ஷைன்சன் எனது குரல் எதுவென்று மறந்து போயிற்று எனக்கு. என் குரலில் தான் பேசிக் கொண்டிருக்கிறேனா, இல்லையென்றால் வேறு யாருடைய குரலிலாவது பேசிக் கொண்டிருக்கிறேனா என்ற சந்தேகம் வெகுநாட்களாக இருக்கிறது. அதிலும் நேற்று அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு, “உங்கிட்ட எனக்குப் பிடிச்சது உன் குரல் தான்” என்ற போது பயம் மனதில் பீறிட்டுக் கிளம்பியது. ஒரு வேளை இந்தக் குரல் என்னுடையதாக இல்லாவிட்டால்? கல்லூரியில் குரல்வித்தை, அதுதான் மிமிக்ரி செய்ய ஆரம்பித்தேன். […]
நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 21வது இதழ் வெளியாகிவிட்டது. பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதி, மற்றும் 16ஆம் தேதிகளில் பேசாமொழி இதழ் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பேசாமொழி இதழை முழுக்க முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்கலாம். பேசாமொழி இதழ் அச்சில் வெளிவரவில்லை. இணையத்தில் மட்டுமே படிக்க முடியும். பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_21.html பேசாமொழி இந்த இதழில்: ————————————————- 1. ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ‘மியூனிக்’ […]
ராவுத்தர் வீட்டில் சுப்பனுக்கும் செல்லிக்கும் தனிஉரிமை உண்டு. ராவுத்தர் அறையில் இருக்கும் சுருட்டுச்சாம்பல் டப்பாவைத் தட்டி சுத்தம் செய்வதுமுதல் ராவுத்தரின் வேட்டி சட்டைகளை வண்ணானுக்குப் போடுவதுவரை எல்லாமே செல்லிதான். ராவுத்தர் அறையில் இருக்கும் அந்த தாத்தா கடிகாரத்தை யாரும் அவ்வளவு எளிதாகத் தொட்டுவிடமுடியாது. அதற்கு வாரம் ஒரு முறை சாவி கொடுப்பது சுப்பன்தான். வடிவேலுவின் முதல் படத்தில் வடிவேலுவைப் பார்த்திருக்கிறீர்களா? அச்சுஅசலாய் அதுதான் சுப்பன். கரையில்லாத நாலுமுழக் காடாவேட்டி. இடுப்பில் கால்கவுளி வெற்றிலை, நிஜாம்லேடி புகையிலைப் […]
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த பாதைப் பாட்டு -3) விரியும் அண்டம் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா விரிந்து கொண்டு போகுது அண்டம் வலப்புறமும், இடப்புறமும் உயிர்ப்புடன் உள்ளது முழுத் தோற்றம், ஓவ்வோர் அங்கமும் அதன் உன்னத ஒளியுடன் ! தாவிப் பாயுது இசைமயம் ஏற்புடைத் தளங்களில் ! தடைப் படுகிறது விரும்பப் படாத இடங்களில் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fJqpNudIss4 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QzIbpwcm0pk http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TdzLf0DpRUY http://i.dailymail.co.uk/i/pix/2014/07/19/video-undefined-1FCA552600000578-535_636x358.jpg ஓயாது விரியும் பிரபஞ்சத்தின் மாய வயிற்றுக் குள்ளே ஓராயிரங் கோடி ஒளி மந்தை, கருஞ்சக்தி, கருந்துளை ! பிரபஞ்சம் ஒன்றில்லை ! ஒன்றின் தொப்புள் கொடியில் ஒட்டி, வெடித்து விரிந்து செல்லும் பல்லடுக்கு அகிலங்கள் ! சோப்புக் குமிழிப் பிரபஞ்சங்கள் ! எல்லை யற்ற இணைப் பிரபஞ்சங்கள் ! பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? திறந்த காலவெளியா கோள வெளியா ? […]
சாலையில் விழுந்து கிடக்கும் குடிமகன்களைக் காணும் போதெல்லாம் என் மனம் பதை பதைக்கிறது. எந்த தாய்மாரின் தலைமகன்களோ, வாந்தி பண்ணும் போது கருவிற்கு நோகக் கூடாதென்று அடிவயிற்றைப் பிடித்திருப்பாள். சளி காய்ச்சலுக்கும் தாங்காமல் பத்தியம் என்று பட்டினி கிடந்திருப்பாள். குலம் விளங்க குலக்கொழுந்திற்காய் கோயில் வலம் வந்திருப்பாள். குடி போதையில் தரையில் விழுந்து புரளும் இவனைக் கண்டால் எப்படி தவித்துப் போய்த் துடிப்பாள் ? குடிப்பழக்கம் ஏழையர் குடியைக் கெடுக்குது. வரிப்பணத்தை வாரிக் குவிக்கும் அரசாங்கத்துக்கு […]