ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்தது.

This entry is part 1 of 20 in the series 4 செப்டம்பர் 2016

Comet Halley சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/16z1ZUMnGn0 https://youtu.be/Tp2P4ht2WNM https://youtu.be/J7I9z6Lcemo https://youtu.be/2-M5_xBVSLQ ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! அண்ட கோள்களின் ஆதித் தோற்றம் அறியவும், உயிரின மூலத்தை உளவிடவும் […]

ஆஷா

This entry is part 2 of 20 in the series 4 செப்டம்பர் 2016

திவ்யா ஆவுடையப்பன்       (1) ஆதி கண்விழித்தப்போது கடைசி ஹெலிக்காப்டரும் போய்விட்டிருந்தது. அருகில் பஞ்சுபொதிப்போல் உறங்கும் அம்முவை பார்த்தான். “என்னை மன்னித்துவிடு அம்மு. இது உனக்கு நடக்க கூடாது! ஆனால் எனக்கு வேறு வழித் தெரியவில்லை. நான் உன்னை கொன்றே ஆக வேண்டும் அம்மு.” குனிந்து அவள் உதடுகளை உறுத்தாமல் மெல்லிய முத்தமிட்டான். லேசாக அசைந்துவிட்டு மறுபடியும் தூங்கிப்போனாள். அவள் உதட்டில் ஒரு அழகான சிறு புன்னகை நிரந்தரமாக குடியிருந்தது. எந்த கனவில் என்ன ஆசை நிறைவேறியதோ… கீழே […]

திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்

This entry is part 4 of 20 in the series 4 செப்டம்பர் 2016

அனைத்துலக  தமிழ்   இலக்கியப்பாலமாகத் திகழ்ந்தவரின்  வாழ்வும்   பணிகளும்                                             முருகபூபதி —  அவுஸ்திரேலியா   ” ராஜம் கிருஷ்ணனின்  அலைவாய்க்கரையில்  நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள்  சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது.   இலங்கையில்  ஒரு  பிரதேசத்தில்  வாழும் கடற்றொழில்  புரியும்  மீனவ  மக்களைப்பற்றிய கதைகள்.  இந்த நூல் பற்றி  ‘தாமரை’ யில்  எழுதவிருக்கின்றேன்.” –  என்று எழுதப்பட்ட  ஒரு வாசகர்  கடிதம் 1975 ஆம் ஆண்டின்  இறுதிப்பகுதியில்  மல்லிகையில் வெளியானது. அதனை  எழுதியிருந்தவர், தமிழக முற்போக்கு இலக்கிய விமர்சகர் […]

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8

This entry is part 3 of 20 in the series 4 செப்டம்பர் 2016

பி.ஆர்.ஹரன்   கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள் பயன்படுத்தப்படுவது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்காமாகும் என்றும், யானைகளை கோவில்களிலிருந்து விடுவிப்பது அந்தப் பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். விலங்குகள் நலன் என்கிற பெயரில், யானைகளின் நலனைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஹிந்து கோவில்களையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் சிறுமைப்படுத்துகின்றன அன்னிய சக்திகள் என்றும் கூறுகிறார்கள் ஆன்மிக ஆர்வலர்களும், ஹிந்து அமைப்பினர்களும். இதற்குச் சான்றாக, ஆதாரமாக, சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரையையும், ஆவணப்படத்தையும் […]

பழக்கம்

This entry is part 6 of 20 in the series 4 செப்டம்பர் 2016

  சேயோன் யாழ்வேந்தன்   கவிதை ஏடெங்கே என்றால் காகிதக் கூடையாயிற்று என்கிறாள் பாட்டுப் படிக்கிறேன் என்றால் காதைப் பொத்திக்கொள்கிறாள் கித்தாரை எடுத்து வைத்தால் கதவைச் சாத்திக்கொள்கிறாள் சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், இப்படிக் கதவடைப்பதும் காதைப் பொத்துவதும் என்ன பழக்கம்? seyonyazhvaendhan@gmail.com

தொடுவானம் 134. கண்ணியல்

This entry is part 7 of 20 in the series 4 செப்டம்பர் 2016

  நான்காம் வருடத்தில் கண்ணியல் ( Ophthalmology )  பயிலவேண்டும். இது ஒரு வருட பாடம். இதை மேரி டேபர் ஷெல் கண் மருத்துவமனையில் ( Mary Taber Schell Eye Hospital ) பயின்றோம்.  இது வேலூர் ஊரீஸ் கலைக் கல்லூரியின் பின்புறம் உள்ளது. இந்த மருத்துவமனைதான் டாக்டர் ஐடா ஸ்கடர் தமது இளம் வயதில் உருவாக்கிய முதல் மருத்துவமனை. இது அவர் வாழ்ந்த எளிய வீட்டில் உருவாகியது. ஒரு படுக்கையடன் துவங்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் […]

சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?

This entry is part 18 of 20 in the series 4 செப்டம்பர் 2016

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்றால் சும்மாவா? நம் தனிச்சிறப்புகள் ஒன்றா இரண்டா…பழைய சிறப்புகள் உண்மையிலேயே ஏராளமாக இருக்கிறது. இருக்கட்டும்..நாம் பார்க்கப் போவது புதிய சிறப்பு. அதாவது “சீசனுக்கேற்ற சீற்றம்” கொள்ளும் புதுத் தமிழனின் சிறப்பு. நமக்கு சும்மா எல்லாம் அறச்சீற்றம் வராது. அது அதற்கென்று ஒரு சீசன் உண்டு. ஆண்டு துவங்கியதும் (ஆங்கில ஆண்டே தான்!) இந்த பட்டியலில் சில வருடங்களுக்கு முன்னால் சேர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு சீற்றத்துடன் சீசன்கள் […]

சூழல் மாசு குறித்த கவிதைகள் சில

This entry is part 8 of 20 in the series 4 செப்டம்பர் 2016

  ரிஷி   1.   ”கடற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்” போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர் சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி இவைபோல் இன்னுமின்னும் ஏராளமாய் என்று கூவிக்கொண்டே போனார்கள். அவர்களுடைய கைகளில் அசைவின்றி உறைந்திருந்த அந்தக் கட்டெறும்புகளைப் பார்த்ததும் கடற்கரையில் தஞ்சமடைந்திருந்த சிலருக்குச் சட்டெனக் கேட்கத் தோன்றுகிறது: ”சிறிதும் தாமதியாமல் அவற்றைக் கண்காட்சிப்படுத்த பிரமாதமா யோர்  காகித மலரைத் தயாரித்துத்  தரலாமே கிளிஞ்சல்களைப் பொட்டலம் கட்டி யெடுத்துச் செல்லவாவது பயன்படும்”.     2. சிறிதும் மனசாட்சியின்றி மரங்களை […]

கவிஞர் அம்பித்தாத்தா

This entry is part 5 of 20 in the series 4 செப்டம்பர் 2016

 முருகபூபதி – அவுஸ்திரேலியா  ” ஓடிடும்  தமிழா  ஒரு கணம்  நின்று  பார் “ புகலிடத்தமிழ்க்குழந்தைகளுக்கு  கவிஞர்  அம்பித்தாத்தா  வழங்கும்  கொஞ்சும்தமிழ் ஓடிடும்   தமிழருக்கு  அறைகூவல்  விடுக்கும்  மூத்த கவிஞர்                                                           (குவின்ஸ்லாந்து –  கோல்ட்கோஸ்டில்  நடந்த  அவுஸ்திரேலியா  தமிழ்  எழுத்தாளர்  விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட   உரை)     ஓடிடும்  தமிழா  நில்,  நீ  ஒரு  கணம்  மனதைத்தட்டு  வீடு நின்னூருள்  சொந்தம்,  விளைநிலம்  நாடு  விட்டாய் தேடியதெல்லாம்   விட்டுத்திசைபல  செல்லும்  வேளை  பாடிய   தமிழை  […]

குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1

This entry is part 12 of 20 in the series 4 செப்டம்பர் 2016

(தாரமங்கலம் வளவன் எழுதிய குறுநாவல் நான்கு பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகள் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளன. நான்காவது இறுதிப் பகுதி சில நிர்வாகக் காரணங்களால் விடுபட்ட்து குறித்து வருந்துகிறோம். நான்கு பகுதிகளையும் இந்த வாரம் தொடராக அளித்துள்ளோம். ஆசிரியருக்கு எங்கள் நன்றி.) 1 தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.   தங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது என்றும், தங்கள் அரண்மனையில் புதிதாய் நகைப் பெட்டி […]