுக்கு கொடுத்தே அந்தப் பெயரைப் பெற்றுவிட்டார். மகளுக்கு என்னவோ அவர் ‘சாக்லேட் தாத்தா’ என்றாலும்… நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு வைத்தப் பெயர் ‘நாரதர்’ அது ஏன் என்று நீங்களே போகப் போக புரிந்து கொள்வீர்கள். அவர் எங்கள் விட்டுக்கு வந்து சென்றாலே, அன்று எங்கள் வீட்டில் அலை அடிக்காமலே சுனாமி வந்து சென்றது போல ஒரு பிரளயத்தை உண்டு பண்ணிவிட்டு தான் செல்வார், அது அவருக்கு தெரியாமலே எப்பொழுதும் நடந்து வரும் வழக்கமான நிகழ்வுதான் .. சுனாமிக்கு தெரியுமா தன்னால் இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று.. அவர் தன்னைப்பற்றி சுயதம்பட்டம் அடிப்பதில் பல்கலை பட்டம் வாங்காமலே டாக்டர் பட்டம் வாங்கியவர். ஒவ்வொரு முறையும் அவர் வரும் சமயம் தம்பட்டம் அடிப்பதும் அதனால் எங்கள் வீட்டில் அப்பாவின் கோபம் எங்கள் மேல் விஸ்வரூபமாகி அப்பாவுக்கும் எங்களுக்கும் வாய்ச்சண்டையாய் ஆரம்பித்து அந்தச் […]
சிறகு இரவிச்சந்திரன். ஒரு சிக்கலான முடிச்சை எடுத்துக் கொண்டு, ஓரளவு தெளிவாக கதை சொல்ல முடியுமென்றால், அந்த இயக்குனருக்கு ஓரளவுக்குத் திறமை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளலாம். அது பன்னீர்செல்வத்தின் விசயத்தில் உண்மையும் கூட. ஆனால், மறை கழண்ட கதையா, கூப்பிடு பன்னீரை என்று திரையுலகம் ஏலம் போடும் ஆபத்தும் அவருக்கு இருக்கிறது. உஷார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பிரபல தயாரிப்பாளர். ஆனால், அதற்காக, தன் மகன் ஜானிக்கு, இம்மாதிரி வேடங்களையே அவர் தேர்ந்தெடுத்தால், நிக் மகன் […]
தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) பல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. தலையங்கங்களுக்கு ஏற்ற விதமாக சிறப்பான படங்களை வழங்கியிருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள். சிந்திக்கத் தக்கவை. […]
தியத்தலாவ எச். எப். ரிஸ்னா சிறுவர் படைப்பிலக்கியத்தில் ஆழமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்களுள் திருகோணமலை செ. ஞானராசா அவர்களும் முக்கியமானவர். தனது மூன்றாவது சிறுவர் நூலாக பாவைப் பிள்ளை என்ற தொகுதியை வெளயிட்டிருக்கின்றார். சிறுவர் பா அமுதம் இவரது முதல் தொhகுதியும், புதிய பாதை என்பது இவரது இரண்டாவது தொகுதியுமாகும். அதிபராக கல்விப் பணியாற்றி வருவதுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் செ. ஞானராசா அவர்கள் இலங்கை தேசிய […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ் ஆழ் மனதிலேயேஆசைகள், ஏக்கங்கள் உள்ளிட்டவைகள் பதிவுகளாகப் பதிகின்றன. இத்தகைய பதிவுகள் நாளடைவில் கனவுகளாக வெளிப்படுகின்றன. கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் சாதனங்களாகவும் அமைகின்றன. இலக்கியங்களில் இடம்பெறும் கனவுகள் அனைத்தும் இலக்கிய உத்தியாக […]
அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) “எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்?” கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா. “கேள்வி புரியல லதா..” “ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா வேலையிலேயும் லொகேஷன் பாக்கறது தான் ரொம்பப் பிடிக்கும். ஒரு தரிசு நிலத்தில கூட எங்களுக்கு ஏகப்பட்ட விஷயம் தென்படும். விஷுவல்ல எல்லாமே ஒரு குறிப்பிட்ட மனநிலையை அழுத்தமா வரவழைக்கிற முயற்சி தான் அடிப்படையானது. என்னோட […]
தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம் மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தனித்த உரிமையில் கண நேரம் சந்நதியில் உன்னருகே அமர்ந்திட வேண்டுகிறேன் நான். கைவச முள்ள எனது வேலைகளை முடித்துக் கொள்வேன் பிறகு ! கனிந்த நின் திருமுகக் காட்சியைக் காணாத மறைவுப் புறத்தில் நடமிடும் வேளை என்னிதயம் படபடத்துத் தவியாய்த் தவிக்கும் தன்னிலை மாறி ! அப்போதென் படைப்புகள் யாவும் சுமக்க […]
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் […]
புனைப்பெயரில்… போனமுறை திரு.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது நடந்த ஸ்டாக் மார்க்கெட் கூத்து பலரின் வாழ்வை தெருவிற்கு கொண்டு வந்தது எங்காயாவது இருக்கட்டும் எப்படியும் போகட்டும் என அவர் உள்துறை மந்திரியாக இருந்த போது நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்… ஆனால், மன்மோகனுக்குத் தான் நாம் நிம்மதியாக இருப்பது பிடிக்காதே…. திரும்பவும் இப்போது நிதி, ப.சி கையில். தற்போது அவரின் லட்சியம், ஸ்டாக் மார்கெட்டை ரிவைவ் பண்ணுவதாம்..? எப்படி, இந்திய இன்சுரன்ஸ் கம்பெனிகள், பிஎஃப் பணம் […]