தேமொழி கரிகால் சோழன் சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது. “பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்” மற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய “கலிங்கத்துப் பரணி”யில் காணப்படுகிறது. “செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச் சிமய […]
-லதா ராமகிருஷ்ணன் அசோகமித்திரனுடைய எழுத்துகள் அடிமனதைத் தொடாத வாசகர் எவரேனும் இருக்க முடியுமா? உலகளாவிய அளவில் தரமான எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெறத்தக்கவர் அவர் என்பதை நிரூபிக்கும் அவருடைய படைப்புகளைப் பட்டியலிட்டால் அதன் நீளம் அதிகமாகவே இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கையில் எளிய நடையில் எழுதப்பட்டதாய், தினசரி வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுவதாய், சாதாரண மனிதர்களே கதாபாத்திரங்களாய் அமைந்துள்ளதாய் காணப்பெறும் அவருடைய படைப்புகள் உண்மையில் வாழ்க்கை குறித்த நம் பார்வையை விசாலப் படுத்துவதாய், வாழ்க்கையின் பல பரிமாணங்களை, நுட்பங்களை மிகை யுணர்ச்சி […]
வடக்குப் பிரதேசத்தில் மதுபுரம் என்ற நகரம் இருக்கிறது. அங்கு மதுசேனன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் மூன்று ஸ்தனங்கள் உள்ள பெண் பிறந்தாள். அரசன் மூன்று ஸ்தனங்களுடன் அவள் பிறந்திருப்பதைக் கேட்டு மந்திரியை அழைத்து, ‘’இவளைக் காட்டில் கொண்டு விட்டுவிடு. அதனால் ஒருவரும் அறியமாட்டார்கள்’’ என்றான். அதைக்கேட்ட மந்திரி ‘’மஹாராஜா, மூன்று ஸ்தனங்களையுடையவள் குலத்திற்குக் கெடுதலை கொண்டு வருவாள் என்று அறிந்ததே. இருந்தாலும் பிராமணர்களை அழைத்துக் கேட்க வேண்டும். அதனால் இரு உலகங்களுக்கும் எதிராக […]
தாமிரபரணி பாய் விரித்ததில் நான் படுத்துக்கிடந்தேன். பளிங்கு நீருள் முக்குளி போடுவதில் ஒரு சுகம். கணுக்கால் அள்வே ஓடினாலும் அது என் அன்றாடக்கவிதை. அதிலும் இந்த மாலைக்குளியலில் “உமர்கயமும்”கூட குளிப்பது போல் ஒரு பாவனை. வெயிலுக்கேற்ற நிழல் இங்கு நீருக்குள் நெருப்பையே கரைத்து குளிர்பூங்குழம்பாக்கி கிண்ணங்களில் ஊற்றித்தரும். கல்லிடைக்குறிச்சியின் இதயத்தை வருடிக்கொண்டே ஓடினாலும் உருண்டு வரும் கூழாங்கல் ஒவ்வொன்றும் இமயம் தான். “ஜன்னி” கண்ட இமயத்துக்கே மருத்துவம் பார்த்த அகத்தியனின் கண்ணாடிப்பிழம்பு அல்லவா தாமிரபரணி. தினமும் […]
ஹுஸைன் இப்னு லாபிர் ஐயா வணக்கம் தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன். பாரதத்தில் உதித்ததனால் பா ரதம்போல் கவி பொழியும் பெயர் தனிலே ஜெயம் தாங்கிய ஜெய பாரத பெருந்தகையே அகிலத்துக்கும் அண்டத்துக்கும் அணுவுக்கும் கருவுக்கும் கிரகங்கள் விண்ணுளவி கவி தொடுத்து விழங்க வைத்தாய் சாளரத்து வழி தனிலே திண்ணையிலே விழி வைத்து ஈழத்து மாணவன் நான் பெருந்தகையை அறிந்து கொண்டேன் அடுக்கௌக்காய் உரை பொழிந்து படம் வரைந்து விளக்கி […]
[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற்ரோருக்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது] பார்வையின்மை வாழ்வில் உண்டாகும் ஒரு நிலை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும், எந்த அளவிலும் உண்டாகலாம். பார்வையின்மையின் அளவையும், வாழ்வில் அது உண்டாகும் காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதனை நான்கு பெருங்கூறுகளாகப் பகுக்கலாம். அவையாவன: 1] பிறப்பிலேயே உண்டாகும் முழு பார்வையின்மை, 2] பிறப்பிலேயே உண்டாகும் பகுதி பார்வையின்மை 3] வளர்ந்த […]
(சிங்கத்தின் மகள்) தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு அடிமைகள். குறட்டை விட்டுக்கொண்டிருந்த அந்த அரசியின் மடியில் பூனை ஒன்று மெலிதாக உறுமிக்கொண்டு, அந்த அடிமைகளை சோம்பலுடன் வெறித்துக் கொண்டிருந்தது. முதல் அடிமை பேச ஆரம்பித்து, “இந்த மூதாட்டி தூங்கும் போது எவ்வளவு அவலடசணமாக இருக்கிறார் பாருங்கள். அவர் வாய் துருத்திக்கொண்டு, சாத்தான் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது போல சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.“ என்றான். பின்னர் […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. ராஜனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிளம்பரைக் கூப்பிடலாமா? அவன் கேட்கும் கூலி ஒரு பக்கம் இருக்கட்டும். குழாயைக் கழட்டுகிறேன் பேர்வழி என்று சுவர் டைல்ஸை எல்லாம் உடைத்து விட்டால் என்ன செய்வது? பார்த்து பார்த்து செலக்ட் செய்த டிசைன் என்று வாடகைக்கு விடும்போது வீட்டுக்காரர் சொன்னாரே! அது இப்போது உடைந்துவிட்டால் கடையில் இதே […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com உலகமே ஆனந்த மயம் என்று எண்ணிக கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அன்று மாலையே இடி விழுந்தது. அஃப்கோர்ஸ்! ரொம்ப சின்ன இடிதான். “சுந்தரி இருக்கிறாளா? என் பெயர் மூர்த்தி, சுந்தரியின் அண்ணன்” என்றான் அவன். “வாங்க.. உட்காருங்க. சித்தியைக் கூப்பிடுகிறேன்” என்று உள்ளே ஓடினாள் பாவனா. “அண்ணாவா? எதுக்காக வந்தான் இப்போது?” யோசனையுடன் வெளியே வந்தாள் சுந்தரி. கூடத்திற்கு வந்தவள் “நீ போ காலேஜுக்கு. […]
பத்தி எரியுது பவர் கட்டு செப்புவது யாரிடம் சொல்லடி..? சுத்தி எரியுது சூரியன் … தோலை உரிக்குது வேர்வை ! நெஞ்சில் ஷாக் அடிக்குது நிறுத்தி விட்ட மின்சாரம்…! ராஜியத்தில் நடக்குது அம்மா வுக்கு.. ஆராதனை .! பூஜியத்தில் பவர் மீட்டர் பூஜித் தாலும் பயனில்லை ! பானைச் சாதம் பொங்கலை பார்ப்ப தெப்படி ஜெயா டிவி ? நகரில் பவர் போனதால் நங்கை யர்க்குத் திண்டாட்டம்..! உயிரோடு புதையும் சீரியல் பெட்டி .. பெட்டிப் […]