டாக்டர் ஜி. ஜான்சன் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகளுக்கு உடற்கூற்றியல் ( ANATOMY ) பாடம் ஆரம்பமாகும். இதை இரண்டு வருடங்கள் கற்றாக வேண்டும். GRAY’S ANATOMY என்ற பெயர் கொண்ட கணமான நூலை மாணவர்கள் நெஞ்சோடு அனைத்து வகுப்புக்குத் தூக்கிச் செல்வார். அது சாதாரணமே. ஆனால் அவர்களின் அறைகளில் ஒரு கருப்புப் பெட்டியும் இருக்கும். அதை BLACK BOX என்றே அழைப்பதுண்டு . அதனுள் ஒரு மனிதனின் எலும்புக்கூட்டின் அத்தனை எலும்புகளும் […]
எஸ். சிவகுமார் தங்கராசு அழுதுகொண்டே இருந்தான். அன்னம்மா அதட்டிப் பார்த்தாள்; அடித்துப் பார்த்தாள்; எதுவும் பயனில்லை. அன்னம்மாவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவமாக இன்னும் இரண்டு வாரமாகும் என்று மருத்துவர் சொல்லியிருந்தாலும், இப்பவே அதை இறக்கி வைத்துவிட வேண்டும் என்று அவள் துடித்தாள். அன்னம்மா ஆறு வீடுகளில் வீடு கூட்டி மெழுகி, பாத்திரம் தேய்த்துக் கொடுத்து வேலை செய்து வருகிறாள். மகன் தங்கராசுவுக்கு இப்போது வயது மூன்று. அடுத்த வாரிசு […]
என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்) கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான […]
சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்முக நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. ஓர் எழுத்தாளரைத் தொலைக் காட்சி பேட்டி கண்ட நிகழ்ச்சி அது. அந்த எழுத்தாளர் துளியும் ஆணவமே இல்லாதவர். எனினும் தம் சாதனைகள் சிலவற்றை நோக்கர்களுக்கு ஒரு தகவல் போல் செருக்கே இல்லாத தொனியில் சற்றே கூச்சத்துடன் தெரிவித்தார். தம் சாதனைகளை அவர் பகிர்ந்துகொண்ட விதம் பாராட்டும்படி இருந்தது. அந்த “இனிய” எழுத்தாளருக்கு உடனே ஒரு பாராட்டுக் கடிதம் எழ்தி யனுப்பினேன்.. ’நாம் […]