ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை

This entry is part 17 of 28 in the series 22 மார்ச் 2015

 

[A Man’s Requirements]

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

என்னை இனிமை யாய் நேசி

உன்னால் இயன்ற மட்டும்;

உன் உணர்வில், உன் சிந்தனையில்,

ஒரு பார்வையில் நேசி.

என்னுடல் எளிய உறுப்பை நேசி

என் முழுத் தோற்றத்தை நேசி.

 

உன் திறந்த மனத்து இளமையில் நேசி

பணிவுடன் வெளிப்படை யாய்;

வாய் மூலம் வாக்களித்து,

மௌனப் பரிவுடன் என்னை நேசி.

 

நேர்மைக் கொடைக் கெனத் தோன்றிய

நீல வண்ணக் கண்களால் நேசி.

வானத்தின் நிறத்தை வைத்துக் கொண்டதால்

சொர்க்கத்தின் நியதி தேவைப் படுமா ?

 

தெய்வீக இமைகளால் என்னை நேசி,

மூடும் பனிபோல், முதல் சந்திப்பில்

உன் இதயத்தால் நேசி என்னை;

துடிப்புகளை மற்றவர் கேட்க வேண்டும்.

 

கரங்கள் நீட்டி உரிமையாய் நேசி,

திறந்த மனத்துடன்;

திரியும் கால்களோடு என்னை நேசி

செவியில் பின் வருவதைக் கேட்டு  !

 

[தொடரும்]

 

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/

​++++++++++++++​

Series Navigationயாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)உளவும் தொழிலும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *